அமெரிக்க டாலருக்கு அடித்த ரஷ்யா..
26 Dec,2024
உலகத்தை பிடித்து ஆட்டும் பேய் பணம் என்று சொல்லப்பட்டால், மிகவும் கொடூரமான பேயாக அமெரிக்க கரன்சியான டாலர் இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டாலருக்கு எதிரான வர்த்தகத்தை ரஷ்யா மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறது. குறிப்பாக காமன்வெல்த் நாடுகளுக்கிடையே அந்தந்த நாடுகளின் சொந்த கரன்சியில் ரஷ்யா வர்த்தகத்தை செய்து காட்டியிருக்கிறது. ரஷ்யா செய்தது என்ன?: அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்குமான பகை அனைவரும் அறிந்ததுதான். எனவே டாலருக்கு மாற்றாக அந்தந்த நாடுகளின் சொந்த கரன்சியை பயன்படுத்தி எங்களிடம் வர்த்தகம் செய்யலாம் என அறிவித்தது. இந்த வேலையை காமன்வெல்த் நாடுகளிடமிருந்து ரஷ்யா தொடங்கியது. அதாவது Also Read "" ஆர்மீனியா அஜர்பைஜான் பெலாரஸ் கஜகஸ்தான் கிர்கிஸ்தான் மோல்டாவியா தஜிகிஸ்தான் உஸ்பெகிஸ்தான் ஆகியவைதான் காமன்வெல்த் நாடுகள். இந்த நாடுகளுக்கு ரஷ்யா பல பொருட்களை விற்கிறது. மிக குறிப்பாக பெட்ரோலிய பொருட்களுக்கு ஆதாரமாக விளங்கும் கச்சா எண்ணெய்யை விற்கிறது.
இந்த விற்பனையை அந்தந்த சொந்த நாடுகளின் கரன்சியில் ரஷ்யா செய்தது. உதாரணமாக ஆர்மீனியாவின் கரன்சி 'டிராம்', அஜர்பைஜானின் கரன்சி 'மனாட்', பெலாரஸின் கரன்சி 'பெலாரஷ்யன் ரூபிள்', கஜகஸ்தானின் கரன்சி 'டெங்கே', கிர்கிஸ்தானின் கரன்சி 'சோம்', மால்டோவாவின் கரன்சி 'மால்டோவன் லியூ', தஜிகிஸ்தானின் கரன்சி 'சோமோனி', உஸ்பெகிஸ்தானின் கரன்சி 'உஸ்பெக் சோம்' ஆக இருக்கிறது. இந்த கரன்சியை வாங்கிக்கொண்டு ரஷ்யா பெட்ரோலை சப்ளை செய்கிறது. இதன் மூலம் அமெரிக்காவின் டாலர் ஆதிக்கம் 85% வரை குறைக்கப்பட்டிருக்கிறது. இதனை ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் வர்த்தகம் செய்கின்றன. இந்த வர்த்தகத்தை தங்களது சொந்த பணத்தில்தான் செய்ய வேண்டும் என்று அந்த நாடுகளுக்கு விருப்பம். ஆனால், வர்த்தகத்தில் ராஜாவாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் அமெரிக்க டாலரில்தான் வர்த்தகத்தை செய்கின்றன. எனவே டாலர் இந்தியா உட்பட ஒவ்வொரு நாடுகளுக்கும் இன்றியமையாததாக மாறியிருக்கிறது. ஒருவேளை டாலர் இல்லையெனில், அந்த நாடுகளில் பொருளாதார சரிவு ஏற்பட்டுவிடுகிறது.
டாலருக்கு மாற்று ஏன்?: டாலர் கையிருப்பு இல்லையெனில் அந்த நாடுகளால் பெட்ரோலையோ, நிலக்கரியையோ வாங்க முடியாது. அதே நேரம் டாலரை குறிப்பிட்ட அளவுக்கு கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனில் அதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். இது ஒவ்வொரு நாட்டிற்கும் நஷ்டம்தான் எனவே டாலருக்கு மாற்றான கரன்சியை உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. சொந்த கரன்சி அல்லது டாலருக்கு எதிரான பொதுவான கரன்சியை பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார செயற்கையான சரிவுகளை உலக நாடுகள் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது.
ரஷ்யாவின் வெற்றி: சொந்த கரன்சி மூலம் 85% வர்த்தகத்தை காமன்வெல்த் நாடுகளிடம் ரஷ்யா மேற்கொண்டிருப்பதால் அமெரிக்க டாலருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் டாலர் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை என்றாவும் கூட, இந்த சிறிய வர்த்தக வெற்றி, சொந்த கரன்சி வர்த்தகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவும் கூட டாலர் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.