ஹமாஸ் மீண்டும் பீனிக்ஸ் போல சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் - சிரேஸ்ட தலைவர்
09 Oct,2024
ஹமாஸ் அமைப்ப பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் என நாடு கடந்து வாழும் அதன் தலைவர்களில் ஒருவரான காலிட்மெசெல் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுடனான கடந்த ஒரு வருடகால யுத்தத்தின் போது பலத்த இழப்புகளை ஹமாஸ் சந்தித்துள்ள போதிலும் அந்த அமைப்பு புதிய போராளிகளை சேர்த்து வருகின்றது ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது என தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் அமைப்ப பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் என குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடனான கடந்த ஒரு வருட மோதலை 76 வருடகால வரலாற்றுடன் பாலஸ்தீனியர்கள் நக்பா என அழைப்பதுடன் தொடர்புபடுத்தி ஹமாஸின் நாடு கடந்து வாழும் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
1948 இல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு காரணமான யுத்தத்தினால் பாலஸ்தீனியர்கள் பெருமளவில் இடம்பெயர நேர்ந்ததை நக்பா என பாலஸ்தீனியர்கள் அழைக்கின்றனர்.
பாலஸ்தீன வரலாறு பல சுற்றுக்களை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் தியாகிகளை இழந்தஎங்கள் இராணுவதிறமையின் ஒரு பகுதியை இழந்ததருணங்களை எதிர்கொண்டுள்ளோம்ஆனால் பின்னர் பீனிக்ஸ் போல பாலஸ்தீனியர்களின் உணர்வுகள் மீளஉயிர்த்தெழும் என அவர் தெரிவித்துள்ளார்.
1996 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக விளங்கிய மெசாலை விசஊசியை பயன்படுத்தி கொலை செய்வதற்கு 1997 இல் இஸ்ரேல் முயன்றமை குறிப்பிடத்தக்கது.
நெட்டன்யாகு அரசாங்கம் அதிகாரத்திலிருக்கும் வரை சமாதானத்திற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ள அவர்இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காணப்படும்வரை மத்திய கிழக்கு எந்த நேரத்திலும் வெடிக்ககூடிய குண்டு போல காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.