அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகி பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில், டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தொர்பிலான இளம் பெண்ணொருவரின் காணொளி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய தந்தை என்று கூறியுள்ள காணொளியே தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில், அந்த இளம் பெண் ட்ரம்ப் தனது தந்தை என்று கூறுவதைத் தாண்டி பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் தனது தாயை இவானா என்று அடையாளம் காண்பது மற்றும் அவரது "பெற்றோர்களுக்கு" இடையே கூறப்படும் முரண்பாடுகளை விளக்குவது போன்ற கூடுதல் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த இளம் பெண் கூறியதாவது,“ எனது பெற்றோர்களிடையே ஒரு விரிசல் காணப்படுகிறது. எனது தாய் இவானா என்னைக் கவனித்துக்கொள்வதில்லை, என் மகளை உன்னால் கவனிக்க முடியாது என டிரம்ப் கூறுவார்.
வெளிநாட்டினர் இங்கு வந்து என்னை பார்த்துவிட்டு போகிறார்கள். நான் இங்கு என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என ஆதங்கப்படுகிறார்கள். நான் எனது தந்தையை சந்திக்க அமெரிக்கா செல்ல இருக்கிறேன்"என்று கூறியுள்ளார்.
இந்நிலையில்,குறித்த காணொளி, முதலில் 2018 ஆம் ஆண்டில் பதிவேற்றப்பட்டு சமீபத்தில், மீண்டும் தோன்றியுள்ளது.
அத்துடன், இந்த காணொளி குறித்து ஏராளமான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இதேவேளை, டிரம்ப்பின் முதல் மனைவி இவானா, செக் குடியரை சேர்ந்த பிரபல மாடல் அழகியாவார்.
இவர்கள் இருவருக்கும் 1977ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. எனினும், 1990லேயே இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.
இவர்களுக்கு டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவான்கா டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் என மூன்று குழந்தைகள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.