பெண்ணின் பாலியல் பிரச்சினைக்கு, இன்றைய பெண்ணியல்வாதிகளின் ஆண் எதிர்ப்பு போல் சுடச்சுட தீர்வு கொடுத்த தக்கன் இன்றைய பூர்சுவா பெண்ணியல் வாதிகளின் மேதையல்லவா.?
முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.
"கலைக் கோட்டு ரீஷி மானுக்கும், கௌசிகர் குசத்திற்கும், ஜம்புகர் நரிக்கும், கவுதமர் மாட்டிற்கும், அகஸ்தியர் குடத்திலும், மாண்டவியர் தவளைக்கும், காங்கேயர் கழுதைக்கும், கவுனர் நாய்க்கும், கணாதர் கோட்டானுக்கும், சுகர் கிளிக்கும், ஜாம்புவந்தர் கரடிக்கும், அஸ்வத்தாமன் குதிரைக்கும்" பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.
இந்து பார்ப்பன புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சி வடிவத்தை, மனிதன் அல்லாத மிருகபுணர்ச்சியூடாக விளக்கியது. பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகபுணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய யதார்த்தம். அண்மையில் பிரஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகையிடம் கேட்ட கேள்வி "நீங்கள் வளர்ப்பு மிருகத்துடன் புணர்வதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். இதை நீங்கள் செய்கின்றீர்களா?" இன்று பல்வேறு வகையில் மனிதப் பெண்ணும், மிருகப் பெண்ணும் பெற்றெடுக்கும் குழந்தை, குட்டி மனித உருவத்தை ஒருபகுதி கொண்டிருப்பதை அறிகின்ற போது, மனித மிருக புணர்ச்சியை அம்பலமாக்கின்றது.
பட்டினத்தாரின் ஆணாதிக்கம்
பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றி பார்ப்போம். ஒருநாள் பட்டினத்தார் விபச்சாரி வீடு சென்றாராம்;. விபச்சாரியின் மகள் மேல் ஆசைப்பட்டு, அவளை புணர அழைத்தாராம். அவள் அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு விந்து வெளியேறிவிட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந்தொன்னையில் பிடித்து வைத்திருந்தாராம். தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணரக் கேட்டாளாம். அதற்கு பட்டினத்தார் கோபத்தோடு "உன்னை அழைத்தவன் தென்னையிலே, என்னிடம் வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்" என்று கூறிவிட்டுச் சென்றாராம். அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக எடுத்து விழுங்கினாளாம். இதனால் அப்பெண் கருத்தரித்து குழந்தையை பெற்று எடுத்ததாக இந்துமத வரலாறு. நம்புங்கள். திருமணம் செய்யாது கருத்தரிக்கும் பெண்களே, இப்படி உங்கள் ஆணாதிக்க இந்து பண்பாட்டு ஆணாதிக்கத்திடம் சொல்லிப் பாருங்களேன். என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம். பெண்கள் பார்ப்பன சந்நியாசிகளுக்கு பாய்விரித்து படுக்க வேண்டும் என்பதையே இது கோருகின்றது. இன்று இந்துராச்சியமும், இந்த வக்கற்ற பண்பாட்டை ஏற்படுத்தி ருசிக்கவே படாதபாடு படுகின்றது. விபச்சாரம் செய்யும் பட்டினத்தாரை போற்றுவதன் மூலம், சொந்த கணவனின் வைப்பாட்டித்தனத்தையும், விபச்சாரத்தையும் விமர்சனம் இன்றி அங்கீகரிக்க இந்து பண்பாட்டு விளக்கங்கள் வழிகாட்டுகின்றது.
குரங்கின் முகம் ஏன் இப்படி.?
குரங்கின் முகம் ஏன் இப்படி போனது தெரியுமா? இந்து மத விளக்கத்தைப் பார்ப்போம். இராமனை வழிபடும் அனுமானின் வழியில் வந்த குரங்கு ஒன்று, ஒருநாள் சூரியனின் செந்நிறத்தைக் கண்டு, அதை ஒரு பழமாக கருதி, அதன் மீது பாய, அது முகத்தை சுட்டு பொசுக்கிவிட குரங்கின் முகம் பொசுங்கி விட்டதாம். பாவம் குரங்கும் இந்து பக்தர்களும். அனுமான் வழிபட்ட இந்து பக்தர்களின் முட்டாள் தனமல்லவா, இங்கு சந்தி சிரிக்கின்றது.
வெள்ளைக்காரனின் வெண்மைக்கு காரணம்.
