டிசம்பர் மாத முதல் வாரத்தில் வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் விருச்சிக ராசியில் இருக்கிறார். செவ்வாய் கடக ராசியில இருக்கிறார். புதன் விருச்சிக ராசியில் நிற்கிறார். 26 ஆம் தேதி புதன் வக்ரகதி அடைகிறார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனுசு ராசியில் நிற்கிறார். டிசம்பர் 2 ஆம் தேதி மகரத்திற்கு செல்கிறார். சனி பகவான் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். மீனத்தில் ராகு... கன்னியில் கேது... என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் மற்ற கிரகங்களில் மாற்றம் இல்லை. சந்திரன் இந்த வாரம் துலாம் விருச்சிகம் தனுசு மகரம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். மீனம் மேஷம் ரிஷபம் மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.'
டிசம்பர் மாத முதல் வாரத்தில் வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் விருச்சிக ராசியில் இருக்கிறார். செவ்வாய் கடக ராசியில இருக்கிறார். புதன் விருச்சிக ராசியில் நிற்கிறார். 26 ஆம் தேதி புதன் வக்ரகதி அடைகிறார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் தனுசு ராசியில் நிற்கிறார். டிசம்பர் 2 ஆம் தேதி மகரத்திற்கு செல்கிறார். சனி பகவான் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். மீனத்தில் ராகு... கன்னியில் கேது...
என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் மற்ற கிரகங்களில் மாற்றம் இல்லை. சந்திரன் இந்த வாரம் துலாம் விருச்சிகம் தனுசு மகரம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். மீனம் மேஷம் ரிஷபம் மிதுனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சூரியன் - விருச்சிக ராசி செவ்வாய் - கடக ராசி புதன் - விருச்சிக ராசி குரு - ரிஷப ராசி சுக்கிரன் - தனுசு - மகர ராசி சனி - கும்ப ராசி ராகு - மீன ராசி கேது - கன்னி ராசிசூரியன் - விருச்சிக ராசி செவ்வாய் - கடக ராசி புதன் - விருச்சிக ராசி குரு - ரிஷப ராசி சுக்கிரன் - தனுசு - மகர ராசி சனி - கும்ப ராசி ராகு - மீன ராசி கேது - கன்னி ராசி
மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரத்தை மிக நேர்த்தியாக செய்ய வேண்டும். அலட்சியம் கூடாது. பண விரயம் ஏற்படலாம். வீட்டில் உள்ள பெண்கள் ஏதாவது செலவு வைத்துக் கொண்டே இருப்பார்கள். சந்திக்க வேண்டிய நபரை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியூர் பயணத்தை மேற்கொள்ளுங்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சிகள் சில நன்மைகளை கொண்டு வரும். தொழிலுக்கு தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீர்கள். சிறு வியாபாரிகள் சீரான லாபம் பெறுவார்கள். செவ்வாய் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். உடலை வேதனைப்படுத்திய சின்னச்சின்ன நோய் தொந்தரவுகள் அகலும். மணல், செங்கல் வியாபாரிகள் சிறப்பான லாபத்தை பெறுவார்கள். விரோதிகளின் சூழ்ச்சிகளை துடைத்து தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். புதன் 8 ஆம் ராசியில் சஞ்சரிக்கிறார். மருந்து வர்த்தகர்கள், மருத்துவர்கள் அதிக பலனை அடைவார்கள். முன்கோபத்தை விலக்குவது நல்லது. அதனால் நல்ல நட்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தக்க சமயத்தில் உறவினர்கள் உதவிகரமாக நிற்பார்கள். குரு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். மேலதிகாரிகளின் அன்பை பெறுவது கடினம். ஆன்லைன் வர்த்தகங்களில் கவனமாக ஈடுபடுங்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். சுக்கிரன் 9,10 ஆம் இடத்தில் இருக்கிறார். பார்ட்னர்கள் பக்குவமாக நடந்து லாபத்தை அதிகரிப்பார்கள். சிலருக்கு வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். அதை நழுவ விடாதீர்கள். சனி 11 ஆம் வீட்டில் இருக்கிறார். வீடு மனை இடம் வாங்கி விற்கும் வியாபாரிகளுக்கு இது பொற்காலம். அமோகமான லாபம் பார்ப்பார்கள். ராகு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். கேது 6 ஆம் இடத்தில் இருக்கிறார். கூட இருந்தே குழிபறிக்கும் எதிரிகளை வீழ்த்துவீர்கள். 30,1,2 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
