80 வயது தாத்தாவை திருமணம் செய்த 25 வயது யுவதி, க்ஷாக்கில் இணையவாசிகள்!
26 Jul,2024
80 தாத்தா ஒருவர் 25 யுவதியை திருமணம் செய்த சம்பவம் இணையவாசிகளை வியக்க செய்துள்ளது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சரிக்கப்படுகின்றது என பெரியவர்கள் சொல்லுவார்கள். அவர்கள் கூற்றுப்படி எத்தையோ திருமணங்கள் நடந்தேறியும் உள்ளன. அதேபோல சில திருமணங்கள் இணையங்களில் வைரலாகி பேசுபொருளாகியும் உள்ளன.
அந்தவகையில் , இந்தியாவின் பீகாரில் இடம்பெற்ற திருமணம் தற்போழுது பேருபொருளாகியுள்ளது. காரணம் மாப்பிள்ளைக்கு 80 வயது, மணப்பெண்ணுக்கு 25 வயது.
பிகார் கயா மாவட்டத்தின் ஷெர்காட்டி அமாஸ் தொகுதியின் ஹம்ஜாபூரில் வசித்து வருபவர் தான் முகம்மது கலிமுல்லா நூரானி. இவருக்கு வயது 80. இவர் ஒரு விவசாயி.
இவரது மனைவி இறந்த பிறகு இவர் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நூரானியின் இரு மகன்களும் திருமணமானவர்கள். இதனால் வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று நினைத்த முகம்மது கலிமுல்லா நூரானி, இன்னொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாரானார்.
அவரது இரண்டாவது மனைவி பெயர் ரேஷ்மா பர்வீன். இவருக்கு வயது 25. குறித்த இருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த திருமணத்தை வீடியோவாக எடுத்த சிலர் அதனை சமூகவலைதளங்களில் வெளியிட்ட நிலையில் தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.