சொர்க்கத்தில் காணி விற்பனை,குவிந்த பணத்தால் வாயடைத்த இணையவாசிகள்!
29 Jun,2024
உலகில் பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி சமூகவலைத்தளங்களில் வரலாகி திகைக்க வைப்பதுண்டு,
அந்தவகையில் அமெரிக்காவில் மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள காணியை ஒரு சதுரடி 100 டாலருக்கு விற்பனை செய்து வருகின்றமை இணையவாசிகளை வாயடைக்கச் செய்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள காணிகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.
அதோடு ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது.
எனினும் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் - வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்ற நிலையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.