60 வயதான அமேசான் நிறுவனர் மறுமணம்.. காதலியை கைப்பிடிக்கிறார்..!
15 Nov,2024
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் என்பவருக்கு தற்போது 60 வயதாகி உள்ள நிலையில், அவர் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும், தனது நீண்ட நாள் காதலியான 54 வயது தொலைக்காட்சி பிரபலம் லாரன்ஸ் சான்செஸ் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்பென் என்ற நகரில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும், திருமணத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திருமண விழாவில் அமெரிக்காவில் உள்ள பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லாரன்ஸ் சான்செஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகிய இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.