காதலியை கிண்டலடித்தவரை.. நாய்க்கு இரையாக போட்ட நடிகர் தர்ஷன்..
11 Jun,2024
கொலை வழக்கு தொடர்பாக கன்னட நடிகர் "டி பாஸ்" தர்ஷன் போலீஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டு உள்ளார். நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பிய ரேணுகா சுவாமி என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேனுகா சுவாமி சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த ரேணுகா சுவாமி, சித்ரதுர்காவை சேர்ந்த மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். இவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை மெசேஜாக அனுப்பி உள்ளார். இந்த பவித்ரா கவுடா கடந்த 10 வருடமாக தர்ஷன் உடன் காதலில் இருக்கிறார். காதலியை கிண்டல் செய்த ரேணுகா சுவாமியை பவுன்சர்ஸ் வைத்து தர்ஷன் மோசமாக தாக்கி உள்ளார். அதில் ரேணுகா சுவாமி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இதில் சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இடத்தில் தர்ஷன் இருந்துள்ளார். அவர் கண் முன்தான் கொலை நடந்து உள்ளது. கொலை: போலீஸ் விசாரணையில், இறந்த ரேணுகா
சுவாமி சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் பெங்களூரு வந்தடைந்தது தெரியவந்தது. பின்னர் பிற்பகல் 2:30 மணியளவில் காமக்ஷிபாளையா காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ள ஷெட் ஒன்றிற்கு ரேணுகா சுவாமி அழைத்துச் செல்லப்பட்டார். மூன்று மணி நேரம் கழித்து தர்ஷன் அந்த ஷெட்டிற்குள் நுழைந்ததாக சிசிடிவி காட்சிகள் தெரிவிக்கின்றன. தர்ஷன் முன்னிலையில் தாக்குதல் நடந்துள்ளது. அவர் போன சில நிமிடங்களில் உடல் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. சிசிடிவி காட்சிகள் மூலம் கொலை நடந்த இடத்தில் தர்ஷன் இருந்தது உறுதியாகி உள்ளது.
சரியாக சனிக்கிழமை இரவு உடல் அப்புறப்படுத்தப்பட்டது. ஜூன் 9-ம் தேதி இந்த கொலை நடந்தது. இந்த வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் தர்ஷன் காவலில் வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த ரேணுகாசுவாமிக்கு வயது 33. மேலும் விசாரணைக்குப் பிறகே கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 10 வருட உறவு : தர்ஷனின் பவுன்சர்கள் ரேணுகா சுவாமியை அவர் முன்னிலையில் கொன்று,
அவர் வசிக்கும் காமாட்சி பாளையத்தில் உடலை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சடலம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதை நாய்கள் தின்று கொண்டிருந்தன. அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த காவலாளி இதை பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலை நடந்து உள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய தொடக்க கட்ட விசாரணையில், ரேணுகா சுவாமி சமூக வலைதள கணக்கு ஒன்றின் மூலம் பவித்ரா
கவுடா என்ற நடிகைக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்தார். கூடவே இருந்து குழி..ஆபாச படத்தை வைத்து ஆதினத்துக்கு மிரட்டல்! வாரணாசியில் கைதான ”ஸ்கெட்ச்” செந்தில் இதையடுத்து போலீசார் பவித்ரா கவுடாவின் சமூக ஊடக கணக்குகளை சோதனை செய்தனர். அதில் அவர் பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியது தெரியவந்தது. முன்னதாக, பவித்ரா கவுடாவுடன் தர்ஷனுக்கும் 10 வருடமாக தொடர்பு உள்ளது. இருவருக்கும் இடையில் திருமணம் தாண்டிய உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.