இந்த 4 மாதங்களில் பிறந்த ஆண்கள் உலகின் சிறந்த கணவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் ?
02 Dec,2024
திருமண வாழ்க்கை அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யும் முன் அவர்களின் தோற்றம், பொருளாதார நிலை, பழகும் விதம் போன்றவற்றை கவனிக்க வேண்டும். இந்திய திருமணங்களில் கூடுதலாக அவர்களின் ஜாதகமும் கவனிக்கப்படுகிறது. ஆனால் மற்றொரு விஷத்தை அவசியம் கவனிக்க வேண்டும். அதுதான் ஒருவரின் பிறந்த மாதம். ஜோதிட சாஸ்திரம் மற்றும் சைக்கலாஜிக்கல் கணிப்புகளின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் சிறந்த கணவராக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் தங்கள் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றவும், அவர்களை பாதுகாக்கவும் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் உலகின் சிறந்த கணவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஏப்ரல் இந்த பட்டியலில் ஏப்ரல் மாதத்தில் பிறந்த ஆண்கள் முதலிடம் பிடிக்கின்றனர். இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் வீட்டில் நல்லிணக்கத்தை வளர்க்க சமைப்பது, வீட்டைசுத்தம் செய்வது மற்றும் அனைத்து வேலைகளிலும் உதவியை வழங்குவார்கள். இவர்கள் தங்கள் நல்ல கணவராக இருப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட பிறகே உறவில் ஈடுபடத் தயாராகிறார்கள், உண்மையில் இதுதான் சரியான அணுகுமுறையும் கூட. இவர்களின் அன்புக்குரியவர்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள். இவர்கள் திருமணத்தை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார்கள் மற்றும் தங்கள் திருமணம் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டுமென்று திட்டமிடுகிறார்கள். எனவே தங்களின் மனைவியை கண் போல காப்பார்கள்.
ஆகஸ்ட் கன்னி ராசி ஆண்கள் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் அனைத்து உறவுகளுக்கும் விசுவாசமாக இருப்பார்கள், குறிப்பாக திருமண உறவில். நம்பிக்கை என்பது திருமணத்தில் அவர்கள் மிகவும் மதிக்கும் ஒன்று. இவர்களின் மனைவி நம்பகமானவராக இருந்தால் அர்ப்பணிப்புடனும், மரியாதையுடனும் அவர்களுக்கு எதையும் செய்யக்கூடியவர்கள் இவர்கள்.
கன்னி ராசி ஆண்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தை விரும்புகிறார்கள். இவர்களிடம் இயல்பாகவே திருமணத்தை பாதிக்கும் பொறாமை மற்றும் பொஸசிவ் போன்ற எதிர்மறை குணங்கள் இருப்பதில்லை. இவர்களின் மனைவியின் அன்புக்கும், இலட்சியத்திற்கும் மதிப்பு கொடுத்து எப்போதும் அன்பான கணவராக இருப்பார்கள். நவம்பர் வாழ்வின் அனைத்து சூழ்நிலையிலும் சமநிலையைக் கடைபிடிக்கும் நவம்பர் மாதத்தில் பிறந்த ஆண்கள் இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளனர். இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் எப்போதும் உறவுகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள சரியான நபரை எதிர்பார்த்து எப்போதும் காத்திருக்கிறார்கள்.
திருமண வாழ்க்கைப் பற்றி பல கனவில் இருக்கும் இவர்கள் தன்னை நேசிக்கும் ஒரு பெண்ணை மிகவும் மதிக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவியை அழகாகவும், சக்திவாய்ந்தவராகவும் உணர வைப்பதை இலட்சியமாகக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் இவர்களின் மனைவிகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஜூன் ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுக்கு அனைத்தையும் விட அவர்களின் குடும்பமே முக்கியமானது. அதனால்தான் அவர்கள் சிறந்த கணவர்களில் ஒருவராக இருக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தின் மீது கவனம், பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். திருமணத்தில் அவர்கள் இரக்கமும், விசுவாசமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
தங்கள் மனைவி தங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். அடிப்படையில் அவர்களின் உலகம் அவர்களின் மனைவியைச் சுற்றியே சுழலுகிறது. எனவே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதையே தங்களின் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன உத்தரவாதம் இல்லை.