இந்த வார ராசி பலன் - ஜூன்- 7 -2024 முதல் -ஜூன்- 13- 2024 வரை

06 Jun,2024
 

 
 
ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் ரிஷப ராசியில் இருக்கிறார். செவ்வாய் மேஷ ராசியில் இருக்கிறார். புதன் ரிஷப ராசியில் அமர்ந்திருக்கிறார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் ரிஷப ராசியில் அமர்ந்திருக்கிறார். ஜூன் 12 ஆம் தேதி மிதுனத்திற்கு செல்கிறார். கும்பத்தில் சனி... மீனத்தில் ராகு... கன்னியில் கேது... என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த வாரத்தில் வேறு கிரக மாற்றம் இல்லை. சந்திரன் இந்த வாரம் மிதுனம் கடகம் சிம்மம் ஆகிய ராசிகளில் பயணம் செய்கிறார்.
மிதுனம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, பார்வைகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், சுப விரையச் செலவுகள் யாருக்கு வரும் என்று பார்க்கலாம்.
 
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம் சூரியன் - ரிஷப ராசி செவ்வாய் - மேஷ ராசி புதன் - ரிஷப ராசி குரு - ரிஷப ராசி சுக்கிரன் - ரிஷப - மிதுன ராசி சனி -கும்ப ராசி ராகு - மீன ராசி கேது - கன்னி ராசி
 
மேஷம்
 
 வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே... நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் இருக்கிறார். இந்த வாரத்தில் வெற்றி படிக்கட்டுக்கு மிக அருகாமையில் நிற்கிறீர்கள். உங்களுடைய செயல் திறனால் பொருளாதார முன்னேற்றத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல போகிறீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சிகள் வியாபாரத்திற்கு இருந்த இடையூறுகளை விலக்கி வைக்கும். செவ்வாய் 1 ஆம் இடத்தில் இருக்கிறார். மனை இடம் நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். புதன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். சிக்கலான காரியங்களுக்கு தீர்வு காணும் முடிவை சற்று தள்ளிப் போடுங்கள். குரு 2 ஆம் வீட்டில் இருக்கிறார். உத்தியோகத்தில் சிலருக்கு பிரச்சனை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி இழந்த நிலை காணப்படும். சுக்கிரன் 1,2 ஆம் இடத்தில் இருக்கிறார். மன மொத்த தம்பதிகளுக்கு இடையே மனக்குழப்பம் உண்டாகும். சனி 11 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலுக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவீர்கள். வெளியூர் பயணங்களால் சில நன்மைகள் உண்டாகும். ராகு 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். நிதானமாக செயல்படுங்கள். கேது 6 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்களால் உங்களுக்கு சில உபத்திரவங்கள் வந்து சேரும்
 
 
 
ரிஷபம் 
 
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே.... சூரிய பகவான் உங்கள் ராசியில் அமர்ந்து இருக்கிறார். எதிர்பார்த்த இடத்திலிருந்து தடையில்லாமல் பணம் வரும். தொழிலில் சாதனை படைப்பீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் மேன்மையை கொண்டு வரும். செவ்வாய் 11 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். திட்டம் போட்டு காரியம் செய்தால் வெற்றி நிச்சயம். புதன் 1 ஆம் ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். பங்குச்சந்தை வியாபாரத்தில் படுஜோராக இறங்குவீர்கள். குரு 1 ஆம் வீட்டில் இருக்கிறார். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை விவசாயத்தில் முதலீடு செய்வீர்கள். சுக்கிரன் 1,2 ஆம் வீட்டில் இருக்கிறார். பிரிந்து போன உறவுகள் ஒட்டி வரும். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும். சனி 10 ஆம் வீட்டில் இருக்கிறார். அரசு பணியாளர்களுக்கு வேலை மாற்றம் உண்டாகும். தனியார் ஊழியர்கள் முதலாளிகளின் பாராட்டை பெறுவது கடினம். ராகு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்‌ கேது 5 ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் துணிச்சலாக முதலீடு செய்வீர்கள். கூட்டுத்தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
 
