இங்கு இரவிலும் கூட மக்கள் டிவி, லைட்ஸை ஆஃப் செய்வது இல்லையாம்
11 Jun,2024
உலகில் பல்வேறு நாடுகள் உள்ளன, அவை ஒன்றை விட ஒன்று வித்தியாசமானவையாக இருக்கும். உணவு, உடை, பன்பாடு, கலாச்சாரம் என அனைத்திலும் மாறுபட்டிருக்கும். இவ்வாறு பல வித்தியாசங்கள் இருந்தாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகின்றனர். ஆனால் இந்த ஒரு தீவில் மக்களால் நிம்மதியாக உறங்க கூட முடியாத சூழல் உள்ளது. இங்கு இருக்கும் வீடுகளில் மக்கள் நள்ளிரவிலும் டிவி மற்றும் மின் விளக்குகளை அணைப்பதே இல்லை.
பொதுவாக தூங்கும் போகும் டிவி மற்றும் மின் விளக்குகளை அனைத்துவிடுவது தான் பெரும்பாலன பகுதிகளில் நடைமுறையாக உள்ளது. சிலருக்கோ தூங்கும் அறை இருட்டாக இருக்க வேண்டும். சிறிது வெளிச்சம் பட்டாலும் கூட தூக்கம் கலைந்துவிடும். இப்படிப்பட்ட சூழலில் தான் இந்த மக்கள் இரவிலும் டிவி மற்றும் மின் விளக்குகளை அணைக்காமல் இருக்கின்றனர். இதற்கு பின்னால் ஒரு அதிர்ச்சியான காரணமும் உள்ளது.
டெய்லி ஸ்டோரியின் அறிக்கையின்படி, தென் கொரியாவின் சிறிய தீவான யோங்பியோங்கில் மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் இல்லை. இந்த மக்கள் தொடர்ந்து விழித்துக்கொண்டே இருக்கின்றனர். இந்த தீவு தென் கொரியாவின் எதிரி நாடான வடகொரியாவில் இருந்து வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கடந்த ஜனவரியில் வடகொரியா இதன் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக அங்கு மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர்.
பீரங்கி தாக்குதலை தடுக்க அவர்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படாலாம் என்ற காரணத்தால் தாங்கள் எப்போதும் விழித்துக்கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.