பூமியை கடந்து சென்ற இராட்சத சிறுகோள்
30 Jun,2024
146 மீட்டர் அகலம் கொண்ட சிறுகோள் ஒன்று நேற்று (29) பூமியை கடந்து சென்றுள்ளது.
2024 MK என வானியலாளர்களால் பெயரிடப்பட்டுள்ள சிறுகோள், மணிக்கு 34,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது.
இந்த சிறுகோளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதாவது ஜூன் 16 ஆம் திகதி வானியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த சிறுகோள் பூமியில் இருந்து 2,95,000 கிமீ தொலைவில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இது குறைவு எனவும், 2024 MK மீண்டும் 2037ஆம் ஆண்டு பூமியைக் கடந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது