மாதவிடாய் நாட்களில் பூஜை பொருட்களை தொடலாமா? கோயிலுக்கு செல்லலாமா?
20 Jun,2024
மாதவிடாய் நாட்களில் பூஜை பொருட்களை பெண்கள் தொடக் கூடாதா? கோயில்களுக்கு செல்லக் கூடாதா? என்பதற்கான கேள்விக்கு
இதுகுறித்து குவோரா இணையதளத்தில் பரமேஸ்வரன் ராஜேஸ்வரன் என்பவரின் பதில்: இவையெல்லாம் மனிதர்கள் (குறிப்பாக ஆண்கள்) விதித்தவை. எந்தக் கடவுளும் அப்படிச் சொல்லவில்லை. அப்படியே சொல்லி இருந்தாலும், அதுவும் மனிதர்கள் கடவுள் சொன்னதாகக் கட்டி விட்ட கதையே.
ஒரே ஒரு காரணம்தான். அந்தக் காலஙகளில், மாதவிடாய் நாட்களில் தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ள போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில், பெண்ணுக்கு சில தொல்லைகள், துயரங்கள் இருந்தன. அதை சீர் செய்து அவளுக்கு உதவுவதற்கு பதிலாக, அதையே ஒரு குறையாக - ஏன் குற்றமாகக் கூட - காட்டி அவளை மட்டம் தட்டி வைத்து ஆளுமை செய்ய ஆண்கள் செய்த பல அநியாயங்களில் இதுவும் ஒன்று. தம்மைத் தூய்மையாக வைத்துக் கொள்ள சரியான வழிகள் இருந்தால், எல்லா நாட்களிலும், நேரங்களிலும் பெண்கள் எல்லாப் பணிகளையும் செய்யலாம். Advertisement வழிபாடு உட்பட என தெரிவித்துள்ளார். அது போல் மழைத் துளி என்ற ஐடியில் இருந்து வெளியான பதிலில் : அதெல்லாம் பெண்களை அடக்கி ஒடுக்கி வைப்பதற்காக ஆணாதிக்க சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்டது. ஆணாதிக்க சமூகம் கோவில் பூசைகள் எல்லாவற்றையும் தானே எடுத்துக் கொண்டு விட்டது.
மாதவிடாய் வந்த பெண் சுடு தண்ணீர் கொதிக்க வைத்தால் சுடுதண்ணீர் கொதிக்காதா..?சோறு என்ன அவியாதா..? எல்லா மதங்களும் பெண்களை அடக்கி வைக்கவே கதை சொல்கின்றன என குறிப்பிட்டுள்ளார். அது போல் பிஎம் ராஜா என்பவரின் பதிலில் கூறியிருப்பதாவது: எதற்காக என்றால் பெண்கள் அந்த நாட்களில் வலி அதிகமாக இருக்கும் என்பதால் இயல்பாக வேலை செய்ய முடியாது என்பதாலும் ஆண்கள் இதை உணர்ந்து நடக்க தாமதம் ஏற்படும் என்பதால் இந்த விதிமுறைகள் ஒரு பெண் தான் விதித்து இருப்பார். ஏன் என்றால் கணவர் ஏதேனும் தேவை என்றால் மனைவியை அழைத்து வேலை வாங்குவதால் அந்த நாட்களில் வேலை வாங்க வேண்டாம் என்பதற்காக தீட்டு என்றார்கள். மேலும் அந்த 5 நாட்களுக்கு பெண்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்பதாலும் இப்படி ஒரு நடைமுறை இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.