இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சூரியன் - கன்னி ராசி செவ்வாய் - மிதுன ராசி புதன் - கன்னி ராசி குரு - ரிஷப ராசி சுக்கிரன் - துலாம் ராசி சனி -கும்ப ராசி ராகு - மீன ராசி கேது - கன்னி ராசி
மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்களால் மிகுந்த பலன் அடைவீர்கள். சந்திரனின் இட மாறுதல்கள் வியாபாரத்தில் ஏற்றமான பலன்களை கொடுக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். செவ்வாய் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். கட்டுமான துறையில் முழு முயற்சியுடன் இறங்குவீர்கள். புதிய கடைகள் திறப்பதற்கு ஏற்பாடு செய்வீர்கள். புதன் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளால் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். குரு பகவான் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். அடுத்தவரை நம்பி புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசாங்க ஊழியர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும். சுக்கிரன் 7 ஆம் வீட்டில் இருக்கிறார். கலைத்துறையினர் பேரும் புகழும் அடைவார்கள். அலங்காரப் பொருள் விற்பனையில் அமோக லாபம் பார்ப்பீர்கள். சனிபகவான் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். நிலம் வாங்கி விற்கும் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய வீடு கட்டுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். ராகு 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வீண் வாக்குவாதங்கள் செய்தால் வில்லங்கம் வீடு தேடி வரும். கேது 6 ஆம் வீட்டில் இருக்கிறார். மனைவியின் சொல்லுக்கு மறு பேச்சு வேண்டாம். அனாவசியமான செலவுகளை பிள்ளைகள் இழுத்து விடுவார்கள்.
ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு இடையூறாக இருந்த பிரச்சனைகளை பேசித் தீர்ப்பீர்கள். உரிய நேரத்தில் நண்பர்கள் உதவிக்கு ஓடி வருவார்கள். தேய்பிறை சந்திரன் தொழிலில் தேக்க நிலைகளை உண்டாக்குவார். சாமர்த்தியமாக தடைகளை தாண்டி வருவீர்கள். செவ்வாய் 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வீண் வாக்குறுதிகளை அள்ளி வீசாதீர்கள். தேவையில்லாத சிக்கல்களை கொண்டு வரும். புதன் 5 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். நேரம் காலம் பார்க்காமல் வியாபாரத்தை விருத்தி செய்ய பாடுபடுவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த சிக்கல்களை பஞ்சாயத்தின் மூலம் தீர்ப்பீர்கள். குரு பகவான் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க ஒப்பந்தங்கள் அனுகூலமாக நடக்கும். எதிர்காலத்திற்காக திட்டமிட்டு சேமிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் அமோகமான லாபத்தை கொடுக்கும். சனிபகவான் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். முழங்கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தகப்பனாரின் மனம் புண்படும்படி நடந்து கொள்ளாதீர்கள். ராகு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆலய திருப்பணிக்கு பண உதவி செய்வீர்கள். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகும். கேது 5 ஆம் இடத்தில் இருக்கிறார்.தொழிலுக்கு எதிராக கிளம்பிய போட்டியாளர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவீர்கள்.
மிதுனம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். நினைத்த காரியம் நிறைவேறாமல் தடைபடுகிறதே என்ற எண்ணம் இதயத்தை அழுத்தும். தொழிலில் முன்னேற்றமான நிலை காணப்படும். மங்கலான திங்களின் சஞ்சாரம் சாதகமான நிலையில் இல்லை. கொடுத்த கடனை வாங்குவதில் சிரமம் உண்டாகும். செவ்வாய் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஹெல்மெட் போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டாதீர்கள். புதன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். வசீகரமாக பேசி புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். குரு பகவான் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். மேல் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு இடம் மாறுதல் ஏற்படும். சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத்துறையினர் வெளிநாடு செல்வார்கள். ஐடி ஊழியர்கள் புதிய சாதனை படைப்பார்கள். சனி பகவான் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவி சொல்லே மந்திரம் என்ற மனப் பக்குவத்தோடு நாட்களை நகர்த்துங்கள். தந்தையாரின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவு செய்வீர்கள். ராகு 10 ஆம் வீட்டில் இருக்கிறார். திடீர் பணவரவால் திக்கு முக்காடி போவீர்கள். தொழிலில் புதிய உச்சம் பெறுவீர்கள். கேது 4 ஆம் வீட்டில் இருக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டி சிலர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வார்கள். பெரியோர்களின் நல்லாசியால் நல்ல செய்தி வரும்.
கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். வியாபார இடங்களில் இன்முகத்தோடு நடந்து கொள்ளுங்கள். தொழில் துறைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். மனதை தளர விடாதீர்கள். சந்திரனின் நகர்வுகளால் சில நன்மையான காரியங்கள் நடக்கப் போகின்றன. நீண்ட காலமாக வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். செவ்வாய் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையாது. ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடிக்கும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்த படாத பாடுபடுவீர்கள். புதன் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். தள்ளிப்போன திருமண வைபவத்தை சொல்லி வைத்த மாதிரி நிகழ்த்துவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பான லாபத்தை கொடுக்கும். குரு 11 வீட்டில் இருக்கிறார். மனம் கசந்து போன உறவுகளை ஒன்று சேர்ப்பீர்கள். குழந்தை பாக்கியம் வேண்டி ஏங்கியவர்கள் நல்ல செய்தியை பெறுவார்கள். சுக்கிரன் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.மனம் குளிர பேசி வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். மனதுக்குப் பிடித்த நபரிடம் காதலை வெளிப்படுத்துவீர்கள். சனி 8 ஆம் வீட்டில் இருக்கிறார். குதர்க்கமாக பேசி குடும்ப அமைதியை கெடுத்து விடாதீர்கள். மனைவியால் வீண் செலவுகள் உண்டாகும். ராகு 9 ஆம் வீட்டில் இருக்கிறார். தைரியமாக ஆன்லைன் வர்த்தகங்களில் ஈடுபடலாம். கேது 3 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... உங்கள் ராசிநாதன் 2 ஆம் வீட்டில் இருக்கிறார். திட்டமிட்டு ஏற்பாடு செய்த வெளிநாட்டு பயணங்கள் தள்ளிப் போகலாம். அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்காதீர்கள். சந்திரனின் நகர்வுகள் சஞ்சலமான மனநிலையை உண்டாக்கும். இரவில் தூக்கம் கெடும். கெட்ட கெட்ட கனவுகள் வரும். செவ்வாய் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். மணல் செங்கல் வியாபாரத்தில் அமோகமாக லாபம் பார்ப்பீர்கள். புதன் 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். உங்களுக்காக எந்த நேரத்திலும் உதவி செய்ய மனதிற்கு பிடித்த நண்பர் காத்துக் கொண்டிருக்கிறார். குரு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். திடீர் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வீர்கள் தொழிலில் புதிய முதலீடு செய்வீர்கள். சுக்கிரன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். உத்தியோகம் பார்க்கும் இடத்தில் அவசியம் இல்லாத காரியத்தில் தலையிடாதீர்கள். பணத்தை கையாளும்போது அதிக எச்சரிக்கை தேவை. சனி 7 ஆம் வீட்டில் இருக்கிறார். உங்களை கவிழ்க்க நினைத்த எதிரிகள் கவலைக்கு ஆளாவார்கள். தொழில் போட்டிகளை துடைத்து எறிவீர்கள். ராகு 8 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். கேது 2 ஆம் வீட்டில் இருக்கிறார். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.
கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... சூரியன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். குடோன்களில் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். நெருப்பு இரும்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வெளியூர் பயணங்களால் அதிக நன்மை இல்லை. உடல் சோர்வு உண்டாகும். சந்திரனின் சஞ்சாரம் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். துணிச்சலுடன் செய்யும் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். கமிஷன் வியாபாரம் லாபம் கொழிக்கும். புதன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். நன்மையும் தீமையும் கலந்து ஏற்படும் வாரம் இது. ஆராய்ந்து பார்க்காமல் அதிக முதலீடு செய்ய வேண்டாம். குரு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் மங்கல காரியங்களால் செலவுகள் கை மீறிப் போகும். பிரிந்து போன உறவுகள் வலிந்து வந்து சேரும். சுக்கிரன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். காதலி கோபித்துக் கொண்டு பேச மறுப்பார். வீட்டில் ஏதாவது குழப்ப நிலை உருவாகும். சனி 6 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதை சாமர்த்தியமாக சரி செய்வீர்கள். ராகு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் மன நிம்மதி குறையும். வீண் வம்புகள் வீடு தேடி வரும். எதிரிகளின் சூழ்ச்சி தொழிலுக்கு இடையூறாக இருக்கும். கேது 1 ஆம் இடத்தில் இருக்கிறார். வாக்கு கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள். தேவையில்லாத பண செலவு அதிகரித்து கடன் வாங்கும் நிலைக்கு கொண்டு வரும்.
துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். பம்பரமாக சுழன்று வியாபாரத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்வீர்கள். தொழிலை ஒரு நிலையான இடத்திற்கு கொண்டு வருவீர்கள். உலவுகின்ற நிலவும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். புதிய திட்டங்களால் வருமானத்தை பெருக்குவீர்கள். செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். திருமண வாய்ப்புகள் கை கூடி வரும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் மறையும். புதன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். நினைத்த காரியத்தை பிடிவாதமாக நிறைவேற்றுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பீர்கள். குரு 8 ஆம் வீட்டில் இருக்கிறார். நண்பர்கள் கூட சில நேரங்களில் விரோதியாக மாறலாம். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள். சுக்கிரன் 1 ஆம் வீட்டில் இருக்கிறார். ஐடி ஊழியர்கள் வேலையில் அபரிமிதமான திறமையை காட்டுவார்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அருமையான லாபத்தை கொடுக்கும். சனி 5 ஆம் வீட்டில் இருக்கிறார். வேலை வேலை என்று அலைந்து வேளா வேளைக்கு சாப்பிட முடியாத நிலை உருவாகும். ராகு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். குலதெய்வ வேண்டுதல் நிறைவேற்றுவீர்கள். ஆன்மீகப் பெரியவரின் ஆதரவு கிடைக்கும். கேது 12 ஆம் இடத்தில் இருக்கிறார். எதையும் யோசித்துப் பேசுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனக்குறைவாக நடந்து கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... சூரியன் 11 ஆம் ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். கூரிய அறிவோடு சீரிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். உங்களுக்காக வெளிநாட்டு வாய்ப்பு காத்திருக்கிறது. சந்திரனின் இடமாறுதல் சில சங்கடங்களை உண்டு பண்ணும். அவற்றை எல்லாம் சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தை பிரிந்து வெளிநாட்டு பயணம் மேற்கொள்வீர்கள். மனைவி மக்களுக்காக நகைகள் வாங்குவீர்கள். புதன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில்துறைகள் வேகமாக முன்னேற்றம் காணும். கூட்டுத்தொழில் அமோகமாக நடக்கும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபத்தை கொடுக்கும். குரு 7 ஆம் வீட்டில் இருக்கிறார். தாயாரின் பூர்வீக சொத்து கைக்கு வரும். திருமண பேச்சு வார்த்தைகள் நடக்கும். சுக்கிரன் 12 ஆம் வீட்டில் இருக்கிறார். ஐடி ஊழியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள் பிரபலமடைவார்கள். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். சனி 4 ஆம் வீட்டில் இருக்கிறார். திரை மறைவு எதிரிகள் சிதறி ஓடுவார்கள். வழக்குகள் சாதகமாக முடியும். சகோதரர் வகையில் செலவு ஏற்படும். சகோதரிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பீர்கள். ராகு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். மற்ற கிரகங்கள் செய்ய தவறுகின்ற நல்ல வாய்ப்புகளை ராகு உங்களுக்கு வழங்குவார். கேது 11 ஆம் இடத்தில் இருக்கிறார். கோயில் திருப்பணிக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். திடீர் பண வரவு உண்டாகும். 27 ஆம் தேதி சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள்.
தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். முயற்சிகளுக்கு பொறாமைகாரர்களால் முட்டுக்கட்டை ஏற்பட்டாலும் திறமையாக போராடி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். கையிருப்பு அதிகரிக்க கடுமையாக உழைப்பீர்கள். சந்திரனின் சஞ்சாரம் வியாபாரத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். புதிய கடைகள் திறப்பீர்கள். வியூகம் அமைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வீடு கட்டுவதற்காக நிலம் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். இரும்பு, மணல், ஜல்லி வியாபாரம் கணிசமான லாபத்தை பெற்றுத்தரும். புதன் 10 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இரவு பகல் பாராமல் உழைத்து பொருளாதார நிலையை மேம்படுத்துவீர்கள். கல்யாண காரியங்களுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். குரு 6 ஆம் வீட்டில் இருக்கிறார். பிரிந்து போன சொந்தங்கள் கூடிவரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டாகும். குழந்தை பாக்கியம் உருவாகும். சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். அறிமுகமில்லாத பெண்ணிடம் அதிக நெருக்கம் காட்டாதீர்கள். அதனால் ஆபத்துக்கள் உருவாகலாம். சனி 3 ஆம் இடத்தில் இருக்கிறார். வாக்கு கொடுத்தால் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் அவமானம் வாசல் படியில் வந்து நிற்கும். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளியூர் பயணங்களால் அலைச்சல் மிகுதியாகும். திடீர் பணவரவு உண்டாகும். கேது 10 ஆம் இடத்தில் இருக்கிறார். பெரிய மனிதர்களின் பழக்கத்தால் வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். Advertisement 27,28,29 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.
மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே.... சூரியன் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலை காரணமாக அதிக அலைச்சல் உண்டாகி அவதிப்படுவீர்கள். பொருளாதார நிலை மந்தமாகி கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சந்திர பகவான் வியாபாரத்திற்கு உறுதுணையாக இருப்பார். வாடிக்கையாளர்களின் வருகையால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். செவ்வாய் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். மனைவியின் பேச்சுக்கு மறு வார்த்தை கூறாதீர்கள். சகோதரிக்கு சீர் செய்வீர்கள். பிள்ளைகளால் கல்விச் செலவுகள் அதிகரிக்கும். புதன் 9 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். தேவையில்லாத மனக் குழப்பங்கள் உண்டாகும். சில விஷயங்களில் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். குரு 5 ஆம் வீட்டில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில், கார் வாங்கி விற்பது போன்ற வியாபாரங்கள் கணிசமான லாபத்தை கொடுக்கும். சுக்கிரன் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உள்ளத்தை பரிமாறிக் கொள்வீர்கள். திருமண காரியங்கள் தடையின்றி நடக்கும். சனி 2 ஆம் இடத்தில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது வளைவுகளில் எச்சரிக்கையாக திரும்புங்கள். ராகு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். அந்தஸ்தை காட்டுவதற்காக ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். கேது 9 இடத்தில் இருக்கிறார். நீண்ட தூர பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு செல்வீர்கள். உறவினர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைப்பீர்கள். 29,30,1 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே... சூரியன் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். "காசிக்கு போறேன் ஆள விடு, இனியாவது என்னை வாழவிடு" என்ற மனநிலையில் இருப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் குழப்பம் உண்டாகும். கவனமாக நடந்து கொள்ளுங்கள். சந்திரன் நன்மையும் தீமையும் கலந்து கொடுப்பார். வியாபாரம் சீராக நடக்கும். நடைபாதை வியாபாரிகள் ஓரளவுக்கு லாபம் சம்பாதிப்பார்கள். செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். நீண்ட காலமாக ஆசைப்பட்ட கார் வாங்குவீர்கள். வீட்டை புதுப்பிக்கின்ற வகையில் அதிக செலவுகள் ஏற்படும். வீட்டு மனை வாங்கி பத்திரப்பதிவு செய்வீர்கள். புதன் 8 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். புத்திசாலித்தனமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டு ஊக்கத்தை கொடுக்கும். குரு 4 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழில் படு வேகமாக முன்னேற்றம் காணும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பழைய பாக்கிகள் உடனுக்குடன் வசூல் ஆகும். சுக்கிரன் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். அறிமுகமில்லாத பெண்களிடம் அதிகம் நெருக்கம் வைத்துக் கொள்ளாதீர்கள். பந்தாவுக்காக செலவு செய்து கடன் தொல்லையில் மாட்டிக் கொள்ளாதீர்கள். சனி ராசியிலேயே இருக்கிறார். வாகனங்களை நிறுத்தும்போது பூட்டி விட்டு செல்லுங்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். வயிற்றுக் கோளாறு உண்டாகலாம். ராகு 2 ஆம் வீட்டில் இருக்கிறார். பொருள் வரவு அதிகரிக்கும். கேது 8 ஆம் வீட்டில் இருக்கிறார். சண்டை சச்சரவுகளால் மன நிம்மதி குறையும். 1,2,3 ஆம் தேதி சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள்.
மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே.... சூரியன் 7 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். வெட்ட வெட்ட முளைக்கும் முள் செடியை போல் புது புது பிரச்சனைகள் உங்களை தாக்கும். தளராத தன்னம்பிக்கையோடு அவற்றையெல்லாம் தாண்டி வருவீர்கள். வியாபாரத்தில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் சகல விதமான நன்மைகளையும் கொண்டு வரும். சிலர் திடீரென்று வெளிநாடு செல்வீர்கள். செவ்வாய் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு தேவையான உதவிகளை நண்பர்கள் செய்வார்கள். தக்க சமயத்தில் சகோதரரின் ஆதரவு பக்க துணையாக இருக்கும். சிறு வியாபாரிகள் கூட நல்ல லாபம் பார்ப்பார்கள். புதன் 7 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். தாய்மாமன் வகையில் பிரச்சனை வந்தாலும் தக்க உதவியுடன் சமாளிப்பீர்கள். அரசு ஊழியர்கள் அனுகூலமான பலனை பெறுவீர்கள். குரு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வியாபாரத்தை வெற்றிகரமான பாதையில் கொண்டு செல்வீர்கள் வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். சுக்கிரன் 8 ஆம் வீட்டில் இருக்கிறார். காதலை வெளியே சொல்ல முடியாமல் தடுமாறுவீர்கள் மனைவியோடு விவாதம் செய்து மன நிம்மதியை இழப்பீர்கள். சனி 12 ஆம் இடத்தில் இருக்கிறார். இரும்பு உலோகப் பொருட்கள் வியாபாரம் சூடு பிடிக்கும். பாத்திரக்கடை வைத்திருப்பவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள். ராகு 1 ஆம் வீட்டில் இருக்கிறார். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வீண் வம்புகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கேது 7ஆம் இடத்தில் இருக்கிறார். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.