இந்த வார ராசி பலன் : ஜூன் 28 2024 முதல் ஜூலை 4- 2024 வரை

27 Jun,2024
 

 
 
ஜூன் மாத இறுதி ஜூலை தொடக்க வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் மிதுன ராசியில் இருக்கிறார். செவ்வாய் மேஷ ராசியில் இருக்கிறார். புதன் மிதுன ராசியில் அமர்ந்திருக்கிறார். 29 ஆம் தேதி கடகத்திற்கு செல்கிறார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் மிதுன ராசியில் அமர்ந்திருக்கிறார். கும்பத்தில் சனி... 29 ஆம் தேதி சனி வக்ரகதி அடைகிறார். மீனத்தில் ராகு... கன்னியில் கேது... என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் வேறு கிரக மாற்றம் இல்லை. சந்திரன் இந்த வாரம் மீனம் மேஷம் ரிஷபம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார். திமுகவை விடாமல் உலுக்கி எடுக்கும் எடப்பாடி.. சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதம்! கடகம் சிம்மம் கன்னி ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம். 
 
மேஷம்
 
 வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். வரவுக்கு மேல் செலவு வந்து வாட்டி வதைத்தாலும் கடுமையான உழைப்பால் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். சந்திரனின் நகர்வுகள் வியாபாரத்தில் மந்தமான நிலையை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் முதலீடு செய்வதற்கு கையில் பணம் இல்லாமல் தடுமாறுகின்ற நிலை உருவாகலாம். அந்த நேரத்தில் நெருக்கமான நண்பர்கள் உதவிக்கு வருவார்கள். செவ்வாய் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பாராத வகையில் ஓர் மனையிடத்தை வாங்குவீர்கள். புதன் 3,4 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் தடங்கலாக இருந்த காரியங்கள் அடுத்து மிகப் பெரிய நன்மையை கொடுக்கும். குரு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். மங்கல நிகழ்ச்சிகளுக்காக நீங்கள் அதிகமாக செலவு செய்வீர்கள். சுக்கிரன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் முதலில் குழப்பம் நிலவும். பின்னர் மனச்சங்கடங்கள் அகலும். சனி 11 ஆம் இடத்தில் இருக்கிறார். நீண்ட காலமாக நினைத்த வாகனத்தை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். ராகு 12 ஆம் இடத்தில் இருக்கிறார் ஆன்மீக பெரியவர் ஒருவரின் ஆலோசனையால் உடல் ரீதியாக இருந்த துன்பம் விலகும். கேது ஆறு ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டிகளை எளிதாக வென்று வெற்றி கொடி நாட்டுவீர்கள். 
 
ரிஷபம் 
 
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.... சூரிய பகவான் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பாராத பணவரவு ஏற்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி அரசு ஊழியர்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். செவ்வாய் 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். கோபத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு தான் அமர வேண்டும் என்ற தத்துவத்தை புரிந்து கொண்டு நடந்தால் நல்லது. புதன் 2,3 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். பேசி வைத்த திருமண காரியங்கள் தள்ளி போகலாம். ஒருவருக்கொருவர் மனம் விரும்பிய இளம் வயதினர் ஈகோ பிரச்சனையால் பிரிந்து போகும் நிலை வரலாம். குரு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். தனியார் துறை ஊழியர்கள் மன நிறைவான சம்பளம் பெறுவார்கள். சுக்கிரன் 2 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். வெளிநாட்டு பயணம் சில இடர்பாடுகளுக்கு இடையே நிறைவேறும். சனி 10 ஆம் இடத்தில் இருக்கிறார். தந்தையார் தொழிலுக்காக பண உதவி செய்வார். ராகு 11 ஆம் வீட்டில் இருக்கிறார். தெய்வ திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். கேது 5ஆம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக கடன் வாங்க அலைவீர்கள்.
 
 
மிதுனம்
 
 எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... சூரிய பகவான்
 உங்கள் ராசியில் அமர்ந்திருக்கிறார். உங்களுடைய வருமானத்தை கெடுக்க சில உறவுக் கழுகுகள் வட்டமிடும். ஆனால் அதை விரட்டி அடித்து வெற்றி காண்பீர்கள். சந்திரனின் நகர்வுகள் பங்குச்சந்தை வியாபாரத்தில் படு வேகமான வளர்ச்சியைத் தரும். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள். செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். எந்த காரியத்தை எதிர்பார்த்து வெளியூர் செல்கிறீர்களோ அதில் இடையூறு உண்டாகும். புதன் 1,2 ஆம் இடத்தில் இருக்கிறார். கல்லூரி பேராசிரியர்கள் மிகுந்த பெருமை அடைவார்கள். மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கும். குரு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசு ஊழியர்களுக்கு வேலை மாறுதல் ஏற்படும். சுக்கிரன் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் குழந்தை பாக்கியம் உண்டாகும். வியாபார சிக்கலை பேச்சுவார்த்தையால் தீர்ப்பீர்கள். சனி 9 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலை காரணமாக குடும்பத்தை பிரிந்து செல்வீர்கள். ராகு 10ஆம் இடத்தில் இருக்கிறார். திடீர் பணவரவு உண்டாகும். கேது 4 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் கல்வி செலவு அதிகரிக்கும். 
கடகம் 
 
 
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அரிய செயல்கள் புரிந்து மக்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். சந்திரன் சிறப்பான முறையில் பயணிக்கிறார். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் அமோக லாபம் கிடைக்கும். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசாங்க ஒப்பந்தங்களை அலுங்காமல் பெறுவீர்கள். காண்ட்ராக்ட்கள் உங்களின் கைக்கு வந்து சேரும். புதன் 12,1 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு இருந்த அரசாங்க சிக்கலை முறைப்படி தீர்ப்பீர்கள். குரு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். எந்த காரியத்தை தொட்டாலும் இடையூறு இல்லாமல் நடந்தேறும். புதிய தொழில் தொடங்குவீர்கள். சுக்கிரன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். இரண்டு மனங்கள் கலந்து காதலில் திளைக்கும். சனி 8 ஆம் இடத்தில் இருக்கிறார். திருமண மேடையிலேயே சம்பந்திகள் சண்டை சச்சரவுகளில் இறங்கலாம். ராகு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தக்க சமயத்தில் பெண்கள் பணஉதவி செய்வார்கள். கேது 3 ஆம் இடத்தில் இருக்கிறார். செல்வாக்கை அதிகரிக்க கண்மூடித்தனமாக செலவு செய்வீர்கள். 28,29 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள். 
 
சிம்மம் 
 
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... உங்கள் ராசிநாதன் 11 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசாங்க வேலைக்கு படிப்பவர்கள் அனுகூலமான பலனை பெறுவார்கள். ஒரு சிலர் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெறுவார்கள். மனதிற்கு உகந்த மருத்துவ துறையும் சிலருக்கு கிடைக்கும். சந்திரனின் சஞ்சாரங்கள் சஞ்சலங்களை தரலாம். ஒரு நிலைத்தன்மை இல்லாமல் மனம் அலைபாயும் நேரம் இது. எச்சரிக்கையாக இருங்கள். செவ்வாய் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். கட்டுமான தொழில் விறுவிறுப்பாக இருக்கும். ஐடி ஊழியர்கள் சிறப்பான பலனை அடைவார்கள். புதன் 11,12 ஆம் இடத்தில் இருக்கிறார். வாக்கு சாதுரியத்தால் வாடிக்கையாளர்களை வளைத்து பிடிப்பீர்கள். குரு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே கலகம் பிறக்கும். சிலர் வீட்டுக்கு வருவதையே வேதனையாக நினைப்பார்கள். சுக்கிரன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பார்த்த நல்ல காரியங்கள் நடக்கும். பண வரவு பிரமாதமாக இருக்கும். சனி 7 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்ப்புகளை தூள் தூளாக்குவீர்கள். ராகு 8ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவி மக்களிடம் உங்கள் பிடிவாதத்தை காட்டாதீர்கள். அதனால் மன வேதனை அடைவீர்கள். கேது 2 ஆம் வீட்டில் இருக்கிறார். யாருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்காதீர்கள். அதை நிறைவேற்ற மிகவும் சிரமப்படுவீர்கள்.29,30,1 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள். 
 
கன்னி 
 
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... சூரியன் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சொந்த முயற்சியால் எந்த தொழிலிலும் காலூன்றி நிற்பீர்கள். ஜவுளி வியாபாரத்தில் லாபத்தை அள்ளுவீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி சாதகமான நிலையில் உள்ளது. விறுவிறுப்பாக வியாபாரம் செய்து கையிருப்பை அதிகரிப்பீர்கள். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றி பெறும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். புதன் 10,11 ஆம் இடத்தில் இருக்கிறார். நண்பரின் வீட்டு பிரச்சனையை வெகு சாமர்த்தியமாக தீர்த்து வைப்பீர்கள். குரு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். பெரியோர்களின் நல்லாசியால் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெறும். புதிய வீடு வாங்கி குடி செல்வீர்கள். சுக்கிரன் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். வாய் வார்த்தைகளால் கடுமையாக சண்டை போட்டாலும் கணவன் மனைவி இருவரும் இதயத்தால் இறுக்கமாக இருப்பார்கள். சனி 6 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் நடத்தையை பெற்றோர்கள் அணுக்கமாக கண்காணிக்க வேண்டும். சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின் நிவாரணம் கிடைக்கும். ராகு 7ஆம் வீட்டில் இருக்கிறார். பெண்ணுக்கு வரன் தேடுவதில் மும்முரமாக இறங்குவீர்கள். கேது 1 ஆம் வீட்டில் இருக்கிறார். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள்.2,3,4 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள்.
 
