பூமியை விட விண்வெளி மிகவும் வித்தியாசமானது. அங்கு இயற்பியல் விதிகள் பல மீறப்படுகின்றன. ஆனால் சமீபத்தில் விண்வெளி சுற்றுலாவுக்கு அதிக டிமாண்ட் எழுந்திருக்கிறது. இப்படி சுற்றுலா செல்பவர்கள் விண்வெளியில் செக்ஸ் வைத்துக்கொண்டு கருவுற முடியுமா? என்பது குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
விண்வெளி நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. இப்போதுதான் இதில் சில விஷயங்களை புரிந்துக்கொண்டிருக்கிறோம். விண்வெளி ஆய்வுகள் ஒரு பக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், மறுபுறும் விண்வெளி சுற்றுலா குறித்த ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. இரவும் பகலுமாக பயிற்சி பெற்று, பல இயற்பியல் கணக்குகளை படித்து புரிந்துக்கொண்டு, உயிரை பணயம் வைத்து விண்வெளிக்கு சென்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது.
" இப்போதெல்லாம் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல வேண்டும் எனில், நீங்கள் ரூ.4.1 கோடி பணமும், லைட்டான பயிற்சியும் பெற்றிருந்தால் போதும். விண்வெளியில் சிறகடிக்கலாம். வெளிநாடுகளில் விண்வெளி சுற்றுலாவுக்கு அதிகமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ப்ளூ ஆரிஜின், வெர்ஜின் கேலக்டிக், ஸ்பேஸ் எக்ஸ், ஆக்ஸியோம் ஸ்பேஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் உங்களை விண்வெளிக்கு அழைத்து செல்ல தயாராக இருக்கின்றன.
விண்வெளியில் ஒரு சில மணி நேரம் நீங்கள் மிதக்கலாம். பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்புவீர்கள். இது வெறும் தொடக்கம்தான். இனி வரும் நாட்களில், விண்வெளியில் உணவு சாப்பிடலாம், விண்வெளியில் டீ குடிக்கலாம், விண்வெளியில் லவ் ப்ரபோஸ் செய்யலாம். இதற்கான அனைத்து வசதிகளையும் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள் கொடுக்க தயாராக இருக்கின்றன. எனவே விண்வெளி சுற்றுலாவின்போது,
விண்வெளியில் இருக்கும் நேரம் அதிகரிக்கும். ஓரிரண்டு நாட்கள் அங்கேயே தங்கவும் வாய்ப்பிருக்கிறது. இது இன்னும் கொஞ்ச காலம் போனால் வாரக் கணக்கில், மாதக்கணக்கில் அங்கேயே தங்கி இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும். அப்படி இருக்கும்போது விண்வெளியில் செக்ஸ் வைத்துக்கொள்ளவும் சிலர் யோசிக்கக்கூடும். யோசனை தவறில்லை.. ஆனால் இப்படி செய்வதன் மூலம் கருவுற முடியுமா? என்பதே கேள்வி. இது குறித்து கேடலோனியாவின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டெக்சியஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் சில ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதில், விண்வெளியில் இருக்கும்போது விந்தணுக்கள் வீரியமாக இருப்பதில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. "
" பூமியில், ஈர்ப்பு சக்தி இருக்கும் இடத்தில் இருந்தால், மனித விந்தணு நீந்தி சென்று கரு முட்டையை அடையும். இதுவே இந்த விந்தணுக்கள் விண்வெளியில் இருந்தால், அதாவது ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் இருந்தால், அவை சீக்கிரமாக இறந்து விடுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் மீறி உயிருடன் இருக்கும் சில விந்தணுக்கள் நீந்தி செல்லும் திறன் இல்லாமல், ஒரே இடத்தில் மந்தமாக சுற்றி வருவதையும் கண்டுபிடித்துள்ளனர். இதன் அடிப்படையில் பார்த்தால் விண்வெளியில் கருவுறுதல் என்பது சாத்தியமில்லாததாக தெரிகிறது. விண்வெளியில் நியூட்டன் விதிகளை விந்தணுக்கள் மீறுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எதிர்காலத்தில் பூமி போன்றே இருக்கும் மற்றொரு கிரகத்திற்கு நாம் பறக்க வேண்டும் எனில், ஆண்டுக்கணக்கில் விண்வெளியில் பயணம் செய்ய வேண்டி வரும். அப்போது மனித குலத்தை விருத்தி செய்ய செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டாலும், கருவுறுதல் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.