ஒரு பிச்சக்காரன்கிட்ட இவ்ளோ பணமா? சவுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாகிஸ்தான் ஆசாமி!
13 Aug,2024
பாகிஸ்தானை சேர்ந்த பலர் சவுதி அரேபியாவிற்குள் பிச்சை எடுக்க வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் சமீபத்தில் ஒரு பாகிஸ்தான் நபர் பல லட்சம் பணத்துடன் சவுதி போலீஸிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு பொருட்களுக்கும் தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் பாகிஸ்தானியர்கள் பலர் புனித யாத்திரை செல்வதாக அனுமதி வாங்கி அரபு நாட்டுக்கு சென்று அங்கு பிச்சை எடுப்பதாக செய்திகள் வெளியாகிறது.
இவ்வாறாக புனித யாத்திரை பெயரை சொல்லி அரபு அமீரகத்திற்குள் பிச்சை எடுக்க நுழையும் பாகிஸ்தானியர்களை அரபு அமீரகமும் பிடித்து மீண்டும் நாட்டுக்கு அனுப்பி வருகிறது. ஆனால் இவ்வாறாக அரபு அமீரகத்தில் வந்து பிச்சை எடுப்பதால் கிடைக்கும் பணம் பாகிஸ்தானில் இருந்து சம்பாதிப்பதை விட அதிகமாக இருப்பதால் பல பாகிஸ்தானியர்கள் ரிஸ்க் எடுத்து அரபு அமீரகம் வருகின்றனர் என கூறப்படுகிறது.
இதுவரை அரபு அமீரகத்தில் பிடிபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அரபு அமீரகத்திற்கான பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அப்படியாக அமீரகத்தில் தங்கியிருந்த ஒரு பாகிஸ்தானிய பிச்சைக்காரர் பிடிபட்டுள்ளார். அவரிடம் 5 லட்சம் பணமும், சவுதி பாஸ்போர்ட்டும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து அரபுக்கு பிச்சை எடுக்க வருவதை குறைக்க அரபு அமீரகம் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.