 துலாம் 
 
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... சூரியன் 9 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வழக்கறிஞர்கள் வாத திறமையால் நீதிபதியையே மயங்க வைப்பார்கள். நீதிமன்றத்தை கிறங்க வைப்பார்கள். சந்திர பகவானின் இடமாற்றம் ஏற்ற இறக்கமான பலன்களை கொண்டு வரும். தெய்வ காரியங்களுக்கு நிதி உதவி செய்வீர்கள். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். இல்லை என்றால் வீடு போர்க்களமாக மாறும். புதன் 9,10 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலில் அதிகமான முதலீடு செய்வீர்கள். வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். குரு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிரிகளின் முயற்சிகள் பலிக்காமல் போகும். சுக்கிரன் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத்துறையினர் பெரும் புகழடைவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டை பெறுவார்கள். சனி 5 ஆம் இடத்தில் இருக்கிறார். விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சிலர் கார் வாங்கி வீட்டில் நிறுத்துவார்கள். ராகு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். உங்கள் நிம்மதியை கெடுப்பதற்காகவே உறவினர்கள் வருவார்கள். ஏதாவது பிரச்சனையை தூண்டி விடுவார்கள். கேது 12 ஆம் அமர்ந்திருக்கிறார். யோசித்துப் பேசுங்கள். நண்பர்களே பகைவர்களாக மாறலாம்.
 
 விருச்சிகம் 
 
போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... சூரியன் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். என்னதான் திட்டமிட்டு காரியம் செய்தாலும் செலவு தலைக்கு மேல் போகும். சில நேரங்களில் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். சந்திரனின் சஞ்சாரங்கள் சில மேன்மையான காரியங்கள் நடக்க உதவிகரமாக இருக்கின்றது. செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். சேமித்து வைத்திருந்த பணத்தை சிக்கலான நேரத்தில் கொடுத்து உங்கள் மனக்கவலையை போக்குவார் இல்லத்தரசி. புதன் 8,9 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். கமிஷன் வியாபாரம் கைகொடுக்கும். புதிய தொழிலுக்கு ஒப்பந்தம் போடுவீர்கள். குரு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் குவா குவா சத்தம் குதூகலத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கொடி கட்டி பறப்பீர்கள். எதிரிகளும் உதவி செய்வார்கள். சனி 4 ஆம் வீட்டில் இருக்கிறார். சிலரால் முடியாத காரியத்தை நீங்கள் எளிதாக செய்வீர்கள். நிலம் வாங்கி விற்பதில் புதிய சாதனை படைப்பீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். ராகு 5ஆம் இடத்தில் இருக்கிறார். பூர்வீக சொத்தில் உங்களுக்கு உரிய பங்கை அடைவீர்கள். கேது 11 ஆம் இடத்தில் இருக்கிறார். கடல் கடந்து வெளிநாட்டு பயணம் செல்வீர்கள்.
 
தனுசு 
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிர்பார்த்து செல்கின்ற சில காரியங்கள் ஏமாற்றத்தை தரலாம். குலதெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரிப்படுத்திக் கொள்ளுங்கள். சந்திர பகவானின் நகர்வுகள் உங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்தாலும் கையில் காசு தங்குவது கடினம். செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். உங்களுக்கு சிலர் கெடுதல் செய்ய நினைப்பார்கள். ஆனால் அதுவே நன்மையில் முடியும். ரியல் எஸ்டேட் தொழில் அதிக லாபத்தை கொடுக்கும். புதன் 7,8 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். சகோதர சகோதரிகள் வகையில் செலவு வரும். குரு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். அரசு ஊழியர்கள் மிகுந்த லாபம் அடைவார்கள். தனியார் துறையிலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுக்கிரன் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத்துறையினருக்கு சில இடர்பாடுகள் ஏற்படலாம். பொறுப்புடன் நடந்து புகழை சம்பாதிக்க வேண்டும். சனி 3 ஆம் இடத்தில் இருக்கிறார். கட்டுமான தொழில் விறுவிறுப்பாக நடக்கும். ராகு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய தொழில் தொடங்க முதலீடு செய்வீர்கள். கேது 4ஆம் வீட்டில் இருக்கிறார். மனைவி பிள்ளைகளோடு உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். 
 