 
மிதுனம் 
 
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடிக்கும் புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெளிநாட்டு பயணங்களின் மூலம் தொழிலுக்கு தேவையான உதவிகளை திரட்டுவீர்கள். வியாபாரத்திற்கு எதிராக இருந்த போட்டிகளை தகர்த்து எறிவீர்கள். சந்திரனின் சஞ்சாரங்கள் சாதக பாதகமான பலன்களை தந்தாலும் பொருளாதார ஏற்றத்தை கொண்டு வரும். செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் சிக்கல்களை கடந்து வெற்றி நடை போடுவீர்கள். புதன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். படிப்புக்காக அதிகம் செலவு செய்வீர்கள். குரு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வேலை இழக்கும் நிலை உருவாகும். அரசு ஊழியர்கள் கவனமாக பணியாற்ற வேண்டும். சுக்கிரன் 21,1 ஆம் இடத்தில் இருக்கிறார். பேசி வைத்த திருமணங்கள் தள்ளிப் போகலாம். கலைத்துறையினர் சில சிரமங்களை எதிர் நோக்குவார்கள். சனி 9 ஆம் இடத்தில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது இரு மடங்கு எச்சரிக்கை தேவை. விபத்துகள் ஏற்படலாம். ராகு 10-ஆம் இடத்தில் இருக்கிறார். பெரிய மனிதர்களின் சந்திப்பால் தொழிலுக்கு தேவையான உதவிகளை பெறுவீர்கள். கேது 4 ஆம் இடத்தில் இருக்கிறார். கோயில் காரியங்களுக்கு நிதி உதவி செய்வீர்கள். கோயில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். 7,8 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். கவனமாக காரியமாற்றுங்கள். 
 
கடகம் 
 
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் அமர்ந்து இருக்கிறார். உங்களுடைய பொதுநல போக்கால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். சந்திரன் இந்த வாரத்தில் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்துவார். மேலும் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகளை தருவார். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருக்கிறார். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் வார இறுதியில் நல்ல முடிவுக்கு வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். புதன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகள் அக்கறையாக படிப்பார்கள். வழக்கறிஞர்கள் வாதத் திறமையால் புகழ் பெறுவார்கள். ஐடி ஊழியர்கள் கணிசமான வருமானம் பார்ப்பார்கள். குரு 11 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளிநாட்டு பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வியாபாரம் சம்பந்தப்பட்ட நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் 11,12 ஆம் வீட்டில் இருக்கிறார். குழந்தை செல்வம் இல்லாத குடும்பத்தில் அந்த பாக்கியம் சித்திக்கும். பெண்களால் ஆதாயம் கிடைக்கும். சனி 8 ஆம் இடத்தில் இருக்கிறார். வேலை காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்வீர்கள். அலைச்சல் அதிகமாக இருக்கும். ராகு 9 ஆம் இடத்தில் இருக்கிறார். நண்பர்கள் உதவியால் புதிய தொழில் தொடங்குவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். கேது 3 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். வீட்டை பழுது பார்த்து வர்ணம் பூசுவீர்கள். 9,10, 11ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். எச்சரிக்கையோடு செயல்படுங்கள். 
 
