மூன்றாம் உலக போர், ஜோதிடரின் அதிர்ச்சி தகவல்
18 Jun,2024
மூன்றாம் உலகப்போருக்கு நாள் குறித்த செய்தி ஏற்கனவே அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில் மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் ஒரு தகவலை அவர் அண்மையில் வெளியிட்டிருந்தார்.
இதனடிப்படையில், இந்திய நாஸ்ட்ரடாமஸ் அல்லது புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் குஷால் குமார் (Kushal Kumar) என்பவர் இன்றையதினம் 18 ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாகும் என கடந்த மாதம் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காரணம் அவர் வேத ஜோதிட விளக்கப்படத்தைப் பயன்படுத்தி அதை கணித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஜூன் மாதம் 10 ஆம் திகதியும் மற்றும் 29 ஆம் திகதியும் கூட குறிப்பிடத்தக்க நாட்கள்தான் என அவர் தெரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.