இந்த மாதம் சனி பெயர்ச்சி.... எந்த ராசிக்கு என்ன பலன்? 12 ராசிகளுக்கான பலன்!

09 Jun,2024
 

 
 
 
2024 ஜூன் மாதம் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி எந்த ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
 
கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார். இவர்தான் இந்த முறை வக்கிர பெயர்ச்சி அடைய போகிறார். கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.
 
 
சனி எந்த திசையில் செல்கிறார் .. உங்கள் ராசிக்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்து உங்களின் வாழ்க்கை மேலே போக போகிறதா கீழே விழ போகிறதா என்று பார்த்து விடலாம். மேஷம்: இனி ஜூன் 30 முதல் உங்களுக்கு பணம் தேடி வரும். சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு வரும். புதிய வேலை கிடைக்கும். நிலம் வாங்கும் வாய்ப்புகள் வரும். கடன்களை அடைப்பீர்கள் . இத்தனை காலம் நிலவிய கடன்களுக்கு முடிவு வரும். முக்கியமாக பண ரீதியாக நிலவி வந்த பிரச்சனைகள் சரியாகும். ஆனால் அதே சமயம் ஆரோக்கிய ரீதியாக குறைபாடுகள் ஏற்படலாம். வயிற்று பிரச்சனை ஏற்படலாம். கால் வலி, இதய ரீதியான பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை மாற்றங்கள் இடமாற்றங்களுக்கு வாய்ப்பு உண்டு.
 
 
ரிஷபம்:
 
இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு பணத்தை கொடுக்கும். அடுத்த 1 வருடம் உங்களுக்கு பண கஷ்டம் இருக்காது. பொருளாதார ரீதியாக நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். கடன்களை அடைக்க முடியும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும். வயிற்று பிரச்சனை வரும். சிறுநீரக பிரச்சனை வரும். கிட்னி பாதிக்கும் ஆபத்துகள் உள்ளன. சனி தொடர்ந்தால் விடாது என்பார்கள். அந்த வகையில் உங்களுக்கு வாகன ஓட்டத்தில் சனி உள்ளது. எனவே கவனமாக வண்டி வாகனம் ஓட்டவும். தப்பி தவறி கூட வேகமாக செல்ல வேண்டாம். பெரிய விபத்துகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.
 
மிதுனம்:
 
 மிதுன ராசிக்கு இந்த வக்ர பெயர்ச்சி மூலம் நிறைய பொருளாதார பலன்கள் கிடைக்கும். முழுக்க முழுக்க இது பொருளாதாரத்திற்கான பெயர்ச்சி என்று கூட உங்களுக்கு சொல்லலாம். பண ரீதியாக உங்களுக்கு மிகப்பெரிய அளவில் பலன்கள் கிடைக்கும். இத்தனை காலம் மாதம் 1ம் தேதி சம்பளம் வாங்கி 5ம் தேதி அதை காலி செய்துவிட்டு 6ம் தேதி கடனை வாங்கி இருப்பீர்கள். இனி அப்படி இல்லை. அதே சமயம் உங்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை வரலாம். திருமண ரீதியாக உங்களுக்கு பல குழப்பங்கள் ஏற்படலாம். சில சமயங்களில் பெண் பார்ப்பதில், மாப்பிள்ளை பார்ப்பதில் கூட சிக்கல் ஏற்படலாம். முக்கியமாக போக்குவரத்தில் கவனமாக இருங்கள். நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள்.
 
 கடகம்:
 
 இந்த சனி வக்ர பெயர்ச்சி கொஞ்சம் உங்களுக்கு ரிஸ்க்தான். வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும். இந்த பெயர்ச்சி மூலம் உங்களுக்கு செலவு அதிகரிக்கும். அதை சுப செலவாக மாற்றுவது உங்கள் சாதுர்யம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள். ரிஸ்க் எடுக்க வேண்டாம். சில விஷயங்களை ஆறப்போட்டு அடுத்த வருடம் கூட செய்யுங்கள். பாலியல் ரீதியான விஷயங்களில் கவனம். சில மாதங்களுக்கு ஆசைகளை அடக்கவும். பெண்கள் விஷயத்தில் உஷார். 
 
சிம்மம்: 
 
2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம். அடுத்த 1 வருடம் உங்கள் வாழ்க்கையில் சனி என்னவெல்லாம் செய்ய போகிறார் என்று பார்க்கலாம். நல்ல பலன்கள்; உங்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தனை காலம் குழந்தை இல்லாமல் போனவர்களுக்கு குழந்தை பிறப்பு ஏற்படும். எதிர்காலத்தை புரட்டி போடும் அந்த ஒரு சம்பவம் கண்டிப்பாக நடக்கும். அதாவது திருமணத்திலோ வேலையிலோ நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் நடந்து உங்கள் எதிர்காலத்தையே புரட்டி போடும்.மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை என்று பல பிரச்சனைகளில் இருந்த உங்களுக்கு பிரச்சனைகள் தீர போகிறது.
 