சிம்மம் 
 
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே... உங்கள் ராசிநாதன் 10 ஆம் வீட்டில் இருக்கிறார். சூழ்ச்சிகளால் உங்களை வீழ்த்த நினைத்தவர்கள் சோர்ந்து போவார்கள். எத்தனை இடையூறுகள் வந்தாலும் தொழிலில் நீங்கள் காட்டும் அக்கறைக்கு பங்கம் வராது. சந்திரனுடைய சஞ்சாரம் மனதிற்கு சில சங்கடங்களை கொண்டு வந்தாலும் சாதுரியமான போக்கால் அதை நிவர்த்தி செய்வீர்கள். தொழிலுக்குத் தேவையான கடன்களை பெறுவதில் வெற்றி அடைவீர்கள். செவ்வாய் 9 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். புதிய ஆர்டர்களை பெற்று தொழில் போட்டியாளர்களை பொறாமைப்பட வைப்பீர்கள். அரசு பணியாளர்கள் அதிக வருமானம் பெறுவார்கள். புதன் 10 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். வருமா வராதா என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். சிறு வியாபாரிகள், கடை வைத்திருப்பவர்கள் கணிசமான லாபத்தை அடைவார்கள். குரு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். பேசிய திருமணங்கள் நின்று போகலாம். நெருங்கிய உறவினர் வகையில் துக்க காரியங்கள் நடக்கலாம். சுக்கிரன் 10,11 ஆம் இடத்தில் இருக்கிறார். கலைத்துறையினர் வெளிநாடு செல்வார்கள். வழக்கறிஞர்கள் தொழிலை திறம்பட நடத்துவார்கள். மருத்துவர்கள் மகத்தான சாதனை படைப்பார்கள். ராகு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். செலவு கை மீறி போய் கடன் வாங்குவீர்கள். கேது 2 ஆம் வீட்டில் இருக்கிறார். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாமல் தடுமாறுவீர்கள். 11,12ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். 
 
கன்னி 
 
அறிவுத் திறனை அள்ளித்தரும் புதனை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே... சூரியன் 9 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். கடினமான வார்த்தைகளை எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தாதீர்கள். அலட்சிய போக்கால் சில நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு சந்தோஷமான செய்திகளை கொண்டு வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஏற்றமான பலனை தரும். செவ்வாய் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். உறவினர்களின் உள்குத்து வேலையால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். மனைவியின் மனதுக்கு இதமாக நடந்து கொள்ளுங்கள். புதன் 9 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். வியாபாரம் விருத்தி அடையும். திடீர் பொருளாதார வரவு திக்கு முக்காட வைக்கும். குரு 9 ஆம் வீட்டில் இருக்கிறார். மனைவி மக்கள் ஆசைப்பட்ட துணிமணிகளை வாங்கி கொடுப்பீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு சீட்டு கட்டுவீர்கள். சுக்கிரன் 9,10 ஆம் வீட்டில் இருக்கிறார். சினிமாத்துறையினர் சிக்கலை சந்திப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையும். சனி 6 ஆம் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகளின் கல்விச் செலவு அதிகரிக்கும். ராகு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிலவும். கேது ராசியில் அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் ஏதாவது சின்ன சின்ன சண்டைகள் வந்து சிரமப்படுவீர்கள்.14 ஆம் தேதி சந்திராஷ்டமம். விழிப்போடு செயலாற்றுங்கள். 
 
துலாம்
 
 தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே... சூரியன் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். "சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சில் பட்டதடா" என்று தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகளால் மனம் வெதும்புவீர்கள். ஆனால் நெருக்கமான நண்பர்களின் உதவியால் அதைத் தாண்டி வருவீர்கள். சந்திரனும் உங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறார். பண வரவு சிறப்பாக இருக்கும். செவ்வாய் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். திருமண பேச்சு வார்த்தைகளில் சிக்கல் உண்டாகும். ஐ டி யில் வேலை பார்க்கும் இளம் தம்பதிகள் புரிந்துணர்வு இல்லாமல் விவாகரத்து பெறுவார்கள். புதன் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். நிலம் வாங்கலாம். புதிய வீடு கட்டுவதற்காக திட்டமிடுவீர்கள். கல்விக்காக பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். குரு 8 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழில் வளர்ச்சி மேம்பாடு அடையும். வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். சுக்கிரன் 8,9 ஆம் இடத்தில் இருக்கிறார். பிரிந்து போன உறவுகளை ஒட்ட வைப்பீர்கள். சனி 5 ஆம் இடத்தில் இருக்கிறார். விவசாய வேலையில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தோப்புக் குத்தகை மூலம் வருமானம் பெறுவீர்கள். ராகு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். பொறுமையும் நிதானமும் குடும்பப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும். கேது 12 ஆம் அமர்ந்திருக்கிறார். வரவுக்கு மேல் செலவு வந்து உங்களை திணறடிக்கும்.
 
