இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ், மேக்ரானின் அதிரடி நடவடிக்கை!
06 Oct,2024
காஸா (Gaza) போரில் பயன்படுத்தப்படும் ஆயுத விநியோகத்தை பிரான்ஸ் (France) நிறுத்துவதாகவும், இனி ஆயுதங்களை இஸ்ரேலுக்கு (Israel) விநியோகம் செய்வதில்லை என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
மேலும், காஸா மீதான தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆயுத விற்பனை முன்னெடுக்கவில்லை என்றும் மேக்ரான் (Emmanuel Macron) அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
போர் தற்போதும் தொடரும் நிலையில் காஸாவில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில் அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை இரத்து செய்யாததை அடுத்து மனித உரிமை அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை
ஆனால் இதுவரை இஸ்ரேலுக்கு வெறும் உதிரி பாகங்கள் மட்டுமே பிரான்ஸ் ஏற்றுமதி செய்து வந்துள்ளதாகவும், 2022ல் 15 மில்லியன் யூரோ தொகைக்கு மட்டும் உதிரி பாகங்களை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளதாகவும் பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு வலியுறுத்தி வந்துள்ளார்.
இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்: மேக்ரானின் அதிரடி நடவடிக்கை | Macron Urges Halt Deliveries Weapons Used In Gaza
இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் எதுவும் பிரான்ஸ் வழங்கவில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் உதிரி பாகங்கள் விற்பனையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரான்ஸில் வலுப்பெற்றுள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை உரிமங்களில் சிலவற்றை பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
ஜனாதிபதி மேக்ரான்
இந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கடந்த வாரம், இஸ்ரேலுக்கான புதிய ஆயுத ஏற்றுமதி உரிமங்களுக்கு ஜேர்மனி இடைநிறுத்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் தற்போது ஹிஸ்புல்லா படைகள் மீது போர் தொடுக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் ஆயுத ஏற்றுமதி தடை குறித்து உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.