மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி - 10 இளைஞர்கள் செய்த செயல்!
07 Dec,2024
மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி
சென்னை அயனாவரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் லேசான மனநலம் பாதிக்கப்பட்ட தன்மையுடன் வாழ்ந்து வருகிறார். அண்மையில் இவருக்கு ஸ்னாப்ஷாட் எனப்படும் சோஷியல் மீடியா மூலம் சில இளைஞர்கள் அறிமுகமாகியுள்ளனர்.
இவர்களுடன் தொடர்ந்து பேசி வந்த அந்த இளம்பெண் அந்த இளைஞர்களை நண்பர்களாக பழக தொடங்கியுள்ளார். இவர்களுடன் தொடர்ந்து பேசி வந்த சில நாட்களிலேயே நேரில் வந்து சந்திக்குமாறு அவர்கள் அழைத்துள்ளனர்.
இதை நம்பி சென்ற மாணவி 10க்கும் மேற்பட்ட இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுகளாக இந்த இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
தனக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை பெற்றோரிடத்தில் மாணவி கூறவே அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகரின் அடிப்படையில், விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.
முதல்கட்டமாக ஸ்னாப்ஷாட் மூலம் பழகியவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவாரகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவியின் அலைபேசி உரையாடலை ஆய்வு செய்தபோது,
பலரும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும் தொல்லை கொடுத்தது அம்பலமானது. எனினும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அயனாவரத்தில் இது முதல் முறையல்ல, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.