சாப்பாட்டில் அடிக்கடி முடி வருகிறதா? ஜோதிடம் சொல்வது என்ன?
25 Jun,2024
சாப்பாட்டில் அடிக்கடி முடி வருகிறதா? இதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்கள் உள்ளதாக கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு 3 வேளை சாப்பிடும் போதும் முடி மாட்டும். இது மிகவும் சங்கடமாக இருக்கும்.
வீட்டில் உள்ள உறவினர்களுக்கோ இல்லை என்றால் விருந்தாளிகளுக்கோ உணவு பரிமாறும் போது பெரிய பிரச்சினையாக இருப்பது முடிகள்தான். அய்யோ எப்போது முடி சிக்குமோ என்ற அச்சம்தான் இருக்கும்.
குழம்பு நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற கவலை எல்லாம் பிறகுதான்! நம் வீட்டு ஆட்கள் என்றாலும் பரவாயில்லை. ஆனால் விருந்தாளிகளுக்கோ அலுவலக நண்பர்களுக்கோ உணவு பரிமாறும் போது முடி வந்துவிட்டால் மிகவும் சங்கடமாக இருக்கும். என்னதான் தலையை வாரிக் கொண்டு சமைத்தாலும் எப்படித்தான் விழுகிறதோ தெரியவில்லை என்றுதான் நாம் புலம்பத் தோன்றும். அதிலும் சிலர் ஒரு வாய் சாப்பிட்டதும் சிக்கும் முடியை வாயிலிருந்து எடுக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கும். இதை பொதுவாக சுகாதாரம் என்ற வட்டத்திற்குள் பார்த்தாலும் இதை ஜோதிட ரீதியாக எப்படி பார்க்கிறார்கள் என்பதை பார்க்கலாம். வாழ்க்கையில் பொதுவாக ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் நடந்து வருகிறது என்றால் எதிர்காலத்தில் ஏற்பட போகும் பிரச்சினையையோ அல்லது ஏதாவது ஒரு நிகழ்வையோ முன்கூட்டியே நமக்கு தெரிவிக்கும் ஒரு எச்சரிக்கை மணி என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் நமது சாப்பாட்டு தட்டில் அடிக்கடி முடி தென்பட்டால் அது சுபமா இல்லை அசுபமா என்பது குறித்து ஜோதிட நிபுணர்களின் கருத்துகளை பார்க்கலாம்.
R
நீங்கள் சாப்பிட உட்காரும் போது உங்கள் முகத்திற்கு முன்னே அடிக்கடி முடி வெளியே வந்து ஒன்றுக்கு மேற்பட்ட முறை நடந்தால் அது பித்ரு தோஷத்திற்கான காரணமாக இருக்கலாம். இது ஒன்று அல்லது இரு முறை நடந்தால் எதேச்சையாக நடந்திருக்கலாம். இது அடிக்கடி நடந்தால் முன்னோர்களை திருப்திப்படுத்த நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அர்த்தம்.
முடி முக்கியமாக ஒரு நபரின் உயிர் சக்தியுடன் தொடர்புடையது. எனவே உணவில் அடிக்கடி முடி இருந்தால் உங்கள் உயிர் சக்திக்கே பிரச்சினை எனபதாகும். உணவில் முடியானது மீண்டும் மீண்டும் சிக்கினல் அது ஆற்றல் ஓட்டத்தில் தடைகளை ஏற்படுத்தி உயிர் சக்தியை சீர்குலைக்கும். இதற்கு தீர்வு காண வேண்டும்.
அது போல் உணவில் அடிக்கடி முடி இருப்பது நெகட்டிவிட்டியை குறிக்கிறது. இதில் இருந்து சில எதிர்மறை ஆற்றல்கள் உங்களைச் சுற்றி இருப்பதாக அர்த்தம். எனவே உங்கள் எண்ணங்களை நீங்கள் தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அது போல் சிலர் சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு நீடிக்கும் என்பார்கள். இது உணவு அருந்துபவர் முகம் சுளிக்க கூடாது என்பதற்காக சொல்லப்படுகிறது. தலை முடி என்பது சனியை குறிக்கும். அவர்தான் தலைமுடி மீது ஆதிக்கம் செலுத்துகிறார்.
இப்படியிருக்கையில் கணவனுக்கு பரிமாறப்படும் உணவில் முடி இருந்தால் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக உறவு நீடிக்கும் என சொல்லப்பட்டது. மேலும் மனைவி மீது கணவருக்கு கோபம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அப்படி சொல்லப்பட்டது. வீட்டில் ஒரு முடி இருந்தாலும் அது நல்லதல்ல என்பார்கள். அதனால்தான் பலர் வீடுகளில் தலை சீவால் வாசலில் தோட்டத்தில் வராண்டாவில் பால்கனியில் தலை சீவுவார்கள். வெளியே முடி விழுந்துவிடுவதால் சனி பகவானால் நம் குடும்பத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என நம்பப்பட்டது. எனவே இனி உணவில் முடி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.