வெள்ளைக்காரன் பிறப்பை ஒட்டி இந்துமதம் "ஒரு பிராமணன் தவம் இருக்கின்றான். நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று. உனக்கு நல்ல குழந்தை பிறக்கும் என்று சொல்லி கடவுள் அவனுக்கு வரம் கொடுக்கின்றார். ஒரு பெண்ணோடு சேர்ந்தால்தான் குழந்தை பிறக்கும். ஒன்றும் வழி கிடையாது. கடவுளின் ஆசீர்வாதத்தால் விந்து வழிந்து அவன் இருந்த இடத்திலேயே கீழே விழுந்து விடுகின்றது. ஒரு கொக்கு அதை எடுத்துச் சாப்பிட்டுவிட்டது. அந்தக் கொக்கின் வயிற்றில் பிறந்ததனால் வெண்காலியன். கொக்கு வெள்ளையாக இருப்பதால் வெள்ளைக்காரன் வெள்ளையாக இருக்கின்றான்."
எப்படி இருக்கின்றது, இந்துமதப் புரட்டுகள்.? ஆணாதிக்க பாலியல், ஆண்களின் விகாரமான போக்கையும் அதன் கொப்பளிப்பையும் காட்டுகின்றன.
நாடார் சாதி மக்களை பார்ப்பனியம் இந்துமதமாக மாறிய போது, அடித்தட்டு மக்களின் வழிபாட்டு கடவுள்களையும் புணர்ந்து உறவுகளை உருவாக்கினர். இந்தவகையில் பத்திரகாளியின் தோற்றமும் விகாரமாக்கப்பட்டது. பனை சார்ந்து உழைப்பில் வாழ்ந்த மக்கள், தாம் வழிபட்ட கடவுளுக்கு பனையை ஒட்டி பத்திரகாளி என்ற பெயரை வைத்தனர். இந்த வகையில் நாடார் சாதி மக்களின் பிறப்பை ஒட்டி "மகாவிஷ்ணு வித்தியாதர முனிவர் வேடமிட்டு ஏழு கன்னிகளைப் புணர்ந்து அதில் பிறந்த குழந்தைகளும் அவர்களுடைய வாரிசுகளும் தான் நாடார்கள்... அண்ணனாகிய மகாவிஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கை பத்திரகாளியால் வளர்க்கப்பட்ட..." மக்கள் தான் நாடார் என்று கடவுள்களின் விளக்கங்களை கேட்க வேண்டியுள்ளது. இந்த பிறப்பில் பிறந்ததாக கூறும் நாடார் சாதி மக்கள் மீது திருவிதாங்கூர் அரசு தலைவரி, முலைவரி என எண்ணற்ற வரிகளை விதித்தது. அதாவது மார்பை மறைப்பதற்கும் வரி. வரிகட்ட முடியாதவர்கள் மார்பை மறைக்க முடியாது. இது ஆணாதிக்க இந்து சாதிச் சட்டமாக இருந்தது.
பதிவிரதையாவதற்கு இந்து மதம் சொல்லும் வழி.
பதிவிரதையாவதற்கு பெண்கள் செய்யவேண்டியது, கடவுளுகளின் காம கற்பழிப்புகளுக்கு எதிர்ப்பின்றி இணங்கிப் போவதாகும். கடவுளான இந்திரன் அகலிகையை கற்பழித்ததை நியாயப்படுத்தி, அகலிகையை பதிவிரதை ஆக்கியது இந்துமதம். இந்திரனின் வாரிசுகளான பார்ப்பனர்களின் கற்பழிப்புக்கு பெண்கள் இணங்கி பாய் விரித்தால், உலகம் போற்றும் கற்புக்கரசியாக முடியும். அதை பார்ப்பனிய ஆணாதிக்க இலக்கியம் புகழும். பெண்களே என்ன செய்யப் போகின்றீர்கள்.? எதிர்த்து நிற்க போகின்றிர்களா? அல்லது இணங்கி போகப் போகின்றீர்களா? பதிவிரதைக்கு மனைவியை கூட்டிக் கொடுப்பதும் உயர் பண்பாடாகும்.
இயற்பகை நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்ததால் 64 நாயனார்களில் ஒருவரானர். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா.? பெண்கள் இதற்கு இணங்கப் போகின்றீர்களா.? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்கு கூட்டிக் கொடுக்கும் ஆணாதிக்க தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க போகின்றோமா? சிந்தியுங்கள் எதைச் செய்யபோகின்றோம்.?
