2038 ஆம் ஆண்டு பூமியைத் தாக்கவுள்ள பாரிய கோள்! நாசா அதிர்ச்சி தகவல்
24 Jun,2024
ஜூலை 12, 2038 அன்று, ஒரு பெரிய கோள் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
மேரிலாந்தில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையுடன் இணைந்து பூமியை கோள்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பில் இடம்பெற்ற விஷேட பட்டறையின் முடிவின் போதே நாசா இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விசேட பட்டறையில் வானியலாளர்கள், வானியற்பியல் வல்லுநர்கள் மற்றும் அமெரிக்க இராணுவத் துறைகளின் தலைவர்களும் பங்கேற்று கோள்கள் பற்றிய தங்களின் அறிவையும் தரவையும் பகிர்ந்து கொண்டனர்.
பூமிக்கு அருகில் அவ்வப்போது கடந்து செல்லும் கோள்கள் மற்றும் அவற்றின் பாதைகளை கணினி மூலம் ஆய்வு செய்ததில், பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பெரிய கோள் ஒன்று 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் என்றும், அது பூமியில் மோதும் சதவிகிதம் 72 % என்றும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கோள் பூமியை தாக்குவதாக இருந்தால் அதை அழிக்க அல்லது அதன் பாதையை மாற்றுவதற்கான திட்டங்களை வகுப்பதன் முக்கியத்துவத்தை பட்டறையில் இணைந்த அமெரிக்க ராணுவ தளபதிகள் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.