உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிகள் செய்து வருகிறது. இதற்கிடையே தான் ரஷ்யாவின் ஒரெஷ்னிக் என்ற பெயர் கொண்ட ஏவுகணையால் அமெரிக்காவின் 9 ராணுவ தளங்களை தரைமட்டமாக்க முடியும் என்ற தகவல் வெளியாகி இருப்பது அமெரிக்காவின் தூக்கத்தை கெடுத்துள்ளது. வெறும் 25 நிமிடங்களில் இந்த ஏவுகணையால் அமெரிக்காவின் 9 ராணுவ தளங்களை தாக்க முடியுமாம். இது தான் அமெரிக்காவுக்கு தற்போது பெரும் சவாலாக மாறி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த 2022ம்
ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போர் நடவடிக்கை என்பது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால் 3வது ஆண்டை நிறைவு செய்யும். இந்தியா உள்பட பல உலகநாடுகள் தலையிட்டும் இந்த போரை இன்னும் முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இந்த போரால் உக்ரைன் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உக்ரைனின் பதிலடி தாக்குதலால் ரஷ்யாவுக்கும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் உக்ரைனை விடாமல் தாக்க அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் போர் என்பது முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வென்ற நிலையில் இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தான் அமெரிக்க அதிபர் ஆனதும் போரை 24 மணிநேரத்தில் நிறுத்துவேன் என்று டிரம்ப் கூறியது தான் இதற்கு காரணம். அதேபோல் தேர்தலில் அவர் வென்ற பிறகும் நிலைமை மாறியது. டிரம்புக்கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூட டொனால்ட் டிரம்பால் விரைவில் போர் நிறுத்தப்பட உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். Powered By ஆனால் தற்போது நிலையை தலைகீழாக மாறிவிட்டது. ரஷ்யா -
உக்ரைன் இடையே கடும் மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் தான் காரணம். ரஷ்யாவை சமாளிக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் உக்ரைனுக்கு உதவி வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் சார்பில் உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு ஜோபைடன் அனுமதி வழங்கினார். இதையடுத்து ரஷ்யா மீது உக்ரைனும் அந்த ஏவுகணைகளை பயன்டுத்தி தாக்குதல் நடத்தி உள்ளது.
மோசமானவங்களாச்சே இதனால் கோபமடைந்த ரஷ்ய அதிபர் புதின் பதில் தாக்குதல் நடத்தினார். குறிப்பாக உக்ரைனில் உள்ள டினிப்ரோ நகரின் மீது நேற்று முன்தினம் ரஷ்யா புதிய வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையின் பெயர் Oreshnik. இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாகும். தற்போது இந்த ஏவுகணை சோதனையை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் தான் அமெரிக்காவின் தூக்கம் கலைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்த ஒரெஷ்னிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மட்டுமின்றி அமெரிக்காவின் விமானப்படை தளங்களையும் ரஷ்யா குறிவைக்கலாம் என்பது தான். அதாவது இந்த ஒரெஷ்னிக் ஏவுகணை ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும். அதாவது மாக் 10 என இது அழைக்கப்படுகிறது. உக்ரைனின் நாட்டின் ராணுவம் தரப்பில் இந்த ஏவுகணை பற்றி கூறும்போது, ‛‛ஒரெஷ்னிக் ஏவுகணை என்பது மாக் 10 வேகத்தில் (மணிக்கு 12,300 கிலோமீட்டர் வேகம்) செல்லும். அதாவது வினாடிக்கு 3.40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாக் 10 வேகத்தில் ஏவுகணை செல்வதால் அதனை இடைமறித்து தாக்குவது என்பது கடினமானதாகும். அதுமட்டுமின்றி இந்த ஏவுகணையால் அதிகபட்சம் 5 ஆயிரம் கிலோமீட்டர்(3,100 மைல்) ரேஞ்ச் வரை தாக்குதல் நடத்த முடியும். அப்படி பார்த்தால் இந்த ஏவுகணையை பயன்படுத்தி ரஷ்யா, ஐரோப்பாவின் பெரும்பான்மையான இடங்கள் மட்டுமின்றி அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியிலும் தாக்குதல் நடத்த முடியும். அதுமட்டுமின்றி அமெரிக்கா மட்டுமின்றி பிற நாடுகளில் உள்ள அமெரிக்காவிவின் 9 பாதுகாப்பு படை தளங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளை இந்த ஏவுகணையால் குறிவைத்து தாக்கி அழிக்க முடியும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் 2,100 கிலோமீட்டர் தொலைவில் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்தை இந்த ஏவுகணையால் 11 நிமிடத்தில் தாக்க முடியும்.
அதேபோல் 2,500 கிலோமீட்டர் தொலைவில் பக்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தளம் மற்றும் 2,400 கிலோமீட்டர் தொலைவில் அலஸ்காவில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்தையும் 12 நிமிடத்திலும், 2,650 கிலோமீட்டர் தொலைவி்ல கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தை 13 நிமிடத்திலும், 5,100 கிலோமீட்டர் தொலைவில் அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் நாவல் மற்றும் விமானபடை தளத்தை 25 நிமிடத்தில் அழிக்க முடியும். இதுபற்றி ரஷ்யாவின் ராணுவ எக்ஸ்பர்ட் அனடோலி மாத்விசுக் கூறுகையில் ,‛‛இந்த ஏவுகணை அணுஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது''
என கூறியுள்ளார். இதன்மூலம் ஒரெஷ்னிக் ஏவுகணையால் அணு ஆயுத தாக்குதலையும் மேற்கொள்ள முடியும் ஒரு ஏவுகணையில் 6 வெடிப்பொருள் அல்லது அணு ஆயுதம் நிரப்பும் warheads இருக்கும்'' என கூறியுள்ளார். Advertisement இதன்மூலம் ஒரு ஏவுகணை மூலம் 6 டார்க்கெட்டுகளை குறிவைத்து அழிக்க முடியும். இதுதான் அமெரிக்காவின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இருப்பினும் தற்போது வரை ஒரெஷ்னிக் ஏவுகணை மூலம் அமெரிக்காவை தாக்குவது பற்றி ரஷ்யா தரப்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது சற்று நிம்மதியான தகவலாகும்.