கைலாசா எங்கே? நாளை தெரியும் என்கிறார் நித்தியானந்தா; காணொளியால் பரபரப்பு !
20 Jul,2024
கைலாசா எங்கு இருக்கிறது என்ற தகவலை குரு பூர்ணிமா தினமான நாளை (21) அறிவிப்பேன் என நித்தியானந்தா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சர்ச்சை சாமியார் என்று அழைக்கப்படும் நித்தியானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
கைலாசா ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள தீவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கைலாசா எங்கு இருக்கிறது என்ற தகவலை குரு பூர்ணிமா தினமான நாளை (ஞாயிற்றுக் கிழமை) அறிவிப்பேன் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நித்தியானந்தா , தங்கள் நாட்டில் பணத்திற்கு மதிப்பு கிடையாது. உணவு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படும்.
கைலாசாவில் நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம். செலவு கிடையாது. மக்களுக்கு எந்தவிதமான வரியும் கிடையாது. இந்த சட்டம் மாற்றப்படாது.
காவல்துறை, ராணுவம் இல்லாத அகிம்சை தேசசமாக கைலாசா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு கைலாசாவில் உள்ள மடங்கள் பற்றி கூறிய அவர் மகா கைலாசா என்னும் இடத்தில் இருந்து நாட்டை நிர்வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.