டென்மார்க் பிரதமர் மீது நபர் ஒருவர் தாக்குதல் - தலைநகர வீதியில் சம்பவம்
08 Jun,2024
டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மீது கொப்பன்ஹேகன் வீதியில் நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டு;ள்ளார்.
நகரத்தின் சதுக்கத்தில் நபர் ஒருவர் பிரதமரை நோக்கி சென்று அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவில் நாம் நம்புகின்ற குரல்கொடுக்கின்ற அனைத்திற்கும் எதிரான இழிவான செயல் இதுவென ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உருசுலா வொன்டெயர் லெயென் தெரிவித்துள்ளார்.
கொப்பன்ஹேகனின் குல்டிரோவேர்ட் பகுதியில் நபர் ஒருவர் டென்மார்க் பிரதமரை தாக்கினார் இந்த சம்பவத்தினால் பிரதமர் அதிர்ச்சியடைந்துள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலிற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
எதிர்திசையிலிருந்து வந்த முதுகில் பிடித்து பிரதமரை தள்ளினார் அவர் விழுந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
டென்மார்க் ஐரோப்பிய தேர்தல்களில் வாக்களிப்பதற்கு சில தினங்களிற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.