 கன்னி: 
 
சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பு, கடன்களை அடைக்கும் வாய்ப்பு, நிலம் வாங்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அரசு வேலை கூட தேடி வரும். வேலை ரீதியாக உங்களுக்கு வெற்றி மீது வெற்றி குவிந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஏற்கனவே பார்க்கும் வேலையில் மே மாத்திற்கு பின் திடீர் ப்ரோமோஷன் கிடைக்கும். அதாங்க திடீர் என்று டிஎல் ஆவது, மேனேஜர் ஆவது என்று உங்கள் வேலையில் நீங்கள் சிம்மாசனத்தில் அமர போகும் காலம் வந்துவிட்டது. முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒன்றல்ல, இரண்டல்ல பல நல்ல வேலைகள் உங்கள் வீட்டை தேடி வரும். 
 
துலாம்: 
 
அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏமாற்றம் அடைய வாய்ப்புகள் உள்ளதால் எதையும் யோசித்து செய்யுங்கள். ரிஸ்க் வேண்டாம். இந்த சனி பெயர்ச்சி காரணமாக அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். அண்ணன் - தம்பி உறவில் சிக்கல் ஏற்படலாம். அதனால் கவனமாகம் யோசித்து பேசுங்கள் . இத்தனை காலம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தது. உடல் ஆரோக்கியம் சிக்கலாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும்.நல்ல விஷயங்கள் என்னென்ன: பொருளாதார ரீதியாக நிலவிய கடன்கள் சரியாகும். அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். 
 
விருச்சிகம்:
 வேலை இருந்தால் நல்ல சம்பளம் இல்லை, சம்பளம் இருந்தாலும் 10 நாளைக்குதான் நிற்கிறது மீதம் மாதத்தில் 20 நாட்கள் கையில் பணம் இல்லை என்ற நிலைதான் இருக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு கடன் தொல்லை, சொத்துக்களை இழந்தது, நிலத்தை இழந்தது என்று எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்துவிட்டது. விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த 5 வருடமாக கஷ்டப்பட்டு வந்து இருப்பீர்கள். வேலை இல்லை, வருமானம் இல்லை என்ற நிலை பலருக்கும் இருந்திருக்கும். இனி இதனால் உங்களுக்கு பண மழை கொட்டும் என்பார்களே அது இப்போது வரப்போகிறது. இதனால் பணம் உங்களுக்கு கொட்டோ கொட்டு என்று கொட்டும்.
 
 தனுசு:
 ஜூன் 30ம் தேதி நடக்க உள்ள சனி வக்கிர பெயர்ச்சி தனுசு ராசிக்கு எதிர்பார்க்காத பலன்களை கொடுக்க போகிறது. அவை என்னென்ன பலன்கள் என்று பார்க்கலாம். உங்களுக்கு தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும் இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு பின்வரும் பாதக பலன்கள் ஏற்படும். அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள். கிட்னி பிரச்சனை ஏற்படலாம். மன நலனில் பிரச்சனை ஏற்படலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம். 
 
மகரம்:
 மகர ராசிக்கு திருமண வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகள் சரியாகும் . இத்தனை காலம் மணவாழ்க்கையில் நிலவிய மோதல்கள் முடிவிற்கு வரும். மீண்டும் கணவன் மனைவி ஒன்றாக வாழும் வாய்ப்பு கிடைக்கும். மகர ராசிக்கு இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வேலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும்: வேலையில் உங்களுக்கு ப்ரோமோஷன் கிடைக்கும். வேலை பார்க்கும் இடங்களில் நீங்கள்தான் வின்னர். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். நினைத்ததும் வேலை, பிஸ்னஸ் விஷயங்களில் அப்படியே கைகூடும். நீண்ட நாட்களாக நீங்கள் கடன் கொடுத்து திரும்பி கொடுக்காதவர்கள் கூட இப்போது நீங்கள் கேட்காமல் பணம் கொடுப்பார்கள். ஆனால் இதனால் கண்டிப்பாக நிறைய சுப செலவுகள் இருக்கும்.
 
 
கும்பம்:
 
 நில பிரச்சனை தீரும். அப்பா மகன் இடையிலான உறவு சரியாகும். உங்கள் பெண்ணின் வாழ்க்கையில் நிலவிய பிரச்சனைகளும் சரியாகும். விவாகரத்து வரை சென்ற உங்களின் பெற்றோர் சேர கூட வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலம் பேசாமல் இருந்த சொந்தங்கள் பேசும். கடந்த 1 வருடம் உங்களுக்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பாக இல்லை என்றாலும் இந்த வருடம் பிரச்சனை இல்லாமல் செல்லும். தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள். யாரிடமும் கோபத்தை காட்ட வேண்டாம். உங்கள் குணமே எடுத்து எரிந்து பேசுவதுதான். அந்த குணம் தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சுப செலவாக மாற்றுங்கள். வீடு கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நிலத்தகராறு ஏற்படும். உங்களுக்கு செலவு அதிகரிக்கும். அதை சுப செலவாக மாற்றுவது உங்கள் சாதுர்யம். 
 
 
மீனம்: 
 
போக்குவரத்தில் கவனமாக இருங்கள்.நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவி அந்யோனியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும். உங்களுக்கு இந்த வருடம் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் பின்வரும் நல்ல விஷயங்களும் நடக்கும். உங்களின் ஆரோக்கியம் சரியாகும். இத்தனை காலம் நீங்கள் உடல் ரீதியாக பட்ட கஷ்டங்கள் எல்லாம் சரியாகும்.
 Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies