உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு
14 Sep,2024
உலகின் ராட்சத உடல்வாகு கொண்ட பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழப்பு.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் இலியா யெஃபிம்சிக் என்ற 36 வயதான சிறந்த பாடிபில்டர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட பாடிபில்டர் என்று அழைக்கப்பட்ட இவர் மாரடைப்பு ஏற்பட்டு 36 வயதிலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ஆம் திகதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனமதித்த போது கோமா நிலைக்கு செல்லப்பட்டு நேற்று முன்தினம் உயிர் பிரிந்துள்ளது.
ராட்சத உடல்வாகு கொண்டவராக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தொழில்முறையாக போட்டிகளில் அவர் கலந்த கொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி தனது ரசிகர்களுடன் வீடியோக்களை சமூக வலைத்தளம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவர் தினந்தோறும் 16,500 கலோரிகள் என்ற அளவிற்கு ஒரு நாளைக்கு ஏழு முறை சாப்பிடுவதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 2.5 கிலோ இறைச்சி மற்றும் 108 சுஷி (ஜப்பான் உணவு வகை) சாப்பாட்டில் எடுத்துக் கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
6 அடி ஒரு இன்ச் உயரம் கொண்ட இவர் 154 கிலோ எடை கொண்டவராவார். இவரது மார்பளவு 61 இன்ச் என கூறப்பட்டுள்ளது.