பெண்கள் ஏன் பூச்சூடுகின்றனர் தெரியுமா? ஆண்களின் காமத்துக்கு, பெண்கள் தாங்களாகவே திரிவதாக காட்டி, அதற்கு துனை போவதற்குமே. இந்தியப் பண்பாட்டின் சின்னமாக காட்டும் பெண்களின் தலையில் வைக்கும் பூ, ஆண்களின் காமத்தை துண்டும் ஒரு ஊடகமாகும். மல்லிகை, முல்லைப் பூ காமத்தை ஏற்படுத்தும் மணம் கொண்டது என்ற அடிப்படை காரணத்தைக் கொண்டே, அதை பெண்கள் தலையில் அணிவிக்கப்பட்டது. ஆண்கள் படுக்கையை நாடி வீடுவரும் போது, பெண்ணின் கடமையை ஊக்குவிக்க, பூ கொடுக்கும் அதே நேரம் ஆணின் காமத்தை ஏற்படுத்த உதவுவதாகவே இந்த ஆணாதிக்க பண்பாடு காணப்படுகின்றது. இதில் இருந்தே கன்னிப் பெண்கள் மல்லிகை, முல்லை சூடக்கூடாது என்ற வழக்கமான ஆணாதிக்க கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது.
காமதகனம் காமத்தை தடுக்க இந்து ஆணாதிக்க வழியாக கொண்டாடும் விழாதான் 'காமூட்டி கொளுத்தல்' ஆகும். சிவனின் தவத்தை குலைக்க மன்மதன் காமத்தை சிவன் மீது ஏவியதாகவும், சிவன் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்ததாகவும் கூறும் கதையை அடிப்படையாக கொண்டு, 'காமூட்டி கொளுத்தல்' விழாவாக இருக்கின்றது. இன்றைய பூர்சுவா பெண்ணியல் வாதிகளும், ஓரினச்சேர்க்கையாளரும் ஆணாதிக்கத்தை ஒழிக்க முன்வைக்கும் வழிகள் போல், இந்து ஆணாதிக்கம் வைக்கும் கூத்துதான் இது.
தீபாவளியாக கொண்டாடும் நரகாசுரனை இந்துமதம் எப்படி வக்கிரத்து உருவாக்கியது எனப் பார்ப்போம். பூமியைப் பாயாக சுருட்டி கடலுக்குள் அசுரன் ஒருவன் ஒளித்து விட, விஷ்ணு மூன்றாவது அவதாரமாக பன்றி அவதாரம் எடுத்து மீட்டு வந்து, பூமாதேவியை விபச்சாரத்தளத்தில் புணர்ந்து நரகாசுரனை பெற்றதாக இந்துமதம் கூறுகின்றது. இந்த பிறப்பு எப்படிப்பட்டது.? இன்றைய நவீன கொலிவூட் சினிமா பொலிஸ் படங்கள் போல், மீட்பவர்கள் அப்பெண்ணை புணர்வது என்ற வடிவில் பூமியை புணர்வதாக கதை உள்ளது. ஆணாதிக்க கண்ணோட்டம், மீட்கப்படுவது எப்போதும் பெண் மீட்பவர் எப்போது ஆண், மீட்ட பின் எப்போதும் புணர்வது என்று உலகப் பண்பாடு ஓரே பொதுக் கண்ணோட்டத்தில் காணப்படுகின்றது. இது இயற்கை பற்றிய ஆணாதிக்க இந்துமதக் கண்ணோட்டத்திலும் பிரதிபலிக்கின்றது.
விஷ்ணுவின் கற்பழிப்பு கதையைப் பார்ப்போம். பத்மபுராணம் உத்தர காண்டம் 263 இல் ஞானி ஜலந்தரின் மனைவி விராந்தா மீது ஆசைப்பட்ட விஷ்ணு அவளை சூறையாட தீர்மானித்தார். அதன்படி அவளை ஏமாற்றி கற்பழித்தார். இதையடுத்து விராதா கோபத்துடன் சபித்ததைப் பார்ப்போம். " ஓ விஷ்ணு! பிறர் மனைவியின் கற்பைக் குலைப்பது உனக்கு வெட்கமில்லையா? ஞானிபோல் தோற்றமளிக்கிறாய்; தூ, கடைகெட்ட குற்றவாளி"என்று சபித்தாள். கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்து ராஐசியத்தில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும்.? இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?
எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டாராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து "ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!" என்ற சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25) இல் கீழ் சாதி பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப்பிரிவின் பெருமையை கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளை கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரப்பில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தை பெண்கள் எப்படி போற்றமுடியும்.?
