..
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, உலகளாவிய கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரியங்களை பாதுகாப்பதிலும் அவற்றை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. இத்தாலியின் பண்டைய அதிசயங்கள் முதல் சீனாவின் கட்டிடக்கலை அற்புதங்கள் வரை, ஒவ்வொரு நாடும் வரலாறு, கலை மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் அதிகளவு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைக் கொண்ட 7 நாடுகள்
இத்தாலி: இத்தாலியில் 60 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. இத்தாலியின் யுனெஸ்கோ தளங்களில் ரோமின் வரலாற்று மையம், பொம்பெயின் தொல்பொருள் பகுதிகள், ஹெர்குலேனியம் மற்றும் டோரே அன்னுன்சியாட்டா மற்றும் அமால்ஃபி கடற்கரை போன்றவை முக்கியமானவை. இத்தாலியின் பாரம்பரிய சின்னங்கள் அதன் நீண்ட நெடிய வரலாறு, கட்டிடக்கலை மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன.
சீனா: சீனாவில் மொத்தம் 59 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது. அவை சீனாவின் பண்டைய நாகரிகம், கட்டிடக்கலை மற்றும் இயற்கை அழகுக்கு சான்றாக உள்ளன. சீன பெருஞ்சுவர், பெய்ஜிங்கின் தடைசெய்யப்பட்ட நகரம், டெரகோட்டா இராணுவம் ஆகியவை யுனெஸ்கோவின் பட்டியலிடப்பட்ட சீனாவின் பொக்கிஷங்கள். இந்த தளங்கள் சீனாவின் வரலாறு, கைவினைத்திறன் மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளை எடுத்துக்காட்டுகின்றன.
ஜெர்மனி: ஜெர்மனியில் 54 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. கொலோன் கதீட்ரல் முதல் ரைன் பள்ளத்தாக்கு வரை ஜெர்மனியின் யுனெஸ்கோ தளங்கள் அதன் வரலாறு, கட்டடக்கலை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கின்றன.
பிரான்ஸ்: பிரான்ஸின் 53 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் வெர்சாய்ஸ் அரண்மனை, இடைக்கால நகரமான கார்காசோன், மான்ட்-செயிண்ட்-மைக்கேல் ஆகியவை அடங்கும். இவை பிரான்ஸின் கட்டிடக்கலை அற்புதங்களை வெளிப்படுத்துகின்றன. இவை, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை இவற்றை பார்த்துச் செல்கின்றனர்.
ஸ்பெயின்: ஸ்பெயினின் 50 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் அந்நாட்டின் வரலாற்று மற்றும் கட்டிடக்கலை அதிசயங்களின் செழுமையை வெளிப்படுத்துகிறது. கிரனாடாவின் அல்ஹம்ப்ரா, பார்சிலோனாவில் உள்ள அந்தோனி கோடியின் படைப்புகள் மற்றும் வரலாற்று நகரமான டோலிடோ என ஸ்பெயினின் யுனெஸ்கோ தளங்கள் அந்நாட்டின் பல்வேறு கலாச்சார தாக்கங்களையும் கலை சாதனைகளையும் வெளிப்படுத்துகின்றன.
இந்தியா: இந்தியாவில் 43 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. காலத்தால் அழியாத அழகான தாஜ்மஹால் முதல் கஜுராஹோவின் பழமையான கோயில்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் வரை யுனெஸ்கோவில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் யுனெஸ்கோ தளங்கள் வளமான கலாச்சார பாரம்பரியம், கட்டிடக்கலை, குறிப்பாக பல்லுயிர் தன்மையை பிரதிபலிக்கின்றன.
மெக்ஸிகோ: மெக்ஸிகோ 35 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களை கொண்டுள்ளது. இவைகளில் பண்டைய நகரமான தியோத்திவாக்கன், மெக்ஸிகோ நகரத்தின் வரலாற்று மையம் மற்றும் ஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய நகரமான சிச்சென் இட்சா ஆகியவை அடங்கும். மெக்ஸிகோவின் யுனெஸ்கோ தளங்கள் கொலம்பஸுக்கு முந்தைய நாகரிகங்கள், காலனித்துவ பாரம்பரியம் மற்றும் கலாச்சார மரபுகளை எடுத்துக்காட்டுகின்றன.