பட்டத்தின் வாலை பிடித்த 3 வயது சிறுமி.. வானில் பறந்த கொடூரம்!
18 Jun,2024
தைவான் நாட்டில் பட்டம் விடும் திருவிழா ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின்போது, ராட்சச பட்டம் ஒன்றை, பறக்க வைக்க அங்கிருந்த அனைவரும் முயற்சி செய்துள்ளனர்.
பட்டம் வானில் பறக்கும்போது, அதன் வாலை பிடித்துக் கொண்டிருந்த 3 வயது சிறுமியும், மேலே பறந்துள்ளார். இதனை கண்டு அங்கிருந்த பலரும், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், காற்றின் வேகம் சீரான பிறகு, அந்த சிறுமி மீண்டும் கீழே வந்தார். இதையடுத்து, அந்த சிறுமியை, அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த பெண்ணுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர்கள், அந்த பட்டம் விடும் திருவிழாவை உடனடியாக நிறுத்தினார்கள். இந்த சம்பவம், தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.