சங்கரனின் (சிவனின்) காமம் பெண்களை ஓடவைக்கின்றது. சிவனுக்கு காமம் ஏற்பட மோகினியை கட்டிப்பிடிக்க அவள் தப்பி ஒடினாளாம். அதை மாதா பாகவத புராணம் பெண்யானையை காமம் பிடித்த ஆண் யானை விரட்டுவது போல், மோகினியை சங்கரன் துரத்திச் சென்றாராம். வீதிக்கு வீதி இன்று ஆணாதிக்க வக்கிரத்தால் காமம் மேலிட, வதைக்குள்ளாகும் பெண்கள் படும்பாட்டை நாம் அறிவோம்; ஆனால் நாம் வழிபடும் கடவுள் சிவனும் இதைத்தான் செய்தான் என்று தெரிகின்ற போதும், அதை நியாயப்படுத்தும் போதும், இதை சகித்து வழிபடுவது கேவலமானது. பெண்கள் கற்பழிக்க மறைமுகமாகவும், நேரடியாகவும் துணைபோவதாகும். என்ன செய்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும்.
கடவுள்களின் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) கூட்டுக் கற்பழிப்பு ஊடாகவே இந்துமதம் வக்கரித்து உருவானது. பாவிஸ்ய புராணத்தில் அத்திரி மாமுனிவரின் மனைவி அனுசூயாவின் அழகில் காமம் கொண்ட பிரம்மா, விஷ்ணு, சிவன் கூட்டாக சேர்ந்து கட்டிப்பிடித்து கற்பழிக்க முயன்ற போது அனுசூயா சபித்தாள். சாதாரண பெண்கள் ஆணாதிக்க கடவுள்களின் கற்பழிப்பு முயற்சிகள், கற்பழிப்புகளில் பிழைத்து வாழ்வது என்பது பெரும் போராட்டமாகவுள்ளது. இன்று அந்த கடவுள்களின் பெயரில் கற்பழிப்புகள் மற்றைய மத பெண்கள் மீதும், சாதி குறைந்த பெண்கள் மீதும் சர்வசாதாரணமாக நிகழ்கின்றது. இதுதான் இந்துமதத்தின் ஆணாதிக்க ஜனநாயகம்.
மகளுடன் உறவு கொண்ட பிரம்மன். தன்மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3வது ஸ்காண்டம் 12 வது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது. ஆணாதிக்க வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டு விடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரபூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. அது இன்று பெண்களாலும் நடத்தப்படுமளவுக்கு ஆண் பெண் என்ற விதிவிலக்கு இன்றி தொடருகின்றது. வரைமுறையற்ற பாலியல் நிலவிய சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று ஆணாதிக்க அமைப்பு உருவான பின்பு, மகளை தந்தை உறவு கொள்வது என்பது வக்கரித்துப்போன சமூக நிகழ்வாகும். உலகளவில் பாலியல் நெருக்கடி வளர்ச்சி பெற, சொந்தக் குழந்தைகள் பலியிடப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது. இந்து மதம் இதை தனது புராண இதிகாசங்கள் ஊடாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.
கற்பழித்த பின் கொன்ற விஷ்ணுவின் பின்னால் ஊடுருவி நிற்பது அற்பத்தனமான ஆணாதிக்க காமமே. இந்திரனுக்கு ஆதரவாக நிரபராதியான பராகுவின் மனைவியின் தலையை வெட்டி எறிந்தான். இதை அடுத்து பிராகு சபித்ததைப் பார்ப்போம். "ஓ! விஷ்ணு! மாதர் குலத்தைக் கொல்லலாமா? ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்ணை ஒழுக்கக் கேடு விளைவித்தப் பின் கொன்று விட்டாயே. தமோகுணம் உள்ள கெட்ட குணமிக்கவனே! நீ பாம்பு போல் நடந்து வருகிறாயே!" என்று பார்ப்பன ஆணாதிக்க சதிராட்டத்தை வெட்டவெளிச்சமாகின்றது.
முப்பத்து முக்கோடி தேவர்களின் குரு நாதர் பிரகஸ்பதியின் ஒழுக்கம் என்ன? ஸ்கந்த புராணம் 9 அத் 20 இல் நாதர் பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, முறைகேடாக உறவு கொண்டு பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர். இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன் என்பதை தேவி பாகவத புராணம் விளக்குகின்றது. இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவானவரே, வேதவிற்பன்னர் துரோணர் என்று மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131இல் கூறுகின்றது. எப்படி இருக்கு இந்து புராணங்கள்.? கொஞ்சம் சிந்தியுங்கள். ஆணாதிக்க இந்துமதத்தின் பிறப்புகளே விசித்திரமான வக்கிரமாகும்.
