அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை! ஜோ பைடன் அறிவிப்பு!
20 Jun,2024
அமெரிக்கர்களை மணந்த அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ”உரிய ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் தங்கியிருப்பவா்கள், அமெரிக்கர்களின் கணவா் அல்லது மனைவியாக இருந்தால் அவா்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வாறு விண்ணப்பிப்பவா்கள் அமெரிக்காவில் குறைந்தது 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு இருப்பினும் ஜூன் 17ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கர்களை மணந்த யாரும் இதற்காக விண்ணப்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் சுமாா் 5 லட்சம் பேருக்கு நிரந்தர குடியேற்ற உரிமையும் பின்னா் குடியுரிமையும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது