படைகளை பின்லாந்து எல்லையில் இருந்து உக்ரைனுக்கு நகர்த்திய ரஷ்யா
19 Jun,2024
உக்ரைன்(Ukraine) மீது போர் தொடுத்த ரஷ்யா, பின்லாந்து எல்லையிலும் இராணுவ தளங்களை அமைத்து வீரர்களை குவித்திருந்தது. இதனால் தங்கள் மீதும் போர் தொடக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு அண்டை நாடான பின்லாந்து கருதிவந்தது.
இந்நிலையில் பின்லாந்து எல்லையில் குவிக்கப்பட்டிருந்த படைகளில் 80 சதவீதத்தை ரஷ்யா உக்ரைன் நோக்கி நகர்த்தியுள்ளதாக பின்லாந்து புலானாய்வுத்துறை கூறியதாக அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அங்கிருந்து உபகரணங்களையும் ரஷ்யா நகர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் மீது தற்போது முழு வீச்சாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக வீரர்கள் தேவை என்பதால் இவர்களை நகர்த்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2023இல் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்ததுள்ள தோாடு, ரஷ்யாவின் விமானங்கள் அடிக்கடி தங்களது வான் எல்லையில் தென்படுவதாக பின்னலாந்து அடிக்கடி குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.