ரிஷபம் கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.... சூரிய பகவான் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். எந்தத் தொழிலாக இருந்தாலும் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்ப்புகள் வரட்டுமே... அது உங்களை ஒன்றும் செய்யாது. விரோதிகள் கூட வீடு வரை வந்து உதவி செய்வார்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சிகள் வியாபாரத்திற்கு மிகுந்த உதவியாக இருக்கும். சின்னப் பிரச்சனையை கூட பெரிதாக எண்ணி கவலைப்படுவீர்கள். அதனால் தூக்கம் கெடும். தைரியமாக எந்த செயலில் ஈடுபடுங்கள். செவ்வாய் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். பயணங்களின் போது பொருட்களை பத்திரமாக வைத்திருங்கள். ஆன்லைன் வர்த்தகங்களால் அதிக நன்மை கிடைக்கும். அரசாங்க ஊழியர்கள் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவீர்கள். புதன் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். சிறு வியாபாரிகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறுவார்கள். ஜவுளிக்கடை அமோகமாக நடக்கும். குரு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். பெரியோர்களின் ஆதரவால் சில நல்ல காரியங்கள் நடக்கும். அரசாங்க ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வழக்கறிஞர்கள் வாதத் திறமையால் வெற்றி பெறுவார்கள். சுக்கிரன் 8,9 வீட்டில் இருக்கிறார் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து போவது நல்லது. சனி 10 ஆம் வீட்டில் இருக்கிறார். சிறிய நோய் தாக்கம் இருந்தால் கூட அலட்சியப்படுத்தாதீர்கள். முறையாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். ராகு 11ஆம் இடத்தில் இருக்கிறார். வரவுக்கு மேல் செலவு வந்து வாட்டி எடுக்கும். குடும்பத்தில் பொறுமை அவசியம். எந்த காரணத்தை கொண்டும் மனைவியை குத்தி காண்பிக்காதீர்கள். கேது 5 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் துணிந்து முதலீடு செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் மூலமாக வியாபாரத்துக்கு தேவையான ஆர்டர்களை பெறுவீர்கள். 3,4 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
மிதுனம் எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தை தாமதம் இன்றி கட்டுவது நல்லது. வேலை காரணமாக அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வீட்டில் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம். சந்திரனின் சஞ்சாரம் ஏற்ற இறக்கமான பலன்களைத் தரும். கமிஷன் வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். செவ்வாய் 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். இரும்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்கள். புதிதாக அறிமுகமான பெண்களின் பழக்கங்களை நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். புதன் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசாங்கத்தில் பாராட்டும் பரிசும் லாபமாக கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிரிகளை பிரமிக்க வைக்கும். குரு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். ஊழியர்கள் உற்சாகத்துடன் வேலை பார்க்க வேண்டும். சிலர் வேலை மாறுதலால் வேறு இடத்திற்கு செல்ல வேண்டி வரும். சுக்கிரன் 7,8 ஆம் இடத்தில் இருக்கிறார்.கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகளின் கவனத்தை கவருவது சற்று சிரமம். சனி 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தகப்பனாருக்கு திடீர் நோய் தாக்கம் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் செய்வீர்கள். அதற்காக கடன் வாங்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படும். ராகு 10ஆம் இடத்தில் இருக்கிறார். நாடகம், சினிமா போன்ற துறைகளில் வேலை பார்ப்பவர்கள் பிரகாசமான பயனை அடைவார்கள். தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். கேது 4 ஆம் இடத்தில் இருக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். 5 ஆம் தேதி சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.
கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். வெளிநாடு செல்வதற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றியைத் தரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து பொருள் வரவு அதிகரிக்கும். சந்திரனின் இடமாற்றங்கள் சாதகமான நிலையில் உள்ளது. பெரிய மனிதர்களின் ஆதரவால் புதிய தொழிலை தொடங்குவீர்கள். லாட்டரி பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். செவ்வாய் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவி ஆசைப்பட்டு கேட்ட நகையை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். குரு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். மழலை செல்வம் உண்டாகி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள். புதன் 5 இடத்தில் இருக்கிறார். எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும். சுக்கிரன் 6,7 ஆம் இடத்தில் இருக்கிறார். காதல் கை கூடி வரும் கனவு பலித்து களிப்படைவீர்கள். சனி 8 ஆம் இடத்தில் இருக்கிறார். ஊழியர்கள் பற்றாக்குறையால் உற்பத்தி குறையும். தவறான பழக்க உள்ளவர்களிடம் நெருக்கம் வைத்துக் கொண்டால் அவமானத்தை சந்திப்பீர்கள். ராகு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். பிரபலமான மனிதர்களின் சந்திப்பு உங்களின் புகழை அதிகரிக்கும். கேது 3ஆம் இடத்தில் இருக்கிறார். விருந்து நிகழ்ச்சிகளில் மேலதிகாரிகளின் கவனத்தைக் கவருவீர்கள். அரசாங்க ஊழியர்கள் மக்களின் பாராட்டை பெறுவீர்கள்.
சிம்மம் அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... உங்கள் ராசிநாதன் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணிகளின் மூலம் தொழிலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெறுவீர்கள். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். டீக்கடை வியாபாரிகளிலிருந்து கட்டுமான தொழில் பார்ப்பவர்கள் வரை அனைத்து துறையினரும் அமோக பலன் அடைவார்கள். புதன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தினரின் தேவை அறிந்து நடந்து கொள்வதால் உங்கள் மீதுள்ள மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். புதிய தொடர்புகளால் சிலர் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடும். குரு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடாதீர்கள். உண்மையான உழைப்பு, உற்சாகமான வேலை, மனதிற்கு நிம்மதியை தரும். சுக்கிரன் 5,6 ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத்துறையினர் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். சனி 7 ஆம் இடத்தில் இருக்கிறார். மருத்துவத்துறையினர், கல்வியாளர்கள் பெரும் புகழை அடைவார்கள். வழக்கறிஞர்கள் திறமையுடன் வாதாடி வழக்குகளில் வெற்றி பெறுவார்கள். ராகு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். நெருக்கமான உறவினர்களின் சிரமத்தை தீர்க்க நீங்கள் உதவி செய்வீர்கள். கேது 2 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய இரவு பகலாக உழைப்பீர்கள்.அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட
சிம்ம ராசி அன்பர்களே..
. உங்கள் ராசிநாதன் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணிகளின் மூலம் தொழிலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெறுவீர்கள். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். டீக்கடை வியாபாரிகளிலிருந்து கட்டுமான தொழில் பார்ப்பவர்கள் வரை அனைத்து துறையினரும் அமோக பலன் அடைவார்கள். புதன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தினரின் தேவை அறிந்து நடந்து கொள்வதால் உங்கள் மீதுள்ள மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் மங்கள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். புதிய தொடர்புகளால் சிலர் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடும். குரு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடாதீர்கள். உண்மையான உழைப்பு, உற்சாகமான வேலை, மனதிற்கு நிம்மதியை தரும். சுக்கிரன் 5,6 ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத்துறையினர் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். சனி 7 ஆம் இடத்தில் இருக்கிறார். மருத்துவத்துறையினர், கல்வியாளர்கள் பெரும் புகழை அடைவார்கள். வழக்கறிஞர்கள் திறமையுடன் வாதாடி வழக்குகளில் வெற்றி பெறுவார்கள். ராகு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். நெருக்கமான உறவினர்களின் சிரமத்தை தீர்க்க நீங்கள் உதவி செய்வீர்கள். கேது 2 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய இரவு பகலாக உழைப்பீர்கள்.
கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட
கன்னி ராசி அன்பர்களே... சூரியன் 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வேலை காரணமாகவோ விஷேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவோ வெளியூர் சென்றால் வீட்டை நன்றாக பூட்டிவிட்டு செல்லுங்கள். நகைகள் பணங்கள் போன்றவற்றை வீட்டில் வைக்க வேண்டாம். சந்திரனின் இடப்பெயர்ச்சியும் பெரிதாக முன்னேற்றத்தை கொடுக்காது. போட்டி பந்தயங்களில் மனதை செலுத்தாதீர்கள். அதனால் வீண் விரயம் ஏற்படும். செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். மணல், செங்கல் போன்ற வியாபாரம் மன நிறைவைத் தரும். பகையை மறந்து விரோதிகள் உங்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். புதன் 3 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். புதிய ஜீவன் உருவாகும். குரு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு தேவையான லைசன்ஸ் கிடைக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். பிள்ளைகளால் பெருமைகள் உண்டாகும். சுக்கிரன் 4,5 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். சனி 6 ஆம் இடத்தில் இருக்கிறார். நண்பர்களை நம்பி முக்கிய காரியத்தில் இறங்க வேண்டாம். வழக்குகளில் சாதகமான முடிவை எதிர்பார்க்க இயலாது. ராகு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். அனாவசியமாக மற்றவர் விஷயத்தில் தலையிட்டு பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். பெற்றோர்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். கேது 1 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்களால் தொல்லைகள் ஏற்படும்.
துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... சூரியன் 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். நிதானமாக எந்த காரியத்தையும் செய்ய வேண்டும். சந்திரனின் இடப்பெயர்ச்சி நல்ல பலன்களை தருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. விவசாயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தென்னந்தோப்பை விலைக்கு வாங்குவீர்கள். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகள் ஆசைப்பட்ட பொருளை வாங்கி கொடுப்பீர்கள். தொழிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். மனைவி மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். குரு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்கத்தின் மூலமாகவும் வெளி வட்டாரத்திலும் தொழிலுக்கு முட்டுக்கட்டைகள் ஏற்படும். சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டும். சுக்கிரன் 3,4 ஆம் இடங்களில் இருக்கிறார் திருமண காரியங்களில் ஈடுபடுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். சனி 5 ஆம் இடத்தில் இருக்கிறார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் கவலைப்படுவீர்கள். தொழில்துறைகள் மந்தமாக நடக்கும். போட்டி பந்தயங்கள் ஆகாது. ராகு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது கவனச்சிதறல் கூடாது. விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வியாபாரிகள் சுமாரான பலனை பெறுவார்கள். கேது 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். மேலதிகாரிகளின் உற்சாகமான பாராட்டு உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் மனக்கவலைக்கு மருந்தாக அமைவார்கள். விருச்சிகம் போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... சூரியன் 1 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பணத்தட்டுப்பாடு தலைக்கு மேல் சென்றாலும் அதை சமாளிக்க கடுமையாக உழைப்பீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி சற்று சாதகமாக இருக்கிறது. அதனால் பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். செவ்வாய் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகும். திட்டமிட்ட திருமணங்கள் சில காரணங்களால் தள்ளிப் போகலாம். புதன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீர்கள். மனைவி பிள்ளைகளுக்காக நகைகள் வாங்கி சேமிப்பீர்கள். குரு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். திருமணமாகாமல் ஏக்கத்தோடு இருந்த இளம் காளையர்க்கும் கன்னியர்க்கும் திருமண வாய்ப்பு கைகூடி வரும். சுக்கிரன் 2,3 ஆம் இடத்தில் இருக்கிறார். இளம் பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர்கள் சற்று அணுக்கமாக கண்காணிக்க வேண்டும். தவறான பாதையில் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ராகு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க ஊழியர்கள் ஆவணங்களில் கையெழுத்து போடும்போது கவனமாக இருக்க வேண்டும். கேது 11ஆம் இடத்தில் இருக்கிறேன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட
விருச்சிக ராசி அன்பர்களே.
