சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் 6 மாதகால ஆராய்ச்சி, பூமி திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்
04 Nov,2024
சீனாவின் நிரந்தர விண்வெளி ஆய்வு மையத்தில் 6 மாத கால ஆராய்ச்சியை முடித்து கொண்டு அந்நாட்டின் 3 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். பூமியிலிருந்து சுமார் 393 கிலோ மீட்டர் உயரத்தில் கடந்த 2020 ஆண்டு ஜியாங்காங் என்ற நிரந்தர விண்வெளி மையத்தை சீனா நிறுவியது.
2022 ஆம் ஆண்டு முதல் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வந்த இந்த விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள 3 வீரர்களை இந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி சீன அரசு விண்வெளிக்கு அனுப்பியது. 3 விண்வெளி வீரர்கள் சீன விண்வெளி மையத்தில் 6 மாத காலம் தங்கி தங்களது ஆராய்ச்சியை முடித்தனர். அவர்கள் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியோடு நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
வடக்கு சீனாவில் உள்ள மங்கோலியாவில் உள்ள பரந்த நிலப்பரப்பில் வந்து இறங்கினர். சீனா தனது விண்வெளி பயணத்திட்டத்திற்கு ஸென்ஸௌவ் என்று பெயரிட்டிருந்தது. 6 மாத காலம் விண்வெளியில் இருந்த 3 வீரர்களும் மே 28, ஜூலை 3 ஆகிய தேதிகளில் ஸ்பேஸ் வாக் எனப்படும் விண்வெளி நடையை மேற்கொண்டனர்.
அத்துடன் விண்வெளியில் மிதக்கும் உடைந்த செயற்கை கோல் பாகங்கள் விண்வெளி மையத்தின் மீது மோதாமல் இருக்க பாதுகாப்பு கருவிகளையும் பொருத்தினர். தற்போது இவர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பிய நிலையில் சீனாவின் இந்த சாதனை அதன் விண்வெளி ஆராய்ச்சியில் மற்றும் ஒரு மயில்கல்லாக பார்க்கப்படுகிறது.