தேர்தல் திருவிழா
29 Oct,2024
தேர்தல் திருவிழாக்
காலமிது-தன்
தேவைக்கு வாக்குறுதி
மழை கொட்டும் நேரமிது.
வாசலுக்கு வந்துநிற்கும்
வருங்கால..
தலைவர்களைப் பாருங்கள்
வாக்குறுதிப் பொட்டலத்தை
வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே
தேன் இருக்கும்
தினைமா இருகும்
தித்திகும் பண்டங்கள்
நிறைந்திருக்கும்-தமிழ்
தேவைகள் அனைத்தும்
நிவர்த்தி செய்வதாய்-பல
திட்டங்கள் எம்முன்னே
கொட்டிக் கிடக்கும்.
வாக்குதனை
வாங்கிப்போனபின்னோ?
உங்களிடம்வெறும் வாய்
மட்டுமேயிருக்கும்.
பசியிருக்கும் கியூவிருக்கும்
பட்டினியே தொடர்திருக்கும்
அரசமரத்தடியில்
புத்தர் சிலையிருக்கும்.
போதையால் அழிக்கும்
போர் இருக்கும்.
அவர்களிடமோ?
சொகுசுக் காரிருக்கும்
மாளிகை வீடிருக்கும்
Fபார் இருக்கும்
அவர்களுக்கு நிறையப்
படியிருக்கும்.
இவ்வளவு காலமாய்
இதுவே!நடந்தது.
இம்முறையாவது மாறுமா?
இல்லையேல் இதுவே
வாழ்க்கையா?
இனங்களின் பிரச்சனை
தீருமா?
இலங்கையும்
உலகோடு உயருமா?