தேவேந்திரனின் கள்ள உறவுகளும் வைப்பாட்டித்தனத்தை வால்மீகி இராமாயணம் பாலசர்கா 48 இல் கூறி நியாயப்படுத்துகின்றது. வேத ரிஷிகளில் சிறந்த கௌதம ரிஷியின் பத்தினி அஹல்யாவுடன் பாலியல் சுகம் அனுபவித்த பின், அவளின் இன்ப நிலையில் தேவேந்திரன் விடைபெறுகின்றான். பெண்களின் இயற்கையான பாலியல் தேவைகளை மறுத்து, வைப்பாட்டித்தனம் ஆண்களின் வக்கிரத்தில் உருவாகி இருப்பதற்கு இந்தியாவில் இந்த மதம் காரணமாகும். கடவுள்கள் என்று போற்றி வழிபடும் ஆணாதிக்க வக்கிரம் பிடித்த கதைகள் இதன் மூலமாகி ஆதாரமாகின்றது.
பெண்ணை கடத்தி சென்று கற்பழித்து சுகம் அனுபவித்த கடவுள் சந்திரன். திரிபுவனம் வெற்றி கிடைத்ததையடுத்து சந்திரன் ராஜசூய யாகம் செய்தார். இந்த நேரம் சந்திரன் தனது குருநாதர் பிரகஸ்பதியின் மனைவி தாராவை பலாத்காரமாக தூக்கிச் சென்றான். இந்த கட்டத்தில் அசுரர்களுடன் ஏற்பட்ட யுத்தத்தில் இப் பெண்கடத்தல், தேவர் அணியை பிளந்து விடும் என்று கருதி சந்திரனுக்கு பிரம்மன் புத்தி கூறியதன் பேரில், தாரா விடுவிக்கப்பட்டாள். ஆனால் சந்திரன் பலாத்காரமாக உறவு கொண்டு பிறந்த குழந்தை புத்தாவை கொடுக்க மறுத்துவிட்டான். இந்துமதம் ஆண்களுக்கு கூறும் போதனை, பெண்களை கடத்திச் சென்று ஆணாதிக்க சுவைகளை அனுபவியுங்கள் என்பதே.
சாதி கடந்த வசிஸ்டரின் ஆணாதிக்க அத்துமீறல் பெண்களின் கற்புரிமையை சூறையாடுவதாக இருந்தது. விஷ்ணுவின் அவதார புருடன் ராமச்சந்திரபிரபுவின் குரு வசிஸ்டர், சாதி குறைந்த பெண் அஷ்கமாலாவின் மீது காமம் கொண்டு சூறையாடினான். இந்த வசிஸ்டரின் காம லீலைகளை போட்டிகாரரான விஸ்சுவாமித்திரன் புட்டு வைக்கின்றார் மகாபாரதம் ஆதி பர்வதம் அத் 27 இல்.
விஸ்வாமித்திரனின் கட்டற்ற பாலியல் நடத்தையை ஆராய்வோம். தவம் இருந்த விஸ்சுவாமித்திரன் மேனகாவைக் கண்டு மயங்கி காமம் கொண்டு உறவாடினான். இந்த உறவால் சகுந்தலா பிறந்தாள். இந்த சகுந்தலா துஸ்யந்த மன்னனிடம் கண்ட இடத்தில் உறவு கொண்டு பரதனைப் பெற்றாள். இப்படி தான் இந்து முனிகளின் உறவுகள், பழக்க வழக்கங்கள் காமத்தை அடிப்படையாக கொண்டு கண்ட இடத்தில் நடந்தது.
கண்ட இடத்தில காமம் கொண்டு; உறவு கொண்ட மித்திர வருணன். வால்மீகி இராமாயணம் உத்திரகாண்டம் சர்கா 55 இல் மித்திரவருணன் ஜலதேவதாவுக்குச் சென்றான். ஊர்வசி வருணாலயத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டு காமம் கொண்டு உடலுறவு கொண்டான். இதனால் பிறந்த புத்திரர்களே மன்னர் நிமாவும், மகரிஷி வசிஸ்டரும்.
மானின் வயிற்றில் இருந்து பிறந்த ஸ்ரங்கி ரிஷி. ஒருநாள் விபாந்தக முனிவர் குளித்துக் கொண்டிருந்த போது, வனமோகினி ஊர்வசி அவர் அருகில் வர, காமம் கொண்ட முனிப்பயலுக்கு விந்து வெளியேறியதாம். அது தண்ணீரில் கலந்துவிட அதை ஒரு பெண் மான் குடித்து கருவுற்று ஸ்ரங்கி ரிஷியை பெற்றதாம். மானில் இருந்து பிறந்ததால் இருகொம்பைக் கொண்ட அவரை 'ஸ்ரஸ்ய ஸரங்கி' என்ற பெயர் வந்ததாம். இந்து மதத்தின் விசித்திரமான ஆணாதிக்க வக்கிரமான பிறப்புகளில் இது ஒன்று.