.. சூரியன் 1 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பணத்தட்டுப்பாடு தலைக்கு மேல் சென்றாலும் அதை சமாளிக்க கடுமையாக உழைப்பீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி சற்று சாதகமாக இருக்கிறது. அதனால் பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். செவ்வாய் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகும். திட்டமிட்ட திருமணங்கள் சில காரணங்களால் தள்ளிப் போகலாம். புதன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீர்கள். மனைவி பிள்ளைகளுக்காக நகைகள் வாங்கி சேமிப்பீர்கள். குரு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். திருமணமாகாமல் ஏக்கத்தோடு இருந்த இளம் காளையர்க்கும் கன்னியர்க்கும் திருமண வாய்ப்பு கைகூடி வரும். சுக்கிரன் 2,3 ஆம் இடத்தில் இருக்கிறார். இளம் பிள்ளைகளின் நடவடிக்கையை பெற்றோர்கள் சற்று அணுக்கமாக கண்காணிக்க வேண்டும். தவறான பாதையில் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போவார்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். ராகு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க ஊழியர்கள் ஆவணங்களில் கையெழுத்து போடும்போது கவனமாக இருக்க வேண்டும். கேது 11ஆம் இடத்தில் இருக்கிறேன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். விவசாய உற்பத்தியில் சாதனை படைப்பீர்கள். லாட்டரி, பந்தயங்கள் அனுகூலமான பலனை தரும். சந்திரனின் நகர்வுகள் நன்மையும் தீமையையும் கலந்து அளிக்கும். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வியாபாரத்தில் சில சிக்கல்களை கொண்டு வரலாம். புதன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார் பிள்ளைகள் படிப்புக்காக வங்கியில் கடன் பெற முயற்சி செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சலில் மட்டுமே முடியும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் பெற்றோர்களுக்கு கவலை அளிக்கும். குரு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் மேல் படிப்பிற்காக பணம் கட்டுவீர்கள். மங்கல காரியங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். Advertisement சுக்கிரன் 1,2 ஆம் வீட்டில் இருக்கிறார். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வரும். வியாபாரத்தில் வெற்றி பெற்று பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். சனி 3 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலில் மாற்றங்களை உண்டாக்குவீர்கள். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். கோபித்துக் கொண்டு சென்ற உறவினர்களின் மனதை சாந்தப்படுத்தி பிரச்சனையை தீர்ப்பீர்கள். வேலை காரணமாக சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாது. கேது 10 ஆம் வீட்டில் இருக்கிறார். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள்.. வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும். விவசாய உற்பத்தியில் சாதனை படைப்பீர்கள். லாட்டரி, பந்தயங்கள் அனுகூலமான பலனை தரும். சந்திரனின் நகர்வுகள் நன்மையும் தீமையையும் கலந்து அளிக்கும். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வியாபாரத்தில் சில சிக்கல்களை கொண்டு வரலாம். புதன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார் பிள்ளைகள் படிப்புக்காக வங்கியில் கடன் பெற முயற்சி செய்வீர்கள். வெளியூர் பயணங்கள் அலைச்சலில் மட்டுமே முடியும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் பெற்றோர்களுக்கு கவலை அளிக்கும். குரு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் மேல் படிப்பிற்காக பணம் கட்டுவீர்கள். மங்கல காரியங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். சுக்கிரன் 1,2 ஆம் வீட்டில் இருக்கிறார். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வரும். வியாபாரத்தில் வெற்றி பெற்று பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். சனி 3 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலில் மாற்றங்களை உண்டாக்குவீர்கள். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். கோபித்துக் கொண்டு சென்ற உறவினர்களின் மனதை சாந்தப்படுத்தி பிரச்சனையை தீர்ப்பீர்கள். வேலை காரணமாக சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாது. கேது 10 ஆம் வீட்டில் இருக்கிறார். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள்..
மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே.... சூரியன் 11 ஆம் இடத்தில் நிற்கிறார். தொழிலை விரிவுபடுத்த நினைப்பீர்கள். ஆனால் அரசாங்கத்தின் மூலமாக அதற்கு முட்டுக்கட்டை ஏற்படலாம். அரசியல்வாதிகளின் நட்பால் அதை விலக்கி வியாபாரத்திற்கு தேவையான வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். சந்திரன் இடப்பெயர்ச்சியும் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நிற்கும். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். கட்டுமான தொழில் கை நிறைய பணத்தைக் கொண்டு வரும். நிலம் வாங்கி விற்பதில் சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வார்கள். புதன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். வாகனங்கள் வாங்குவீர்கள். காதல் விவகாரங்கள் சாதகமான நிலைய எட்டி கைகூடி வரும். தொழிலில் மன நிம்மதி அடைவீர்கள். குரு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பொருளை அனுப்பி வைக்க வேண்டும். தாமதமானால் கெட்ட பெயர் உண்டாகலாம். தொழிலுக்கு இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை தாண்டி வருமானத்திற்கு வழி வகுப்பீர்கள். சுக்கிரன் 12 1 ஆம் வீட்டில் இருக்கிறார். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு தூக்கத்தை தொலைப்பீர்கள். மனைவி புரிந்து கொள்ளாமல் நடப்பதால் மன சஞ்சலம் அடைவீர்கள். சனி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். கட்டப்பஞ்சாயத்து பண்ணுவதை விலக்கி விடுங்கள். ராகு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். சகோதர சகோதரிகளுக்கு மனம் சலிக்காமல் உதவி செய்வீர்கள். கேது 9 ஆம் இடத்தில் இருக்கிறார். பணவரவு எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும். இருப்பினும் செலவுகள் கை மீறி போய் சிரமப்படுவீர்கள்.
கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே... சூரியன் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்க தாமதமானாலும் எதிர்பாராத வகையில் உதவிகள் வந்து சேரும். புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்படும். அவர்களும் உங்களுடைய வியாபாரத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சியால் சில மேன்மையான பலன்கள் கிட்டும். செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். கொடுத்தால் வாக்கை காப்பாற்ற வேண்டும். இல்லை என்றால் கெட்ட பெயரை சுமக்க வேண்டிய நிலை உருவாகும். சண்டை சச்சரவுகளில் இருந்து ஒதுங்கி நில்லுங்கள். புதன் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கலைத்துறையினர் மேன்மையான பலனை காண்பார்கள். கமிஷன் வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். குரு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். மேலதிகாரிகள் உங்களின் பணியை முதுகில் தட்டி பாராட்டுவார்கள். விரோதிகளின் சூழ்ச்சிகள் மாயமாக மறைந்து போகும். அரசாங்க உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும். சுக்கிரன் 11,12 ஆம் இடத்தில் இருக்கிறார். பழைய வீட்டிற்கு வர்ணம் பூசுவீர்கள். மனைவியின் மனம் அறிந்து தங்க நகைகள் வாங்குவீர்கள். சனி ராசியில் இருக்கிறார். உங்கள் மனதை புரிந்து கொண்டவர்களால் இதமான அறிவுரையும் ஆதரவும் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் கவனமாக முதலீடு செய்யுங்கள். ராகு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். கட்டுமான தொழிலில் எச்சரிக்கையாக இருங்கள். சகோதர சகோதரி வகையில் செலவு உண்டாகும். கேது எட்டாம் இடத்தில் இருக்கிறார். புரிந்துணர்வு இல்லாமல் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்து சங்கட்டப்படுவீர்கள்.
மீனம் பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட
மீனராசி அன்பர்களே.
... சூரியன் 9 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். போன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் போது எச்சரிக்கை தேவை. அனுப்ப வேண்டிய அக்கௌன்ட் நம்பர் சரிதானா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். சந்திரன் சாதகமாக சஞ்சரிக்கிறார். புதிய முதலீடுகள் செய்வீர்கள். வியாபாரத்தை விருத்தி செய்ய வியூகம் அமைத்து பாடுபடுவீர்கள். தொழிலுக்கு இருந்த தடங்கலை சாமர்த்தியமாக சரி செய்வீர்கள். செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசு, தனியார் துறை ஊழியர்கள் உற்சாகத்தை இழக்காமல் வேலை பார்த்து மேலதிகாரிகளின் பாராட்டை பெற வேண்டும். புதன் 9 ஆம் வீட்டில் இருக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாமல் மணக்குறையோடு இருந்த தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குரு 3 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தொழிலை மாற்ற யோசனை செய்வீர்கள். கவலைகள் விலகி இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுக்கிரன் 10,11 ஆம் இடத்தில் இருக்கிறார். வேண்டா வெறுப்பாக செய்கின்ற காரியங்களில் கூட வெற்றி பெற்று சாதனை படைப்பீர்கள். சனி 12 ஆம் வீட்டில் இருக்கிறார். பங்குச்சந்தை வியாபாரம் அமோகமான லாபத்தை கொடுக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு எதிரிகளுக்கும் உதவி செய்வீர்கள். ராகு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். பண பற்றாக்குறை இருந்தாலும் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். தான தர்மங்கள் செய்து மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள். கேது 7 ஆம் இடத்தில் இருக்கிறார். மாமனார் வகையில் பிரச்சனை உண்டாகும். ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்துரு என்பதை மனதில் வைத்து பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். 29,30 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.