இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
03 Nov,2024
கனடா நாடு, தங்கள் நாட்டின் சைபர் எதிரியாக ஏற்கனவே நான்கு நாடுகளை அறிவித்த நிலையில், தற்போது இந்தியாவை ஐந்தாவது நாடாக சேர்த்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் காட்டி வருகிறது. இதன் காரணமாக இந்தியா-கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மிரட்டல் மற்றும் உளவுத் தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதனால் கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவை சைபர் எதிரி நாடாக கனடா அறிவித்துள்ளது. ஏற்கனவே சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளை சைபர் எதிரி நாடாக கனடா அறிவித்துள்ள நிலையில், ஐந்தாவது நாடாக இந்தியாவின் பெயரை கனடா சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அறிக்கை ஒன்றை கனடிய இணைய பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.