விதியின் பின்னால் ஆணாதிக்க வக்கிர தேவையை அனுபவிக்க முயலுதல். தேவி பாகவாத புராணம் (6,26,36) இல் தேவர்களின் ஆலோசகரும், கிரிகால ஞானியும், மகா பண்டிதரும், ஜோஸிபருமான நாரதர் சஞ்சய மன்னனை பார்க்கச் சென்றார். அந்த மன்னனின் மகள் சுதந்தியைக் கண்டு காமம் கொண்டு, இளவரசி என் மனைவியாக பிறந்து இருக்கின்றாள் என்ற திருவாய்மொழிந்தார். மன்னன் கோபம் கொண்டு குரங்கு முகத்தினனாக மாறு என்று சாபம் இட்டார். இன்றைய சாமிகள் போல் ஆணாதிக்க தேவைகளை பிறப்பின் தொடர்ச்சி, எனக்காக பிறந்தது போன்ற கடவுள்களின் மோசடிகளின் ஊடாக அனுபவித்ததையும், அதை கோரியதையும் இந்துமதப் புராணங்கள் நியாயப்படுத்தல்களுடாக அம்பலப்படுத்துகின்றன.
குருவுக்கு போதை ஊட்டிவிட்டு அவரின் மனைவியுடன் கூடிக்குலாவுவதை இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. தேவி பாகவத புராணத்தில் கீரனாத் புத்திரன் சுதீஸ்னா தனது குருவுக்கு போதையைக் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பின், அவரின் மனைவியுடன் உடலுறவு கொண்டு வந்தான்.
வேத வியாசர் தனக்கு தானே புணர்ச்சி செய்த வக்கிரமான ஆணாதிக்க வெளிபாட்டை இந்துமதம் போற்றுகின்றது. தேவி பாகவத புராணம் (1,10,31,34,14,6) இல், இவர் தனக்கு தானே காம சுகம் தேடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அக்னி, ஆரணி தேவதைகளை நினைத்து தனது ஆணாதிக்க வக்கிரத்தினூடாக தனக்கு தானே புணர்ச்சி செய்தார். இதனால் வெளியேறிய விந்தில் இருந்து 'சுகா' என்ற புத்திரன் பிறந்தான். வேத வியாசர் சந்திரவன்சாவை மனைவியாக கொண்டிருந்த அதே நேரம், கிராதலி என்ற விபச்சாரியுடன் உறவு கொண்டார். இந்து மதத்தின் மகிமைகள், அற்புதங்கள் இவை. வக்கிரமான ஆணாதிக்க முகங்கள் இவை.
லட்சுமியின் கற்புரிமையையும், பெண்ணின் ஆணாதிக்க சந்தேகங்களையும் தேவி பாகவத புராணம் தெளிவாக நிர்வாணமாக்கின்றது. பெண்ணின் கற்பு பற்றி இந்து ஆணாதிக்கம் பெண்களுக்கு உபதேசிக்கும் வன்முறையைத் தாண்டி, லட்சுமி விஸ்ணுவை திருமணம் செய்யும் முன்பே தனது கன்னி பருவத்தில் தேவேந்திரனால் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டாள். இதைவிட ஒருநாள் துர்வாசமுனிவர் இந்திரனை பார்க்க வந்த போது, இந்திரன் ஆணாதிக்க காமத்தில் லட்சுமியை வெறித்து பார்த்தபடி இருந்ததால், வந்த முனிவரை வரவேற்கக்கூட முடியவில்லை. ஒருநாள் விஸ்ணு தனக்குள் தானே சிரித்து கொள்ள, லட்சுமி சந்தேகப்பட்டு, 'உமது சிரம் துண்டிக்கப்படட்டும்' என்று சாபம் போட்டாள். ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் மீதான கற்பழிப்பு, வெறித்த காமப் பார்வைகள், பெண்ணின் சந்தேகங்கள் கடவுள்களையே விட்டுவிடவில்லை. சமூகத்தின் இயல்பான நடத்தைகளை, மனிதன் தான் கற்பனையில் உருவாக்கிய கடவுளுக்கும் பொருத்தியதன் ஊடாக அக்காலகட்ட சமூத்தை புரிந்து கொள்ள இது உதவுகின்றது.
சகோதர சகோதரியிடையே நிகழ்ந்த கடவுள் புணர்ச்சிகளை தேவிபாகவாத புராணம் (6,17,53-5 வெளிக்கொண்டு வருகின்றது. சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் சகோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள். இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?"என்று கோபத்துடன் சீறினான். அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.
