பிரேசில் ஏர்போர்ட்டில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி
10 Nov,2024
பிரேசில் நாட்டின் குவாருல்கோஸ் நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய விமான நிலையம் ஆகும். இங்கு நேற்று முன்தினம் இரவு காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் சிலர் விமான நிலையத்துக்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் விமான நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் பலத்த காயமடைந்தனர். பலியானவர் கிரிப்டோ கரன்சி வணிகத்தில் ஈடுபட்டு வந்த அன்டோனியோ வினிசியஸ் லோபஸ் கிரிட்ஸ்பெச் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.