3 வயது குழந்தை பலாத்காரம்.. எரித்துக் கொன்ற கொடூர உறவுக்கார இளைஞன்
02 Nov,2024
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே உள்ள கிராமத்தில் 3 வயது குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உறவுக்கார இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
பொதுவாக இதுபோன்ற பாலியல் பிரச்னைகள் நன்கு தெரிந்த உறவினர்களாலேயே குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. "காதலியுடன் உல்லாசமாக இருக்க.. மனைவிக்கு கணவர் செய்த காரியம்.. என்னன்னு பாருங்க ஆடிப்போயிருவீங்க? " குடும்பத்தில் ஒருவராகப் பழகி குழந்தைகளிடம் நன்கு தெரிந்தவர்களாக மாறும் உறவினர்களாலேயே குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது. ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் முறையாக அவர்களுக்கு நல்ல தொடுதல், தீய தொடுதல் எனும் குட் டச், பேட் டச் குறித்து பெற்றோர்களும், ஆசிரியர்களும் கற்றுத் தருவது அவசியமாகும். அதேபோல, தெரிந்த நபர்களாகவே இருந்தாலும் முத்தம் கொடுப்பது, மடியில் அமரவைத்து கொஞ்சுவது போன்ற செயல்களைச் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று குழந்தை நல ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
எந்தவொரு பகுதியாக இருந்தாலும் பெற்றோர் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், திருப்பதி அருகே உள்ள கிராமத்தில் உறவுக்கார இளைஞர் 3 வயது குழந்தையை மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உறவினர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரையை அதிரவைத்த சம்பவம் " ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள வடமலைபேட்டை பகுதி அருகே உள்ளது ஏ.எம்.புரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள யனடி காலனியைச் சேர்ந்த பெற்றோர் தங்களது 3 வயது பெண் குழந்தையைக் காணவில்லை என்று காவல் துறையிடம் நேற்று மாலையில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள காணாமல் போன குழந்தையின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, பெண் குழந்தை ஒன்று வயல் பகுதியில் சடலமாகக் கிடப்பது தெரியவந்துள்ளது. அந்தக் குழந்தை காணாமல்போன குழந்தைதான் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த சிறுமியின் 22 வயதான உறவுக்கார இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், சாக்லேட் வாங்கிக் கொடுத்து 3 வயது பெண் குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் குழந்தையைக் கொன்று, எரித்துள்ளதும், வயலில் புதைத்ததும் தெரியவந்துள்ளது. விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து போலீஸார் அந்த இளைஞரைக் கைது செய்தனர். "
" இதையடுத்து, சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக புத்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று எம்எல்ஏ கலி பானு பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார். 3 வயது குழந்தையை உறவுக்கார இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.