மகரம் 
 
வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே.... சூரியன் 6 ஆம் வீட்டில் நிற்கிறார். வட்டித் தொழிலில் அதிக முதலீடு செய்து கெட்டிக்காரத்தனமாக பணத்தை ஈட்டுவீர்கள். போட்டி பந்தயங்கள் உங்களுக்கு பெருவாரியான லாபத்தை கொடுக்கும். சந்திரன் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். வியாபாரத்தில் கடுமையாக உழைத்து பணம் சேர்ப்பீர்கள். சிறு வியாபாரிகள், சில்லறை வணிகர்கள் முதலுக்கு மோசம் போகாமல் கணிசமான லாபத்தை பெறுவார்கள். செவ்வாய் 4 ஆம் வீட்டில் இருக்கிறார். தாய்மாமன் வகையில் ஈகோ சண்டைகள் உருவாகும். தாய் வழி சொத்துக்காக நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உண்டாகும். புதன் 6,7 ஆம் இடத்தில் இருக்கிறார். பண வரவு தாராளமாக இருக்கும். அதற்கேற்ற செலவுகள் வரும். குரு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டுக்கு வியாபாரம் நிமித்தமாக செல்வீர்கள். சகோதரருக்கு உதவி செய்வீர்கள். சனி 2 ஆம் இடத்தில் இருக்கிறார். எதையும் யோசித்து செய்யுங்கள். ராகு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு செல்வீர்கள். கேது 9 ஆம் இடத்தில் இருக்கிறார். பெரிய மனிதர்கள் சந்திப்பால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். 
கும்பம்
 
 சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே... சூரியன் 5 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலமாக ஏராளமான பணத்தை ஈட்டுவீர்கள். தைரியமாக புதிய தொழில்களில் பணத்தை முதலீடு செய்வீர்கள். சந்திரனின் நல்லாசியால் எடுக்கின்ற காரியம் தடையில்லாமல் நடக்கும். வியாபாரத்தை விருத்தி செய்ய வேண்டிய உதவிகள் நண்பர்கள் மூலமாக கிடைக்கும். செவ்வாய் 3 ஆம் வீட்டில் இருக்கிறார். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் புதிய சாதனை படைப்பீர்கள். செங்கல், மணல் வியாபாரம் சிறப்பாக நடக்கும். புதன் 5,6 ஆம் இடத்தில் இருக்கிறார். கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்போடு வேலை செய்வார்கள். குரு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். சொன்ன சொல்லை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்வீர்கள். இல்லத்தில் திடீரென திருமண நிகழ்ச்சிகள் நடக்கும். சுக்கிரன் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். மாணவர்கள் ஆட்டம் பாட்டம் என சந்தோஷமாக பள்ளி நாட்களை கடத்துவார்கள். சனி 1 ஆம் இடத்தில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. ஹெல்மெட் போடாமல் போனால் ஆயிரம் ரூபாய் இழப்பு. ராகு 2 ஆம் வீட்டில் இருக்கிறார். வீடு தேடி வந்த நண்பருக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வீர்கள். கேது 8ஆம் இடத்தில் இருக்கிறார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கூட்டி செல்வீர்கள். 
 
மீனம்
 
 பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே.... சூரியன் 4 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். வெளிவட்டாரத்திலும் சரி வீட்டிலும் சரி உங்களுடைய அந்தஸ்து உயர்ந்து நிற்கும். குடும்பத்தினர் உங்களுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். வேலை இடத்தில் ஊழியர்கள் ஒத்துழைப்புடன் பணி செய்வார்கள். சந்திரன் இடப்பெயர்ச்சியும் ஏற்றமான பலனையே தரும். கொடுக்கல் வாங்கல் தொழிலில் நல்ல லாபம் பார்க்கலாம். ஆன்லைன் வர்த்தகங்கள் அதிக வருவாயை கொடுக்கும். செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். வெளியூர் பயணங்களில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். புதன் 4,5 ஆம் இடத்தில் இருக்கிறார். மேல்படிப்புக்காக மாணவர்கள் வெளிநாடு செல்வார்கள். புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவார்கள். குரு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். கல்விக் கடனை அடைக்க முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள். சுக்கிரன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். விரும்பிய பெண்ணை வசீகரமாக பேசி காதல் வலையில் சிக்க வைப்பீர்கள். சனி 12 ஆம் இடத்தில் இருக்கிறார். மருந்து வியாபாரம் செழிப்பாக நடக்கும். விருந்தினர்கள் வருகையால் வீடு கலகலப்பாகும். ராகு ராசியிலேயே அமர்ந்திருக்கிறார். மாமியார் தலையிட்டால் மனைவிக்கும் உங்களுக்கும் சண்டை வந்து சங்கடப்படுவீர்கள். கேது 7 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரம் காரணமாக குடும்பத்தை பிரிந்து சில நாட்கள் வெளியூரில் தங்குவீர்கள்.
 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies