அமீரகத்தில் கடும் வெப்பம் ,.தொழிலாளர்களுக்கு விசேட சலுகை
02 Jun,2024
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) வெளியிட்டுள்ள உத்தரவின்படி தொழிலாளர்களுக்கு கட்டாய மதிய நேர இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வது மதியம் 12:30 முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படாது எனவும் குறித்த நடைமுறையானது ஜூன் 15 ஆம் திகதி முதல் செப்டம்பர் 15 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், கோடை வெப்ப அபாயங்களிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, அதன் ஒருங்கிணைந்த தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, தொடர்ந்து 20வது ஆண்டாக மதிய இடைவேளையை நடைமுறைப்படுத்தியுள்ளது.
மேலும், இடைவேளையின்போது ஊழியர்களுக்கு நிழலான பகுதி வழங்கப்பட வேண்டும் மற்றும் தினசரி வேலை நேரம் காலை, மாலை அல்லது இரண்டு வேலை நேரங்களும் எட்டு மணிநேரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
எட்டு மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படும்.விதிகளை மீறும் முதலாளிகள் ஒரு தொழிலாளிக்கு திர்ஹாம் 5,000 அபராதம், அதிகபட்சமாக 50,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிய இடைவேளைக் கொள்கையில் ஏதேனும் மீறல்கள் இருந்தால், 600 590 000 என்ற எண்ணில் அதன் அழைப்பு மையம் மூலம் முறைப்பாடு அளிக்குமாறு அமைச்சகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.