விஷ்ணுவின் பலதார மணமும், ஒருதார மணத்துக்கு வித்திடும் ஆணாதிக்க தீர்வுகளும். கலைவாணியும், சரஸ்வதியும் என்ற கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர். இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தால் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது" என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரம்மாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். இது இந்துமத ஆணாதிக்க அமைப்பு மாறிவந்த வடிவத்தைக் காட்டுகின்றது.
மனிதனாக விஷ்ணு கற்பழித்ததால் பிறந்த கதையை கந்தபுராணம் தக்ககாண்டத்தில் விளக்குகின்றது. கற்புள்ள அரச பெண்ணை கற்பழித்தால், அந்த பெண்ணின் சாபத்தால் விஷ்ணு மண்ணில் மனிதனாக பிறந்தானாம். இந்த கடவுளையும், கந்தபுராணத்தையும் சொல்லி வழிபடும் எமது முட்டாள் தனத்தை மெச்சத்தான் வேண்டும்.
கணவனை பிரிந்து வாழ இட்ட சாபம். சிவரகசியத்தில் இருந்து இதைப் பார்ப்போம்;. விஷ்ணு ஒரு நாள் தனது மனைவியுடன் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, அற்புதர்க்கன் என்ற சிவகணங்களின் தலைவன் அங்கு சென்றானாம். என்ன இப்படி செய்கிறாய்.? எனக் கேட்க 'நீ யாராட கேட்பதற்கு என
விஷ்ணு
கேட்க' இதை நந்தியிடம் முறையிட்டானாம் சிவகணத் தலைவன். நந்தி உடனே விஷ்ணுவை பூமியில் பிறக்க வைத்து, மனைவியை பிரிந்து வாழ சாபம் கொடுத்ததாம். ஆணாதிக்க பாலியல் நெருக்கடிகளை சகித்து வாழவும், அடங்கிவாழ கோரும் பண்பாடுகளையும் இந்து ஆணாதிக்க தனிச்சொத்துரிமை வழியில் புகட்டுகின்றது.
இராமனின் குற்ற பிறப்பும், பிறந்த பின்னாளான வாழ்வும் குற்றமே. ஒரு முனிவரின் மனைவியை விஷ்ணு கொன்று விடவே, அதனால் கிடைத்த சாபத்தினால் மண்ணில் பிறந்து மனைவியை (சீதையை) பிரிந்து வாழ வேண்டியேற்பட்டதாம். இன்று இராமன் பெயரில் செய்யும் கூத்தம் சமூகத்தின் இழிந்த தண்டைக்குரிய குற்றங்களே. குற்றவாளிகளை வழிபடக்கோருவதும், அந்த நாய்களை முதன்மைப்படுத்துவதும் சமூகத்தின் அறிவற்ற மூடத்தனத்தில், சிலர் பிழைத்துக் கொள்ளும் பிழைப்பல்லவா.?
மகளைக் (சரஸ்வதியை) கற்பழித்த பிரம்மன் இந்துக் கடவுள்களில் ஒருவர். பிரம்மன் தன் சரீரத்தில் இருந்து தனது மகளாக சரஸ்வதியை கல்விக்காக பெற்று எடுத்தாராம். பெத்த மகளின் அழகைக் கண்டு பிரம்மன் காமம் கொண்டு கற்பழிக்க முயல, சரஸ்வதி பெண் மான் உருவம் எடுத்து ஒடினாளாம். உடனே பிரமன் தானும் ஆண்மான் வேடமிட்டு துரத்திச் செல்ல, சிவன் வேடன் உருவெடுத்து பிரம்மனைக் கொல்ல, சரஸ்வதி ஒப்பாரி வைத்து அழ, சிவன் மனமிரங்கி பிரம்மனை உயிர்பிக்கப்பட்ட நிலையில், மகள் சரஸ்வதி பிரம்மனின் மனைவியானாள். அதேநேரம் மற்றொரு விளக்கப்படி சரஸ்வதி பிரம்மனின் பேர்த்தியான நிலையில் பிரம்மனின் மனைவியானாள். ஒருநாள் ஊர்வசி மீது காமம் கொண்டபோது பிரம்மனுக்கு விந்து வெளியேற, அதை ஒரு குடத்தில் எடுத்து வைத்தாராம். அந்த குடத்தில் இருந்து உருவான அகத்தியன் சரஸ்வதியை பெற்றானாம். இன்று சொந்த மகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஆணாதிக்க இந்துமதக் கடவுள்களே வழிகாட்டுகின்றனர். இது மனைவி, மகள் என்ற எந்த எல்லையுமற்ற நிலையில் கற்ப்பழிப்புகள் சர்வசாதாரணமாக நடக்கின்றது. இதை இந்துமதம் போற்றி புகழ்ந்து வழிகாட்டுகின்றது.
