கனவில் திருஷ்டி பூசணிக்காய் வந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?
20 Jun,2024
பொதுவாக நம் எண்ண ஓட்டத்தில் இருப்பதுதான் கனவாக வரும் என்பார்கள். ஆனால் சிலருக்கு நடக்க போவது கனவில் வந்து உணர்த்தும். அது போல் கனவில் செத்தவர்கள் வந்தால் என்ன பலன், சாவு ஊர்வலம் வந்தால் என்ன பலன் என்றெல்லாம் தெரியும்.
மேலும் ஒவ்வொரு விலங்கு கனவில் வந்தாலும் என்ன நன்மை கிடைக்கும், என்ன தீமை கிடைக்கும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம். அது போல் காய்கறிகள் கனவில் வந்தாலும் அதற்கும் சில பலன்கள் இருக்கிறது என்கிறார்கள். முதலில் திருஷ்டி பூசணிக்காய் ஏன் உடைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம். அரக்கர் குலத்தில் பிறந்த அரும்தவ புதல்வன். தேவர்களை வம்புக்கு இழுக்கும் செயலை செய்து வந்தார். அசுரனின் தொல்லை தாங்காமல் தேவர்கள் எல்லாரும் வைகுண்டனிடம் சென்று முறையிட்டனர்.
இதையடுத்து அசுரனின் கணக்கு முடிய போவதை அறிந்த பெருமாள், அவரிடம் செல்கிறார். அப்போது வைகுண்டன் வந்ததையும் அறியாமல் ஆணவத்துடனேயே அசுரன் பேசினான். பிறகு உண்மையை அசுரனுக்கு உணர்த்திய வைகுண்டனிடம் நான் உயிருடன் இருந்தவரை எந்த நன்மையும் செய்யவில்லை. இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும் என அசுரன் கூறினார். உடனே வைகுண்டன், நீ பூசணிக்காயாக பிறப்பாய்! உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷங்களையும் மறைய செய்வாய். கண் திருஷ்டி மறையும். பில்லி சூனியம்,
ஏவல் கூட பாதிக்காது. உன்னை யாராவது திருடிச் சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்துக் கொள்ளும். இதனால்தான் பூசணிக்காயை யாராவது அறுத்துக் கொண்டு சென்றால் கூட அதற்கான காசை விவசாயிகள் வாங்கிக் கொள்வார்கள். இப்படியிருக்கையில் பூசணிக்காயை கனவில் பார்த்தால் நோய் ஏற்பட போகிறது என்பது அர்த்தம். திருஷ்டி பூசணிக்காய் கனவில் வந்தால் தொழிலில் நஷ்டம் ஏற்படும். அது போல் கல்யாண பூசணிக்காய் உங்கள் கனவில் வந்தால் மங்கள காரியங்கள் நடைபெற போகிறது என அர்த்தம். மஞ்சள் பூசணிக்காய் கனவில் வந்தால் வாழ்வில் நிறைந்த மகிழ்ச்சி ஏற்படும் என்று அர்த்தம்.