 விருச்சிகம் 
போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே... சூரியன் 7 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். என்னதான் திட்டம் போட்டு காரியம் செய்தாலும் எதிர்பாராத செலவு வந்து கையை கடிக்கும். வாகனங்கள் பழுதாகி அவசரப் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். சந்திரனின் நகர்வுகள் அவ்வளவு சாதகமாக இல்லை. அடுத்தவருக்காக பொறுப்பு ஏற்றுக் கொள்வது நல்லதல்ல. சிறு வியாபாரிகள் தொழிலுக்கு தகுந்த லாபம் பெறுவார்கள். தனியார்துறை ஊழியர்கள் முதலாளிகளின் அன்பை பெறுவதற்கு கடுமையாக உழைப்பார்கள். வங்கியில் வாங்கிய கடனை அடைப்பீர்கள். செவ்வாய் 6 ஆம் இடத்தில் பயணிக்கிறார். வியாபாரத்தில் நுணுக்கங்களை புகுத்துவீர்கள். புதன் 7 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ஆரம்பத்தில் தொழில் தடுமாற்றம் ஏற்படும். பின்னர் சூடு பிடிக்கும். குரு 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் சித்திக்கும். சுக்கிரன் 7,8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். அரசியலில் உங்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். விரும்பிய பெண்ணின் அன்பை பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். சனி 4 ஆம் இடத்தில் இருக்கிறார். முயற்சிகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணிசமான கையிருப்பு மனதை மகிழ்ச்சிப்படுத்தும். ராகு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். கடல் கடந்து பிரயாணம் செல்வீர்கள். கேது 11 ஆம் வீட்டில் இருக்கிறார். குலதெய்வ வழிபாட்டின் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
 
 தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட 
 
தனுசு ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். நினைத்த காரியங்கள் தடங்கல் இல்லாமல் நிறைவேறும். கேட்ட இடங்களில் பணம் கிடைக்கும். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். சந்திரனின் இடப்பெயர்ச்சி சாதகமான பலனை தரும். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோகமாக இருக்கும். கமிஷன் வியாபாரம் அதிக லாபத்தை தரும். செவ்வாய் 5 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதன் 6 இடத்தில் இருக்கிறார். சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் அடைவீர்கள். குரு 6 ஆம் இடத்தில் இருக்கிறார். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள அதிகம் செலவு செய்வீர்கள். சுக்கிரன் 6,7ஆம் இடத்தில் இருக்கிறார். அறிமுகமில்லாத பெண்களிடம் நெருக்கம் காட்டாதீர்கள். அவர்களுக்காக பணம் செலவு செய்தால் அது விரைய கணக்கில் தான் போய் முடியும். சனி 3 ஆம் இடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் நல்லபடியாக நடக்கும். மணல் செங்கல் வியாபாரிகள் மகத்தான லாபம் பெறுவார்கள். ராகு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாக கண்காணிக்க வேண்டும். கேது 10ஆம் இடத்தில் இருக்கிறார். வராமல் இருந்த சில கடன்கள் வசூலாகி மனத்திருப்தி உண்டாகும்.
 
