பாஸ்தாவில் உயிரிழந்த பாட்டியின் சாம்பலை சேர்த்து குடும்பத்திற்கு உணவளித்த பெண்
06 Jun,2024
..
ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து வெளிப்படையாக கூறிய அந்தப் பெண், ஆமாம், தெரிந்தேதான் இதை செய்தேன். ஒரு ஜாலிக்காக இதை சாப்பிட்டு பார்த்தேன்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய பாட்டியின் உடலை எரித்த சாம்பலை சாப்பிட்டு பரபரைப்பை உண்டாக்கியுள்ளார். இந்தப் பெண்ணின் பாட்டி கடந்த வருடம் இறந்து போயுள்ளார். அவரது உடலை தகனம் செய்த பிறகு கிடைத்த மிச்சங்களை ஒரு பாத்திரத்தில் சேமித்து வீட்டிலேயே வைத்திருந்திருக்கிறார். இந்த சாம்பலை தான் சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்து உறுப்பினர்களுக்கும் பரிமாறியுள்ளார். பாட்டியின் இறப்பை நினைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் வருந்தி கொண்டிருந்த நிலையில், அவர்களது மனநிலையை மாற்றவும் அவர்களை ஆறுதல்படுத்தவும் முடிவு செய்த அந்தப் பெண், வீட்டில் வைத்திருந்த பாட்டியின் சாம்பலை எடுத்து தனது தாய் மற்றும் சகோதரருக்கு கொடுத்துள்ளார்.
இந்தப் பெண் வேண்டுமென்றே தான் தனது பாட்டியின் சாம்பலை சாப்பிட்டுள்ளார். அதோடு நிற்காமல் பாஸ்தா சாஸில் அந்த சாம்பலை கலந்து தனது சகோதரனுக்கும் கொடுத்துள்ளார். இதையெல்லாம் செய்துவிட்டு, வழக்கமாக அண்ணன்-தங்கைக்குள் நடக்கும் சிறு சிறு விளையாட்டுகள், ஏமாற்று வித்தைகள் போல்தான் இதையும் செய்தேன் என சர்வ சாதாரணமாக கூறுகிறார்.
ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து வெளிப்படையாக கூறிய அந்தப் பெண், ஆமாம், தெரிந்தேதான் இதை செய்தேன். ஒரு ஜாலிக்காக இதை சாப்பிட்டு பார்த்தேன். இனி என் பாட்டி என்னோடு சேர்ந்து உயிர் வாழ்வார். இன்னொரு ரகசியத்தையும் நான் இப்போது சொல்கிறேன். இதற்கு முன் இந்த விஷயத்தை நான் யாரிடமும் கூறியதில்லை. நானும் என் சகோதரனும் சிறு வயதிலிருந்து ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததில்லை. அவனிடன் ஃப்ராங்க் செய்தால் நன்றாக இருக்குமே என நினைத்தேன். அதனால் பாஸ்தா சாஸில் பாட்டியின் சாம்பலை கலந்தேன் என எந்த அதிர்ச்சியும் இன்றி கூறியுள்ளார்.
இதேப்போன்று நடந்த இன்னொரு சம்பவத்தில் கேசி என்ற 26 வயது நிறம்பிய பெண் ஒருவர், தனது கணவரின் சாம்பலை சாப்பிட்டு சாப்பிட்டு அதற்கு அடிமையாகி போயுள்ளார். இவர் எப்போதும் தனது கணவரின் சாம்பல் இருக்கும் பாத்திரத்தை அவ்வப்போது திறந்து, அதை விரல்களால் எடுத்து சுவைப்பாராம். ஆஸ்துமா நோயினால் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவர் கணவர் இறந்து போயுள்ளார். தனது கணவரின் உடலை எரித்த போது கிடைத்த மிச்ச சாம்பலை அட்டைப் பெட்டியிலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றும் போதுதான் முதல்முறையாக இதை சுவைத்துப் பார்த்துள்ளார்.
ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது இதுபோல் விசித்திரமான பழக்கங்கள் ஏதாவது இருக்கிறதா?