ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் இருக்கிறாரா? - ஷாக் தரும் உளவுத்துறையின் ரிப்போர்ட்!
15 Sep,2024
ஹம்சா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், தலிபான்களின் பாதுகாப்பில் உள்ளதாகவும் உளவுத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் இருப்பதாகவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக வலுவான தாக்குதலை நடத்த உள்ளதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுரம் தாக்குதல் உலகையே உலுக்கியது. விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பின்லேடன் 2011ஆம் ஆண்ட பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அவரது 3வது மனைவியின் மகன் ஹம்சா பின்லேடன் அல்காய்தா இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.
அதில், அல்காய்தா இயக்கத்தை மீண்டும் ஒருங்கிணைத்து, மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஹம்சா பின்லேடன் திட்டமிட்டுள்ளதாகவும், அவருடைய சகோதரர் அப்துல்லா உதவியாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.