ஆயுர்வேத கிளீனிக்கிற்கு மஃப்டியில் போன போலீஸ்! மூடிய அறையில் அரைகுறை ஆடையில் அழகிகள்!
19 Oct,2024
மதுரையில் ஆயுர்வேத கிளீனிக் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதுரையில் ஸ்பா, பியூட்டி பார்லர் என்ற பெயர்களில் இயங்கும் சில இடங்களுக்கு உள்ளே போனால் பாலியல் தொழில்கள் நடைபெறுவதாக போலீஸாருக்கு அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இது போல் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்ததால் போலீஸார் அந்த இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கோமதிபுரம் மருதுபாண்டியர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஆயுர்வேத கிளீனிக் என்ற பெயரில் பாலியல் தொழில் நடந்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமா மாலா தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது கிளீனிக்கின் தொலைபேசி எண்ணில் நோயாளிகள் போல் போலீஸார் பேசினர். இதைத் தொடர்ந்து அப்பாயிண்ட்மென்ட் பெற்றுக் கொண்டு சிகிச்சைக்கு செல்வது போல் உள்ளே சென்றனர். அப்போது அங்கு தனித்தனி அறையில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது தெரியவந்தது. அங்கு பணியில் இருந்த விருதுநகரை சேர்ந்த மேனேஜர் செல்வராணி, திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஊழியர் பிரபாகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் மணிகண்டன் என்பவர் ஆயுர்வேத கிளீனிக் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்ததும் இதற்காக ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட வெளியூர்களில் இருக்கும் பெண்களை பணத்தாசை காட்டி மூளைச்சலவை செய்து ஏமாற்றி அழைத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து செல்வராணி (30), பிரபாகரன் (25) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் மணிகண்டன் என்பவரை தேடி வருகிறார்கள். ஏற்கெனவே எஸ்.எஸ். காலனி பகுதியில் சட்டவிரோதமாக மணிகண்டன் ஸ்பா நடத்தி கைதானவர் என போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் வேறு எங்காவது ஸ்பா நடத்தி வருகிறார்களா, இதுவரை எத்தனை பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதைத் தவிர பெண்களை வேறு யாருக்காவது விற்பனை செய்துள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.