Job | உலகில் பல்வேறு தொழில்கள் செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட சில தொழில்களை செய்ய மக்கள் விரும்புவதில்லை.
அதிக சம்பளத்துடன் பெரும் பணியிடங்களுடன் இருக்கும் பணிகலாக இருப்பினும் இப்பணிக்கு பெரும்பாலும் மக்கள் செல்லுவது இல்லை. நாம் இப்போது பார்க்கபோகும் இந்த பட்டியலில் உள்ள வேலைகளுக்கு நல்ல டிமாண்ட் உள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் நாம் நினைத்து பார்க்கமுடியாத சம்பளமும் இதற்கு வழங்கப்படுகிறது.
சுகாதாரப் பணியாளர் : இதன் தேவை உலகளவில் உள்ளது. இந்த பணியாளர்கள் இல்லை என்றால் ஊரே குப்பையாக மாறிவிடும். இந்தியாவில் என்னதான் இதற்கான சரியான உபகரணங்கள் இல்லை என்றாலும், உலக நாடுகளில் இந்த வேலைகளுக்கு என தனி பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுகிறது. இந்த வேலைக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு மேல் வருட சம்பளம் உள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.40 லட்சமாக உள்ளது.
இறைச்சிக்கூடப் பணியாளர் : எந்த படிப்பு அறிவும் தேவையில்லாத பணி. பலரும் இந்த பணியை விரும்ப மாட்டார்கள். இறைச்சிக் கடைகள், ஏற்றுமதி நிறுவனங்களில் அதனை வெட்டி பேக்கேஜிங் பகுதிக்கு அனுப்பும் பணி தான் இது. இந்த வேலைக்கு 15 டாலர்கள் மணிநேரத்திற்கு கிடைக்கும். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,200 ஆகும்.
கழிவறை பணியாளர் : இந்தியாவில் தான் மக்கள் இதனை எந்த பாதுகாப்பும் இல்லாமல் செய்து வருகின்றனர். ஆனால் வளர்ந்த நாடுகளில் இதற்கான உபகரணங்கள் உள்ளன. அதனைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய மணிநேரத்திற்கு 15 டாலர்கள் வழங்கப்படுகிறது.
சுரங்க பணியாளர் : மிகவும் மோசமான பணி இது. மோசமான காலநிலையில் மேற்கொள்ளப்படும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தொழில்களில் ஒன்று இது. இந்த வேலைக்கு யாரும் செல்ல விரும்ப மாட்டார்கள். அப்படி செல்பவர்கள் வருடத்திற்கு 1 லட்சத்து 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதிக்க முடியும். இந்திய மதிப்பில் இது ரூ.94 லட்சமாகும்.
கழிவுநீரோடை ஆய்வாளர் : கழிவு நீர் செல்லும் குழாயில் பழுது இருந்தால் அதனைக் கண்டுபிடிக்க வேண்டும். இது மிகவும் சவாலானப் பணி. இந்த பணியில் எப்போதும் தொய்வு ஏற்படக் கூடாது. காரணம் மக்கள் புழங்கும் பெரும்பாலான இடங்கள் இவர்கள் இல்லை என்றால் மோசமானதாக மாறிவிடும். இதனால் இந்த வேலைக்கு உலக நாடுகளில் நல்ல டிமாண்ட் உள்ளது. வருடம் 66,000 அமெரிக்க டாலர் முதல் இந்த வேலைக்கு ஊதியம் பெறலாம். இந்திய மதிப்பில் இது ரூ.54 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
எம்பால்மர் : இறந்தவர்களின் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்துவிட்டு, நரம்புகள் வழியாக ஒருவித திரவத்தை செலுத்தி உடலை தயார் செய்ய வேண்டும். இந்த வேலையை மேற்கொள்பவர் எம்பால்மர் என்று அறியப்படுகிறார். பலரும் விரும்பாத இந்த தொழிலுக்கு 78,000 டாலர்கள் வரை ஊதியம் உள்ளது. இந்திய மதிப்பில் இது 63 லட்ச ரூபாயாகும்.
குற்ற இடங்களை சுத்தம் செய்தல் : குற்றம் நடந்த இடங்களை காவல்துறை ஆய்வு செய்த பிறகு, அந்த இடத்தை சுத்தம் செய்வதற்காகவே சிலர் பணிக்கப்படுவர். அவர்களுக்கும் உலகளவில் நல்ல சம்பளம் உள்ளது. அதாவது 72,000 டாலர்களுக்கு மேல் இவர்கள் சம்பளம் பெறுகிறார்கள் என்கிறது தரவுகள். இது இந்திய ரூபாய் மதிப்பில் 60 லட்சமாக உள்ளது.
காளையின் விந்தை சேகரிப்பவர் : காளைகளின் இனச்சேர்க்கைக்காக விந்துகளை சேகரிக்கும் நபருக்கு 44,000 அமெரிக்க டாலர்கள் முதல் சம்பளம் தொடங்குகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.35 லட்சமாகும்