ரூ.9.2 கோடி மதிப்புடைய அதிர்ஷட கல்லை வீட்டு வசப்படியாக பயன்படுத்திய மூதாட்டி
12 Sep,2024
ரூ.9.2 கோடி மதிப்புடைய அதிர்ஷட கல்லை வீட்டு வசப்படியாக பயன்படுத்திய மூதாட்டி
இந்த ஒரு கல்லின் மதிப்பு சுமார் 9.2 கோடி. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் கல் பல ஆண்டுகளாக வெறும் ஒரு வீட்டின் படியாக இருந்துள்ளது.
தென்கிழக்கு ரோமானியாவில் அமைந்துள்ள கோல்டி கிராமத்தில் மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். அவரது வீடு தரை தளத்தில் இருந்து சற்று உயரமாக இருந்திருக்கிறது. அந்த உயரத்தில் அவர் தினமும் காலை தூக்கிவைத்து செல்ல கஷ்ட்டப்பட்டு வந்துள்ளார். ஒரு நாள் எதார்த்தமாக தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஓடைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு கல்லை கண்ட அந்த மூதாட்டி, அதனைத் தூக்கிவந்து தனது வீட்டின் வாசப்படியில் போட்டு தினமும் வீடிற்குள் சென்று வர அதனை உபயோகம் செய்துள்ளார்.
இந்த மூதாட்டி 80களின் பிற்பகுதி அல்லது 90களின் முற்பகுதியில் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின் அந்த வீட்டிற்கு அவரின் உறவினர் ஒருவர் அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். சமீபத்தில் அவர், இது சாதாரண கல் போல் இல்லையே என உன்னிப்பாக கவனித்துள்ளார். சந்தேகம் வலுக்கவே அதில் இருந்து சிறு துண்டை வெட்டி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளார்.
அதனை ஆய்வு செய்த ஆய்வகம் பெரும் இன்ப அதிர்ச்சையை கொடுத்துள்ளது. அது 38.5 முதல் 70 மில்லியன் வருடங்களுக்கு முந்தய அம்பர் கல் என்பதை தெரிவித்துள்ளது. கல்வகையில் அம்பர் கல் மிகவும் விலை உயர்ந்தது. பிறகு இதுகுறித்து ரோமானிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அவர்கள் அந்த கல்லை எடுத்து சென்றனர்.
ரோமானிய அதிகாரிகள் தகவல்படி, அந்தக் கல்லின் எடை 3.5 கிலோ என்பதும் இதன் மதிப்பு 1.1 மில்லியன் என்பதும் தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் அந்தக் கல்லின் மதிப்பு 9.2 கோடி ரூபாய். தற்போது அந்தக் கல் கர்கோவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், உலகில் இதுவரை கண்டறியப்பட்ட அம்பர் கல்லில் இதுவே அதிக எடைக்கொண்டது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் வெளியே வந்தப்பிறகு அந்த கிராமத்தினர், ‘அந்த மூதாட்டிக்கும் தான் இவ்வளவு ரூபாய் கல்லை தன்னிடம் வைத்திருந்தது தெரியவில்லை. ஒரு முறை அவர் வீட்டிற்கு கொள்ளையடிக்க கொள்ளையர்கள் வந்தனர். அவர்களும் வீட்டினுள் இருந்து கொஞ்சம் தங்கத்தை தான் எடுத்து சென்றனர். வீட்டின் வெளியவே இருந்த இத்தனை கோடி ரூபாய் கண்டறியவில்லை’ என்று வியந்து பேசுகின்றனர்.