ஆண்களில் 35 முதல் 60 சதவீதம் வரை சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதையும், இதனோடு வயது மூப்பு சேர்ந்துகொள்ளும் போது பாதிப்பின் அளவு அதிகரித்து விடுவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.
ஐம்பது வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் அனைவரிடமும், அதாவது சர்க்கரை நோயினால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஆண்மைக் குறை இருக்கும். இவ்வாறே முப்பத்தைந்து வயதில் நரம்பு பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கும் ஆண்மைக் குறைவு வரும்.
ஒருவருக்கு நரம்புத் தளர்ச்சி மற்றும் ரத்த நாளப் பிரச்னை இருக்கிறது என்றாலே அவருக்கு ஆண்மை எழுச்சியில் குறை உள்ளது என்பதை அவர் சொல்லாமலேயே தெரிந்து கொள்ளலாம்.
ஒருவருடைய உடலுறவு நிகழ்வின்போது உறுப்பு துவண்டு வருகிறது அல்லது முன்பைப்போல் விரைப்பாகச் செயல்பட முடியவில்லை என்றால் அவருக்கு சர்க்கரை வியாதியிருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
பாதிக்கப்பட்டோருக்கு விறைப்புத் தன்மை இல்லாமை, விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்து காணப்படுதல், குறைவான அளவு விந்து, உடலுறவின்போது சிறுநீர் கசிதல் போன்றவை இருப்பதாக ஆண்கள் கூறுகிறார்கள். உடலுறவின்போது கடுமையான எரிச்சல், பிறப்புறுப்பில் வறட்சி. பிறப்புறுப்புப் பகுதியில் நோய்த்தொற்று போன்ற குறைகள் தோன்றும்.
சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகின்றன. ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு விரைவில் சிதைந்துவிடுகின்றன. இதனால் விறைப்புத்தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுகிறது. விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்து விடுதல், ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்னைகள் தோன்றுகின்றன.
ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளாத வர்களில் ஐம்பது சதவீதத்தினர், அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்மைக் குறைவுக்கு ஆளாகிறார்கள்.
பெண்களின் பாலுறுப்புகள் அவர்களுடைய உடலில் உட் புறத்தில் அமைந்துள்ளது. அவர்களுக்குத் தோன்றும் கிளர்ச்சி நிலைகளும், எழுச்சிகளும் வெளியே தெரிவதில்லை. ஆனால் ஆண்களுக்கு அவ்வாறு இல்லை. பாலுறுப்பு வெளியே உள்ளது. அந்த உறுப்பும் விறைப்படைந்தால் மட்டுமே உடலுறவுகொள்ள இயலும். இயலாவிட்டால் உடலுறவுகொள்ள முடியாது.
விறைப்பை ஏற்படுத்தும் காரணிகள் எல்லாம் சர்க்கரை வியாதியின்போது சிதைக்கப்படுகின்றன என்பது பொதுவான விஷயம். ஆனால் ஆண்கள் கூடுதலாக புகை, போதை மற்றும் மது போன்ற பழக்கங்களில் ஈடுபடுதல், கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்தல், அதிகமாக மன இறுக்கம். வேலைச் சுமை, டென்ஷன், அதிகமான சொகுசாக வாழ்தல் போன்று பல காரணிகளுடன் அதிக தொடர்பு கொண்டிருக்கிறார்கள். ஓய்வில் அதிக நாட்டத்தைக் காட்டுகிறார்கள்.
இதளால்தான் அவர்களுக்கு சர்க்கரை வியாதியால் அதிக பாதிப்புகள் உண்டாகின்றன.
உடலுறவு கொள்வது அவசியமா என்றால், உடலுறவுதான் சமூகத்தின் மிகப் பெரிய அந்தஸ்தாக, ஆளுமைத் தன்மையின் அடையாளமாக, ஆண்-பெண் கூட்டு வாழ்க்கையில் அச்சாக கருதப்படுகிறது. உடலுறவில் சோபிக்காதவர்கள் தாழ்வு மனப்பான்மை அடைகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, நிராகரிக்கப்பட்டுவிடுகிறார்கள் என்பதும்கூட அவர்களுக்கு துயரமான ஒரு நிகழ்வுதான்.
செக்ஸ் விஷயத்தில் பலவீனமாக இருந்தால் அவரது எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம் என்னவென்றால், மனித உடலுறவு என்பது ஆளுமை சார்ந்த விஷயம், திருமணமான பின்பு செக்ஸ் என்பது சமூகம் அங்கீகரித்த ஒரு விஷயம்.
ஆண்மைக் குறைவினால் செக்ஸ் இன்பத்தை இழப்பது என்பது ஆளுமையை, அங்கீகாரத்தை இழக்கிற விஷயமாக கருதப்படுவதால்தான் எத்தகைய நோயின்போதும் ஆண் தன்னை செக்ஸ் ஆதிக்கம் உள்ளவனாக நினைத்துக் கொண்டு நடைபோடுகிறான்.
ஆனால், சர்க்கரை நோயின்போது மட்டும் இந்த நினைப்பு செல்லாக்காசாகி விடுகிறது. கட்டுப்படாத சர்க்கரை வியாதி ஆணின் உடலுறவுக்கு அச்சாரமான ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையையும். உடலுறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் முற்றிலும் போக்கிவிடுகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
படுக்கையறை விஷயங்களில் ஈடுபாடு காட்டுவதை பசி என்றே சொல்கிறார்கள். வயிற்றுப்பசியைப்போல் இதையும் உடல் பசி என்கிறார்கள்.
விடலைப் பருவத்தில் ஹார்மோன்கள் துவங்கிவைக்கிற இந்த விளையாட்டு, மனிதன் முடிந்துபோகும்வரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
ஹார்மோன் சுரப்பு இருந்தாலும், குறைந்தாலும் ஆசை மட்டும் குறைவதில்லை.
அப்படியிருந்தும், படுக்கையறை விஷயங்களில் அவ்வள வாக ஈடுபாடு இல்லாமலும். ஈடுபாட்டுடன் நடந்து கொண்டாலும் முழுமையான அளவு திருப்தியடையாமலும், உடலுறவில் ஈடுபட முடியாத அளவுக்கு விறைப்புத் தன்மை குறைந்த நிலையிலும், சில சமயம் விறைப்புத் தன்மையே இல்லாமலும் போய்விடுவோரின் எண்ணிக்கை மிக அதிகம்.
நடுத்தர வயதைத் தாண்டிய பல்லாயிரக்கணக்கானவர்கள் மேற்கூறிய ஏதேனும் ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டிருப் பார்கள். இந்த பாதிப்புகள் பெரும்பாலும் சர்க்கரை வியாதியால்
வருகின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனதும் பலருடைய செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதற்கு காரணமாகும்.
டெஸ்டோஸ்டீரான் என்ற பாலின ஊக்கி ஹார்மோன்களின் குறைபாட்டினாலும் உடலுறவு வேட்கை குறைந்துவிடும். இதை மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடித்து சிகிச்சை மேற்கொண்டாலும் உடலுறவில் வேட்கை வந்துவிடும்.
சர்க்கரை நோய் நரம்புகளை முடக்கிவிடுவதால் இயல்பு நிலையிலேயே உடலுறவு எழுச்சிக் குறைபாடுகள் வருவதால், இந்த வியாதியை முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மறந்துவிடக் கூடாது. மற்ற மாத்திரைகளால் ஏற்படும் பக்க விளைவுகள், உடலுறவு வேட்கை இயல் பாகவே குறைந்து போயிருத்தல், உணவு முறை மாற்றத்தால் உடலுறவு வேட்கை குறைந்திருத்தல் என எத்தகையப் பிரச்னையிருந்தாலும் அதை முதலில் அனுபவம் வாய்ந்த பாலியல் நிபுணரிடம் கலந்தாலோசித்து, பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்றால் சிக்கல் தீர்ந்துவிடும்