கணவர் மாரடைப்பால் மரணம்! ஊரை நம்ப வைத்த கில்லாடி மனைவி! காட்டி கொடுத்த சிசிடிவி!
20 Oct,2024
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, தனது கணவரை கொலை செய்துவிட்டு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். பெலகாவி ஆஞ்சநேய நகரை சேர்ந்தவர் சந்தோஷ் பத்மன்னவர் (47). இவருடைய மனைவி உமா (42). இவர்களுக்கு சஞ்சனா என்ற 18 வயதில் மகள் இருக்கிறார்.
இவர் பெங்களூரில் தங்கி பட்டப்படிப்பு படித்து வருகிறார். "ஆயுர்வேத கிளீனிக்கிற்கு மஃப்டியில் போன போலீஸ்! மூடிய அறையில் அரைகுறை ஆடையில் அழகிகள்! மதுரையில் ஷாக் " இந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி சந்தோஷ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தனது மகள் சஞ்சனா உள்பட அவர்களது உறவினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து சந்தோஷிற்கு இறுதி மரியாதை செலுத்த உறவினர்கள் எல்லாம் வந்தனர்.
அவருக்கு இறுதிச் சடங்கை நடத்திய நிலையில் சஞ்சனாவுக்கு தனது தந்தை இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் தனது வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை பார்க்க சஞ்சனா முற்பட்டார். ஆனால் உமாவோ அவரை தடுத்து நிறுத்தினார். இது சஞ்சனாவுக்கு சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது. இதையடுத்து தனது தாய்க்கு தெரியாமல் சிசிடிவி காட்சிகளை பார்க்க முயன்ற சஞ்சனாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அதாவது அவரது தந்தை இறந்த நாளுக்கு முந்தைய நாள் முதல் அவரது தந்தை இறந்த நாள் வரையிலான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தனது தாய் மீது சஞ்சனாவுக்கு சந்தேகம் வலுத்தது. "
" உடனே காவல் நிலையத்தில் சஞ்சனா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சந்தோஷின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. இவருடைய பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே போலீஸார் அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது உமா, யாருடனோ இரவு நேரத்தில் பைக்கில் உட்கார்ந்திருந்த காட்சிகள் வெளியானது. இதைத் தொடர்ந்து உமாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்திருந்தார். பிறகு அவரிடம் தீர விசாரித்த போது மங்களூரை சேர்ந்த ஷோபித் என்பவருடன் உமாவுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. இது நாளடைவில் காதலாக மாறியது. இப்படியே கள்ளக்காதலை இவர்கள் தொடர்ந்த நிலையில் இந்த விவகாரம் சந்தோஷிற்கு தெரியவந்தது.
ஆத்திரமடைந்த அவர், "18 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். இதெல்லாம் வேண்டாம்" என உமாவிடம் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அதை கேட்காமல் மேலும் தனது கள்ளக்காதலை தொடர்ந்ததால் சந்தோஷ் ஆத்திரமடைந்து உமாவை கடுமையாக கண்டித்தார். "வேலூரையே வெலவெலக்க வைத்த வாய் சண்டை.. கடித்தவரின் மூக்கை பதிலுக்கு கடித்தே துப்பிய தொழிலாளி " இதனால் எங்கே கள்ளக்காதலை தொடர முடியாமல் போய்விடுமோ என அஞ்சிய உமா, கள்ளக்காதலன் ஷோபித்துடன் இணைந்து கொலைக்கான திட்டத்தை தீட்டினார். சரியாக அக்டோபர் 8ஆம் தேதி, தனது கணவருக்கு தூக்க மாத்திரைகளை உமா கொடுத்துள்ளார்.
பிறகு அவர் தூங்கிக் கொண்டிருந்த போது ஷோபித்தையும் அவரது நண்பரையும் வீட்டிற்கு அழைத்தார் உமா. பிறகு மூவரும் சேர்ந்து தலையணையால் அமுக்கி சந்தோஷை கொன்றனர். அதில் அவர் இறந்ததை அடுத்து மாரடைப்பு நாடகத்தை உமா அரங்கேற்றினார். தனது வீட்டு சிசிடிவி காட்சிகளை அவர் டெலிட் செய்தாலும் அக்கம் பக்கத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளால் இன்று வசமாக சிக்கினார்.