இந்த ஏற்பாடு முறையான திருமணம் கிடையாது. ஒரு தற்காலிக ஒப்பந்தம் போன்றது. இந்த பந்தம் சில நாட்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் பெண்கள் இந்த வகையான வேலைக்கு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இங்கு சுற்றுலா வருபவர்களுக்கு இளம்பெண்கள் வாடகை மனைவிகளாக மாறுகிறார்கள். எங்கு? மற்றும் அதற்கான காரணம் என்னவென்று இங்கே பார்க்கலாம்.
தாய்லாந்து ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். தாய்லாந்தில் வாடகை மனைவிகளின் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில், இதைப் பற்றிய ஒரு புத்தகம் வெளியாகி விவாதத்திற்குள்ளானது. இந்த சர்ச்சைக்குரிய நடைமுறை தாய்லாந்தின் பட்டாயாவில் உள்ளது. இங்குள்ள மக்கள் இதை “wife for hire” என்று அழைக்கின்றனர். இது ஒரு தற்காலிக திருமண ஏற்பாடாகும். அங்கு பெரும்பாலும் ஏழை கிராமப்புறங்களில் இருந்து வரும் பெண்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் துணையாக மாறுகிறார்கள். இந்த நடைமுறை முக்கியமாக தாய்லாந்தின் பட்டாயாவின் red-light மாவட்டத்தில் உள்ள பார்கள் மற்றும் இரவு விடுதிகளில் நிகழ்கிறது.
இது தாய்லாந்தில் ஒரு வணிகமாக பரவி வருகிறது. சமீபத்தில் இது குறித்து ஒரு புத்தகம் வெளிவந்துள்ளது. அதன் ஆசிரியர் லாவர்ட் ஏ.இம்மானுவேல். புத்தகத்தின் பெயர் Thai Taboo-The Rise
ஆகும். இதில், தாய்லாந்தில் மனைவியை வாடகைக்கு எடுக்கும் சர்ச்சைக்குரிய மற்றும் மறைக்கப்பட்ட நடைமுறை இப்போது மீண்டும் எப்படி அதிகரித்து வருகிறது என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது. இந்த வணிகம் தாய்லாந்தின் முக்கிய வருமான ஆதாரமாக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக பாரம்பரிய வேலைகளில் இருந்து நல்ல பணம் சம்பாதிக்க முடியாத இளைஞர்களுக்கு இது உதவுகிறது. அவர்கள் “வாடகை மனைவி” அல்லது “வாடகை காதலி” போன்ற சேவைகள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்க முடியும். தாய்லாந்தில் “வாடகை மனைவிகள்” என்ற கருத்து சர்ச்சைக்குரிய நடைமுறையாக இருந்தாலும் , பெண்கள் மனைவிகளைப் போலவே வாழ்கிறார்கள் மற்றும் சேவை செய்கிறார்கள். பொருளாதாரத்தில் ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் பெண்கள் பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனைவிகளை போல வாழத் தொடங்குகிறார்கள். இந்த ஏற்பாடு முறையான திருமணம் கிடையாது. ஒரு தற்காலிக ஒப்பந்தம் போன்றது. இந்த பந்தம் சில நாட்கள் முதல் பல மாதங்கள் வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் பெண்கள் இந்த வகையான வேலைக்கு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கு நேரம் நிர்ணயிக்கப்படவில்லை. அது ஒப்பந்தத்தை பொறுத்தது. இதில் கிடைக்கும் பணம், அழகு, கல்வி, வயது போன்ற விஷயங்களில் தங்கியுள்ளது. சில சமயங்களில், காலப்போக்கில் உறவுகள் உருவாகும்போது, சில பெண்கள் தங்கள் வாடிக்கையாளர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. படிப்படியாக, தாய்லாந்தில் வாடகை மனைவி கலாச்சாரம் வணிகமாக உருவெடுத்துள்ளது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பட்டாயா மற்றும் தாய்லாந்தின் பிற நகரங்களுக்கு வந்து, பார்கள், உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற இடங்களில் இந்த பெண்களை நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள். இரு தரப்பிலிருந்தும் ஆர்வம் காட்டப்பட்டால், பங்குதாரரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி பேசப்படுவதாக தெரிகிறது.
தாய்லாந்தில் இது தொடர்பாக எந்த சட்டமும் இல்லை. அதாவது இந்த அமைப்புகளை நிர்வகிக்கும் முறையான பாதுகாப்புகள் அல்லது விதிகள் எதுவும் இல்லை. தாய்லாந்து நாட்டில் இதுபோன்ற நடைமுறை நடந்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த எந்த சட்டமும் இல்லை என்பதையும் தாய்லாந்து அரசு ஒப்புக் கொண்டுள்ளது. “வாடகை காதலி” அல்லது “வாடகை மனைவி” போன்ற கருத்துக்கள் சமீபத்திய ஆண்டுகளில் தாய்லாந்தில் பிரபலமாகி வருகின்றன. இந்த போக்கு முக்கியமாக ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளால் ஈர்க்கப்பட்டுள்ளது. அங்கு இதுபோன்ற சேவைகள் ஏற்கனவே பிரபலமாக உள்ளன. இப்போது தாய்லாந்தில் இந்த வணிகத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் பல சமூக மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன. தாய்லாந்திலும், நகரமயமாக்கல் மற்றும் வேகமான வாழ்க்கை முறை மக்களிடையே தனிமையை அதிகரித்துள்ளது. பல மக்கள் தங்கள் பிஸியான வாழ்க்கை காரணமாக நீண்ட கால உறவுகளுக்கு நேரத்தை செலவழிக்க முடியவில்லை. இந்த காரணத்திற்காக அவர்கள் தற்காலிக பங்குதாரர் விருப்பத்தை தேர்வு செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.