 மகரம் 
 
வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே.... சூரியன் 5 ஆம் இடத்தில் நிற்கிறார். அரசாங்க பொதுப்பணித்துறை வேலை வாய்ப்புகள் நீங்கள் எதிர்பார்த்தபடி கைக்கு வந்து சேரும். அரசியல் நண்பர்களால் இந்த அரிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். சந்திரனின் நகர்வுகள் சற்று பாதகமாக உள்ளதால் பங்குச்சந்தை வியாபாரத்தில் பக்குவமாக முதலீடு செய்யுங்கள். செவ்வாய் 4 இடத்தில் சஞ்சரிக்கிறார். விவசாய தொழிலில் புதிய பரிமாணத்தை கொண்டு வரும். உழவு நடவு வேலைகளில் உற்சாகமாக இறங்குவீர்கள். புதன் 5 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் எதிர்பார்ப்பை விட வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். லாபம் பெருகி கையிருப்பு அதிகரிக்கும். குரு 5 ஆம் இடத்தில் இருக்கிறார். முட்டுக்கட்டைகளை முறியடித்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சனி 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய நல்ல செய்தி தாமதமாகும். கட்டுமான வேலைகள் சுணக்கமாக நடக்கும். ராகு 3 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்துடன் உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். கேது 9 ஆம் இடத்தில் இருக்கிறார். தனியார் துறை ஊழியர்களும் அரசாங்க ஊழியர்களும் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவார்கள்.
 
 கும்பம் 
 
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே... சூரியன் 4 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். தந்தையார் தக்க சமயத்தில் உங்களுக்கு பண உதவி செய்வார். வழக்கறிஞர்கள் வாத திறமையால் புகழ் அடைவார்கள். மருத்துவர்கள்சிக்கலான அறுவை சிகிச்சைகளை துணிச்சலாக செய்து முடிப்பார்கள். செவ்வாய் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். பங்குச்சந்தை வர்த்தகம் தங்கு தடையில்லாமல் நடக்கும். பந்தயங்களில் கவனமாக இருங்கள். புதன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழிலை புத்திசாலித்தனமாக விரிவுபடுத்துவீர்கள். வசீகர பேச்சால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். குரு 4 ஆம் வீட்டில் இருக்கிறார். வீடு கட்டுவதில் வெற்றி காண்பீர்கள். அரசாங்க ஊழியர்கள் பதவி உயர்வு அடைவார்கள். சுக்கிரன் 4,5 ஆம் இடத்தில் இருக்கிறார். கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியடைவார்கள். குழந்தைகள் குதூகலமாக இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பீர்கள். சனி 1 ஆம் வீட்டில் இருக்கிறார். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். ராகு 2 ஆம் வீட்டில் இருக்கிறார். முயற்சிகளால் பணவரவை அதிகப்படுத்துவீர்கள். கேது 8 ஆம் இடத்தில் இருக்கிறார். தகப்பனார் வகையில் மருத்துவ செலவு வரலாம். சற்று கவனமாக இருப்பது நல்லது.
 
 மீனம்
 
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே.... சூரியன் 3 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை என்று மனம் வருத்தம் அடையும் அளவுக்கு வியாபாரத்தில் சில தடங்கல்கள் வரும். அதை இறைவன் அருளால் தாண்டிச் செல்வீர்கள். உலவுகின்ற நிலவு தொழில் துறைக்கு உத்வேகத்தை கொடுக்கும். செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலில் துணிந்து இறங்குங்கள். மண்ணில் போடுகின்ற பணம் பொன்னாக விளையும். புதன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார். தொடக்கத்தில் மந்தமான நிலையிலிருந்த வியாபாரம் வார இறுதியில் சூடு பிடிக்கும். குரு 3 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். வயதான பெற்றோர்கள் காசி யாத்திரை செல்ல ஆசைப்படுவார்கள். அதற்கான ஏற்பாட்டை செய்து கொடுங்கள். சுக்கிரன் 3,4 ஆம் இடத்தில் இருக்கிறார். வீட்டில் திருமண நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கும். சனி 12 ஆம் இடத்தில் இருக்கிறார். தொழில் வியாபாரம் பங்குச்சந்தை அனைத்தும் சிறப்பாக நடக்கும். ராகு 1 ஆம் இடத்தில் இருக்கிறார். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். கேது 7 ஆம் இடத்தில் இருக்கிறார். வெளியூர் பயணங்களின் போது பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். வாகனங்களை நிறுத்தும்போது பூட்டி விட்டு செல்லுங்கள்.
 Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies