போப் பிரான்சிஸ் தலையில் முட்டினாரா அமெரிக்க அதிபர்..?
15 Jun,2024
உலக நாடுகளே கண்டும் அஞ்சும் வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன், போப் பிரான்சிஸை தலையில் முட்டிய இந்த காட்சி பேசுபொருளாகி உள்ளது.
ஜி7 கூட்டமைப்பின் 50 ஆவது உச்சி மாநாடு இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக G7 நாடுகளின் கொடிகளைப் பிடித்தபடி பாராசூட்டில் வீரர்கள் குதிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் G7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். அப்போது, திடீரென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேறு திசையை நோக்கி நடக்க தொடங்கினார். நிதானம் இழந்ததுபோன்று காட்சிதந்த அவரை, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானி அழைத்து இயல்புக்கு கொண்டுவந்தார்.
இது ஜோ பைடனுக்கு உடல்நலம் அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகத்தை கிளப்பியது. இந்நிலையில், ஜி7 உச்சமாநாட்டின் சிறப்பு அமர்வில் உரையாற்றுவதற்காக போப் பிரான்சிஸ் அழைக்கப்பட்டிருந்தார்.
அவரை சந்தித்து பேசிய ஜோ பைடன், திடீரென போப் பிரான்சிஸ் தலையில் தனது தலையை மோதினார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இதுபோன்ற வித்தியாசமான நடவடிக்கைகள் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில், பிற நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை இத்தாலி தலைமை தாங்கி நடத்தியது.