பெண்களை நிர்வாணமாக்கி ரசித்த ஆணாதிக்க காமுகன் சிவன் இந்துகளின் கடவுள். "இராவணனின் மனைவி மண்டோதரியை இச்சித்து புணர்ந்ததும், அருந்ததியிடம் அவளை இச்சித்து நிர்வாணமாக பிச்சை போடும்படி கேட்டு, சிவன் சாபம் பெற்று சிசுவானது ஆணாதிக்க காமமாகும்." இதே சிவன் துரோணாச்சாரி மனைவியிடம் விருந்து சாப்பிட சென்ற இடத்தில், ஆணாதிக்க வக்கிர காமம் கொண்டு விந்து வெளியேற்றிய நிகழ்ச்சியை போற்றும் இந்துமதம் பெண்களின் எதிரியல்லவா.? இன்றைய சினிமா, இன்றைய விளம்பரங்கள், இன்றைய டிஸ்கோக்களின் தந்தை சிவன் என்றால் தவறோ.? உலகமயமாதல் பெண்ணை உரிந்த நிர்வாண நுகர்வு வக்கிரத்தில், மூலதனச் சந்தையை ஜனநாயகப்படுத்தி பெண்ணியமாக்கும் வழியில், உலகை வீரநடை போட வைக்கும் ஆணாதிக்க போக்கு சிவன் தந்தையல்லவா.? இதனால் தான் இந்து ராச்சியம் உருவாக்க பிரகடனம் செய்பவர்கள், ஏகாதிபத்தியத்திடம் சோரம் போகின்றனரோ.?
வள்ளியம்மையின் பிறப்பு மிருகபுணர்ச்சியாகும். காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையை பெற்றார். இந்த கடவுள்களை, புராணங்களை, இதிகாசங்களை நாம் பின்பற்றலாமா.? இவை ஆணாதிக்க வக்கிர புத்தியல்லவா.?
விபச்சாரியிடம் சுந்தமூர்த்திக்காக தூது போன சிவனின் ஒழுக்கம் என்ன? சுந்தரமூர்த்தி நாயனார் ஆணாதிக்க இந்து மதத்தை பாதுகாக்க மக்களுக்கு எதிராக, பார்ப்பனருக்காக பொய்யும் புரட்டுகளையும் கூறித்திரிந்த போது, இரண்டாவது வைப்பாட்டியாக விபச்சாரி மீது ஆசை கொள்ள, அவள் மறுக்க, சிவன் தரகுவேலை பார்த்து (ஏகாதிபத்தியத்துக்கு செய்வது போல்) கடவுளின் பெயரில், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஆணாதிக்க காமத்தை தீர்த்து வைத்தார். இதை நாம் போற்றலாமா?
இந்து மதப் பிறப்புகள் பல நூறு இது போன்று வக்கரித்த ஆணாதிக்க பிறப்பாகும். பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டி தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச்சேர்க்கை, சுய புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சிவடிவங்களை இந்து புராண இதிகாசங்களாக இந்து மதம் நியாயப்படுத்தி ஆணாதிக்க வக்கிரமாக காணப்படுகின்றது. இன்று பாலியலில் புரட்சி செய்வதாக கூறிக்கொள்ளும் பின்நவீனத்துவ சாக்கடைகளின் பாலியல் தந்தைமார்கள், இந்து பார்ப்பனிய ஆணாதிக்க இந்து மதத்தில் செறிந்து நிறைந்து காணப்படுகின்றனர். சில மாதிரி வடிவங்களை மட்டுமே இந்துமத புராண இதிகாசங்கள் சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தையும், பின்நவீனத்துவ அழுகல்களையும் புரிந்துகொள்ள இந்த வக்கிரங்களே எமக்கு போதுமானவை.
மற்றைய மதங்களில் உள்ள ஆணாதிக்க விடயங்களும் பல இடங்களில் அலசப்பட்டுள்ளன. அவற்றினையும் மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.
இணைத்தவை ஆபாசம் என்போர் இந்து சமயத்தின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே சொல்லுவதைக் கேட்கச் சொல்லுகின்றனர்.
இந்து மதம் தோன்றிய இந்தியாவில் பல பிற்போக்கான விடயங்கள் தற்போதும் உள்ளன. அவை பிற நாடுகளிலும், பிற இனத்தவரிலும் காணப்படுகின்றன என்பதும் உண்மை.
இத்துடன் இந்த நீண்ட கட்டுரை முடிகின்றது.