இந்த நாட்டில் வாழும் 7 பேர்களில் ஒருவர் கோடீஸ்வரர்.. அந்த நாடு எது தெரியுமா?
10 Aug,2024
தங்களது வருமானத்தில் குறைந்தது 30 சதவீதத்தை சேமிக்கும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
உலகில் வாழும் பெரும்பாலானோருக்கு செல்வம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையும், தேவையும் இருக்கும். ஆனால் சிலர் என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு எதிர்பார்க்கும் செல்வம் கிடைப்பதில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
உலகில் மிகவும் சொகுசான வாழ்க்கை வாழும் பணக்கார நாடுகள் முதல் அன்றாட உணவுக்கு அல்லல்படும் ஏழை நாடுகள் வரை உள்ளன.
இங்கு நாம் பார்க்க போகும் நாட்டில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக உள்ளனர். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து தான் அந்த கோடீஸ்வர நாடாகும்.
இதற்கு அங்கு உள்ளவர்கள் தொடர்ந்து பல்வேறு தளங்களில் முதலீடு செய்வது தான் முக்கியமான காரணமாகும். பாரம்பரியமாகவே சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர்கள் சேமிப்பு முறையை பின்பற்றி வருகின்றனர்.
தங்களது வருமானத்தில் குறைந்தது 30 சதவீதத்தை சேமிக்கும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
தனிப்பட்ட வளர்ச்சிக்கு தங்களது வருமானத்தில் அதிகபட்சமாக 10% வரை அவர்கள் முதலீடு செய்கின்றனர்.
தொழில்நுட்பம் கல்வி அறிவு நிதித்துறை ஆகியவற்றிலும் அவர்களுக்கு அபாரமான அறிவாற்றல் உள்ளது.
இது போன்ற காரணங்களால் சுவிட்சர்லாந்து நாட்டில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்