எதிரெதிரே மோதிக்கொண்ட இரண்டு விமானங்கள்.. ஒரே நொடியில் 583 பேர் பலியான சோக சம்பவம்!
11 Jun,2024
மும்பை விமான நிலையத்தைப் போலவே, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள் மோதிக் கொண்டதால், ஒரே நொடியில் 583 பேர் உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியில் இருக்கும் கேனரி தீவு ஸ்பெயினின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பகுதி. இங்கு சுதந்திர இயக்கத்தை நடத்தும் போராளிக் குழுக்களின் தாக்குதலின் காரணமாக, கேனரி தீவுக் கூட்டத்தில் இயங்கி வரும் கனேரியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் காரணமாக, கனேரியா விமான நிலையத்தை நோக்கி வந்த அனைத்து விமானங்களும் ஸ்பெயினின் லாஸ் ரோடியோஸ் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.
இவ்வாறு, ராயல் டச்சு ஏர்லைன்ஸ் விமானம் 4805 மற்றும் Pan American World Airways (Pan Am) விமானம் 1736 ஆகியவையும் அடங்கும். நிலைமை சகஜமான பிறகு, லாஸ் ரோடியோஸ் விமான நிலையத்தில் இருந்த விமானங்கள் கனேரியா விமான நிலையத்திற்கு வர உத்தரவிடப்பட்டது. இதன்படி, லாஸ் ரோடியோஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு விமானங்கள் சவால்களை எதிர்கொண்டன.
அதாவது, குறுகிய ஓடுபாதையை கொண்ட விமான நிலையத்தில், விமானங்கள் முதலில் ஓடுபாதையின் ஒரு முனையிலிருந்து மறுமனைக்கு வேகமாகச் சென்று பின்னர் 180 டிகிரி கோணத்தில் திரும்பி வேகத்தை கூட்டி, பின் பறக்க வேண்டும். ஒரு விமானம் புறப்பட்டபோது, லாஸ் ரோடியோஸ் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால், ஓடுபாதையில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனையை விமானிகளால் பார்க்க முடியவில்லை.
இருப்பினும், விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் உத்தரவுப்படி, கேஎல்எம் ஏர்லைன்ஸ் போயிங் 747 விமானம், ஓடுபாதையின் மறுமுனையை அடைந்து 180 டிகிரி திரும்பியது. அப்போது விமான நிலையத்தின் தகவல் தொடர்பு குழப்பத்தின் காரணமாக, Pan Am 1736 விமானமும் தரையிறங்கி ஓடுபாதையை அடைந்து, ஓடுபாதையின் மறுமுனைக்கு சென்றுக் கொண்டிருந்தது.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, எதிரெதிரே வரும் இரு விமானங்களையும் ஒருவருக்கொருவர் பார்க்க முடியவில்லை. விமானங்கள் மிக அருகே வரும்போதுதான் இரு விமானிகளும் பார்த்துக் கொண்டனர். அப்போது இருவரும் முழு பலத்தையும் பயன்படுத்தி விமானத்தை திருப்ப முயற்சித்தாலும், விபத்தை தவிர்க்க முடியவில்லை.